இந்த வாரம் இப்படித்தான்; வார நட்சத்திரப் பலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை)      - விசாகம், அனுஷம், கேட்டை - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

By செய்திப்பிரிவு


இந்த வாரம் இப்படித்தான்; வார நட்சத்திரப் பலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை)
- விசாகம், அனுஷம், கேட்டை

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

விசாகம்-
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் உண்டாகும். ரியல்எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.


பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மிக முக்கியமாக உணவு விஷயத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள். அடுத்த ஆண்டு கல்விக்காக இப்போதே தங்களை தயார் செய்து கொள்வார்கள்.


கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்,ஒப்பந்தங்கள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் முழு அளவில் சாதகமாக இருக்கும்.தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். செலவுகள் இருமடங்காக இருக்கும். நெருங்கிய ஒருவருக்காக உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகன பராமரிப்பு அல்லது வீட்டு பராமரிப்பு செலவுகள் ஏற்படும்.

புதன் -
தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். லாபம் இரு மடங்காக இருக்கும்.எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

வியாழன்-
தேவையில்லாத பிரச்சினைகள் தேடி வரும். எதிலும் தலையிட வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் கருத்து கூற வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களைப் பற்றி குறை கூறி பேச வேண்டாம். பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம்.

வெள்ளி-
வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். செய்தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பெண்களுக்கு ஆபரணச் சேர்க்கை ஏற்படும். உங்களுடைய சேமிப்பில் இருந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

சனி-
வெளிநாடுகளில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார நிமித்தமாக ஏற்படும் சந்திப்புகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சுபகாரிய செலவுகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவீர்கள்.

ஞாயிறு-
நெடுநாளாக பேசி வைத்திருந்த ஒரு வியாபாரம் திடீரென இன்று வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகளும், எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்.சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவாகும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள்.ஸ்ரீராமஜெயம் எழுதி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும், தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நடக்கும்.
******************************************************

அனுஷம்-
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றம் விரும்பியவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.


சுயதொழிலில் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் தொடங்கவும், புதிய நிறுவனங்களின் வியாபார ஒப்பந்தமும் ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும்.


பெண்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் ஏற்படும். தங்கள் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கும் முயற்சி வெற்றியாகும்.

இந்த வாரம் -

திங்கள் -
எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையாக கையாளவேண்டும். நிதானத்தை இழக்கக்கூடாது. சாலை போக்குவரத்தில் அதிக கவனம் தேவை.சகோதரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்.

செவ்வாய் -
வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வங்கியில் வீட்டுக் கடன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்கும் முயற்சிக்கு சாதகமான தகவல் கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும். பெண்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவர்.

புதன் -
சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். ஆனால் ஆதாயம் குறைவாகவே இருக்கும். பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போகும். ஒப்பந்தங்களை பெறுவதில் ஒரு சில திருத்தங்கள் ஏற்படும். அலுவலகத்தில் செய்த வேலையை மீண்டும் செய்ய வேண்டியது வரும்.

வியாழன் -
தாமதமாகிக் கொண்டிருந்த அனைத்து வேலைகளும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும்.


வெள்ளி-
குடும்பத்தினருக்காகவும் நண்பர்களுக்காகவும் செலவு செய்ய வேண்டியது வரும். அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு உண்டாகும். சிறிய அளவிலான மருத்துவ செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் நெருக்கடியான நிலை ஏற்படும்.

சனி-
வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். எதிர் பார்த்த பணம் கிடைக்கும். ஆதாயம் தரும் ஒப்பந்தம் ஒன்று நிறைவேறும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு-
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் பேசி தீர்க்கப்படும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
தட்சிணாமூர்த்தி குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள், நெய்தீபம் ஏற்றுங்கள், நன்மைகள் அதிகமாகும். பிரச்சினைகள் தீரும்.
***************************************************


கேட்டை-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள்.


வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும் புதிய கிளைகள் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பங்கு வர்த்தகத் துறை வளர்ச்சி தருவதாக இருக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஆதாயம் அபரிமிதமாக இருக்கும்.


பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும்.சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக முடியும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.


திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். அலைச்சல் அதிகரிக்கும் உடல் சோர்வு ஏற்படும். மனதளவில் சற்று தளர்வு ஏற்படும். எடுத்துக்கொண்ட வேலைகள் கடும் சிரமத்திற்கு இடையே செய்ய வேண்டியதிருக்கும். போக்குவரத்தில் கவனம் வேண்டும்.

செவ்வாய் -
சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். சொத்து விற்பது வாங்குவது போன்றவை மன நிறைவைத் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.குழந்தைகளின் கல்வி வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.

புதன்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.ஆதாயம் பெருக்கும் வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். ஒப்பந்தங்கள் மனநிறைவைத் தருவதாக இருக்கும் தேவையான உதவிகள் தொழிலுக்கு கிடைக்கும்.

வியாழன்-
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையை பார்க்க வேண்டியது வரும். கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுவதால் அதிகம் உழைக்க வேண்டியது வரும். நண்பரின் வேலைக்காக பரிந்துரை செய்வீர்கள். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

வெள்ளி-
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்பொழுது வசூலாகும். திருமண முயற்சிகள் முடிவாகும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான வாய்ப்பு ஏற்படும்.

சனி
அலைச்சல் அதிகமாக ஏற்படும். அலுவலகத்தில் உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி கேட்டு தொல்லை தருவார்கள். சிறிய அளவிலான கடன் பிரச்சினை ஒன்று தொல்லை தருவதாக இருக்கும்.


ஞாயிறு -
தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் சாதகமாக இருக்கும். சக தொழிலதிபரின் சந்திப்பால் உதவிகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
கருமாரியம்மனை வணங்குங்கள். அன்னைக்கு அபிஷேக ஆராதனை பொருட்களை வாங்கித் தாருங்கள். நன்மைகள் அதிகமாகும். பிரச்சினைகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும்.
****************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்