பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
தன்னுடைய முயற்சியால் வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே.
இந்த மாதம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும்.
கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.
தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.
பெண்களுக்கு காரியங்களில் இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்
கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சியப் போக்கை கைவிடுவது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர்.
அஸ்வினி:
இந்த மாதம் குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
பரணி:
இந்த மாதம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் வீண் செலவுகள் உண்டாகும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.
பரிகாரம்: துர்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். காரியத் தடை அகலும்.
அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10
----------------------------------------
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
சுபச்செலவுகளைச் சந்திக்கப் போகும் ரிஷப ராசி அன்பர்களே.
இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும்.
குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வெளித்தொடர்புகளில் எச்சரிக்கை தேவை.
தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளில் சாதகமான நிலையே உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.
பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்
கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நன்மை தரும்.
அரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
ரோகிணி:
இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும். தெளிவான மனநிலை இருக்கும். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும்.
பரிகாரம்: ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்குவதால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், புதன்
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12,
------------------------------------------
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
நிதானமாக அனைவரிடமும் பேசும் மிதுன ராசி அன்பர்களே.
இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மனக் குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும்போது நிதானம் தேவை.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும்போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது.
உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.
தொழில், வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரலாம். சக ஊழியர்களிடம் உங்கள் மதிப்பு மரியாதை உயரும்.
பெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சினைகளைக் கண்டால் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது
மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்
கலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்சினை தீரும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.
அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம்.
திருவாதிரை:
இந்த மாதம் பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாகப் பேசுவது நல்லது. அவர்களிடம் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.
பரிகாரம்: புதன் கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும்.
அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
------------------------------------------
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
எந்த கடினமான சூழ்நிலையிலும் சாமர்த்தியமான செயலைச் செய்யும் கடக ராசி அன்பர்களே.
இந்த மாதம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.
குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.
பெண்களுக்கு சாதுர்யமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரியத் தடைகள் நீங்கும். உங்களது பேச்சிற்கு வீட்டில் மரியாதை கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டிகளில் பரிசுகளை அள்ளுவீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும்போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.
அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
பூசம்:
இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும்.
ஆயில்யம்:
இந்த மாதம் மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள்.
பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களைப் போக்கும்.
அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16
------------------------------------------
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
தன்னுடைய அயராத உழைப்பால் உயர்வு கிடைக்கப் பெறும் சிம்ம ராசி அன்பர்களே.
இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். தாயார் வழி உறவினர்களிடம் உறவு நல்ல நிலையில் நீடிக்கும்.
தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும் திறமையாக செய்து முடிப்பீர்கள்.
பெண்களுக்கு எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி இந்த மாதம் அமையும். திட்டமிட்டபடி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நீண்டநாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.
அரசியல் துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.
மகம்:
இந்த மாதம் கணவர் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
பூரம்:
இந்த மாதம் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.
உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். மனத்துணிச்சல் உண்டாகும். அதனால் எதைப் பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18
------------------------------------------
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தனது ஒழுங்கால் வெற்றியடையும் கன்னி ராசி அன்பர்களே.
இந்த மாதம் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும்.
வீடு மனை வாகனம் ஆகியவற்றில் இருந்து வந்த இழுபறி நீங்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள். வெளிநாடு பயணம் செல்ல நேரிடலாம்.
குடும்பத்தினரின் ஆரோக்கியக் குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாகப் பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை சில்லறைச் சண்டைகள் அக்கம்பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.
உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். தாயார் வழியில் அனுகூலம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கல்வியில் வெற்றி பெறத் தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
கலைத்துறையினருக்கு இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும்.
அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதேநேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம்.
அஸ்தம்:
இந்த மாதம் குடும்பத்தில் சுகமும் நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையைக் கண்டு அவர்களை பாராட்டுவீர்கள்.
சித்திரை 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும்போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.
பரிகாரம்: புதன்கிழமைதோறும் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 27, 28,
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21
------------------------------------------
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago