இந்த வாரம் இப்படித்தான்; வார நட்சத்திரப் பலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை)      - மூலம், பூராடம், உத்திராடம் -  ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

By செய்திப்பிரிவு


இந்த வாரம் இப்படித்தான்; வார நட்சத்திரப் பலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை)
- மூலம், பூராடம், உத்திராடம்

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம்-
நற்பலன்கள் நடக்கும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணங்கள் செயல்வடிவம் ஆகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.


தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பெண்களின் திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.


வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
நன்மைகள் அதிகளவில் நடக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உறுதியாகும். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முக்கிய கடன் தீரும்.

செவ்வாய்-
வாகன பழுது தொடர்பான செலவுகள் ஏற்படும். வீட்டு பராமரிப்பு செலவுகளும் உண்டு. உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். நண்பர்களால் அவதிக்கு ஆளாக வேண்டிவரும்.

புதன்-
தொலைதூர பயணம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழிலுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.

வியாழன்-
பரபரப்பான நாளாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே செய்து முடிப்பீர்கள். மன சஞ்சலத்திற்கு ஆளாவீர்கள்.

வெள்ளி-
எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். பண வரவு தாராளமாக இருக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் தொடர்பான சுபகாரிய விஷயங்கள் சாதகமாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

சனி-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பான சிக்கல்கள் தீரும். வியாபார பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும்.

ஞாயிறு-
பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். வீண் விரயங்கள் ஏற்படும். மருத்துவ செலவும் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சை குறைக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
நவகிரகத்தில் இருக்கும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். கோயில்களில் விளக்கேற்ற நல்லெண்ணெய் தானம் தருவதும் நன்மைகளை அதிகப்படுத்தி தரும்.
*************************************************************


பூராடம்-


எதிர்பார்த்த உதவிகளும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். இதுவரை தொழில் தொடங்கும் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இப்பொழுது சொந்த தொழில் தொடங்கும் ஆர்வம் ஏற்படும்.


இந்த வாரம் அதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள்.தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பங்கு வர்த்தகம் ஏற்றம் தருவதாகவும், லாபகரமாகவும் இருக்கும்.


ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். பெண்களுக்கு சொத்து சேர்க்கை, ஆடை ஆபரணச் சேர்க்கை போன்றவை ஏற்படும்.


திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக நேரத்தையும் பணத்தையும் செலவிடுவீர்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். எதிர்பாராத ஒரு சில செலவுகள் ஏற்படலாம் முக்கியமான சந்திப்புகள் தள்ளிப்போகும். பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம்.

செவ்வாய்-
புதிய உற்சாகம் பிறக்கும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் உறுதியாகும். வெளிநாட்டில் வேலை உறுதியான தகவல் கிடைக்கும். வங்கிக்கடன் கிடைக்கும். பணவரவு உண்டு, வியாபாரத்தில் நீண்ட நாட்களாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும்.

புதன்-
பொறுமை அவசியம். நிதானமாக எதையும் திட்டமிடுங்கள். கோப்புகளில் கையெழுத்திடுமுன் கவனமாக படித்து பாருங்கள். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். குடும்பத்தார் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். எவரையும் அலட்சியப்படுத்த. வேண்டாம்.

வியாழன்-
அயல்நாடுகளில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும் அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கப்பெறுவீர்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடைந்து, நிச்சயதார்த்த நாள் மற்றும் திருமண தேதியும் முடிவாகும்.

வெள்ளி-
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் விரைவாக செய்து முடிப்பீர்கள். கலை துறை சார்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பார்கள்.

சனி-
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலர் பழைய ஆபரணங்களை விற்று புதிய ஆபரணங்கள் வாங்குவார்கள். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

ஞாயிறு-
வியாபார பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வரவேண்டிய பணம் வசூலாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தம் நிறைவேறும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குழந்தை பாக்கியம் தொடர்பான செய்தி உறுதியாகும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
திருக்கடையூர் அபிராமி அன்னையை மனதில் நிறுத்தி வணங்குங்கள். அபிராமி அந்தாதியை படித்து வாருங்கள். நன்மைகள் பெருகும். தேவைகள் நிறைவேறும்.
******************************************************************


உத்திராடம்-


மனதை வாட்டி வந்த மன அழுத்தம் அகலும். மனநிம்மதி ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு சரளமாக இருக்கும்.


அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் முற்றிலுமாக விலகும். வேலையில் இருந்த கவனக்குறைவு இனி இருக்காது. தொழிலில் இருந்த நெருக்கடிகள் அனைத்தும் காணாமல் போகும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும். இனி தேக்கநிலை என்பதே இருக்காது.


மாணவர்களின் கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டாகும். கல்வியில் ஆர்வம் பிறக்கும். கல்வியில் இருந்த மந்த நிலை முற்றிலுமாக மாறும். பெண்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.


கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த ஒப்பந்தங்கள் இப்போது கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். சொத்து தொடர்பான ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். அலுவலகத்தில் எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு சரளமாக இருக்கும்.

செவ்வாய்-
வியாபார ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும் கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசி முடிக்கப்படும் வங்கி தொடர்பான கடனுதவி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

புதன்-
அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் இருமடங்காக இருக்கும் எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது.

வியாழன்-
தாமதமான வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தை தரும்.

வெள்ளி-
அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்களால் உதவிகள் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபாரம் சாதகமாக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

சனி-
தொழில் வளர்ச்சி சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். எழுத்தாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பாக வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.

ஞாயிறு-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகள் நடக்கும். சந்திப்புகளால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாகப் பேசித் தீர்க்கப்படும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். வேண்டியது கிடைக்கும். சுப விசேஷங்கள் சுபமாக முடியும்.
******************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்