இந்த வாரம் இப்படித்தான்; வார நட்சத்திரப் பலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை)      - அஸ்தம், சித்திரை, சுவாதி - - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

By செய்திப்பிரிவு


இந்த வாரம் இப்படித்தான்; வார நட்சத்திரப் பலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை)
- அஸ்தம், சித்திரை, சுவாதி

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்தம்-
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடக்கும். பணியிடத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.


பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் உண்டாகும். ரியல்எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.சகோதர வழியில் இருந்த வருத்தங்கள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.


உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள், அடுத்த ஆண்டு கல்விக்காக இப்போதே தங்களை தயார் செய்து கொள்வார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும், அயல்நாடு செல்லும் யோகமும் உண்டு.

இந்த வாரம் -

திங்கள் -
வேலை சம்பந்தமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கிறது. குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள்.

செவ்வாய் -
வருமானம் இருமடங்காகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியை தரும். முயற்சி எடுக்காத விஷயங்கள் கூட இப்பொழுது தானாக முடியும். நீண்ட நாளாக பேசி வந்த ஒரு பிரச்சனை இன்று பேசி முடிவு எடுக்கப்படும்.

புதன் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையில்லாத விஷயத்திற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டியது வரும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

வியாழன் -
சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறும். நல்ல வீடு அமையும்.எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் சுப விசேஷங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

வெள்ளி -
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஒரு சில வேலைகளை செய்து கொடுப்பீர்கள். தர்ம காரியம் செய்வீர்கள். ஆலய வழிபாடு ஏற்படும்.

சனி-
ஒரு சில ஒப்பந்தங்கள் கிடைக்கும், தன வரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பெரிய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள்.

ஞாயிறு -
அலைச்சல்கள் அதிகமாகும். ஒருசில ஏமாற்றங்களையும் சந்திக்க வேண்டியது வரும். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். ஒப்பந்தங்கள் எதுவும் போட வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்யுங்கள். லக்ஷ்மி சகஸ்ரநாமத்தை படியுங்கள். நன்மைகளை ஏற்படுத்தித் தரும். உயர்வான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
********************************************************************


சித்திரை-
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சி சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.


உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும்.


இதுவரை தொழில் செய்யாமல் இருந்தவர்கள் கூட இந்த வாரம் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கி, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும்.


குழந்தைகளைப் பற்றிய கவலை நீங்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் ஏதேனும் வழக்கு நடந்து கொண்டிருந்தால் வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.


திரைத்துறை கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இசைத்துறை கலைஞர்களுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

இந்த வாரம் -

திங்கள் -
பயணங்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சில நல்ல முடிவுகளை எடுத்து அதை செயல்படுத்துவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

செவ்வாய் -
திட்டமிட்ட காரியங்களும் திட்டமிடாத காரியங்களும் இன்று வெற்றிகரமாக முடியும். ஆதாயம் பெருகும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

புதன் -
எடுத்துக் கொண்ட அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

வியாழன் -
செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டு பராமரிப்புச் செலவுகள், வாகனப் பராமரிப்புச் செலவுகள் என செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. சந்திக்க வேண்டிய நபரை குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க முடியாமல் தள்ளிப் போகலாம்.

வெள்ளி-
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். லாபம் இரட்டிப்பாக இருக்கும்.தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.எதிர்ப்புக் காட்டிய நபர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள்.

சனி-
குடும்பத்தினருக்காகவும் நண்பர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு உண்டாகும்.எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

ஞாயிறு -
வியாபாரம் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். எதிர் பார்த்த பணம் கிடைக்கும். ஆதாயம் தரும் ஒப்பந்தம் ஒன்று நிறைவேறும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஐயப்பனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். நெய்யபிஷேகம் செய்யுங்கள். நன்மைகள் பெருகும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
***********************************************************

சுவாதி -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. ஒருசிலர் பணிசெய்த நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு மாறுவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு அதிகம்.


தொழிலில் எதிர்பாராத அளவுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறை சீராக இருக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.


பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சகோதரர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.


இயல்பான சொத்து சேர்க்கை ஏற்படும். தந்தைவழி சொத்துகள் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் லாபம் உண்டு. எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

செவ்வாய் -
சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு வந்து தீர்வு ஏற்படும். பண வரவு உண்டு. வேலையில் பணிச்சுமை குறைந்து நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும்.

புதன் -
வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்பொழுது வசூலாகும். திருமண முயற்சிகள் முடிவாகும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான வாய்ப்பு ஏற்படும்.

வெள்ளி -
அதிக நன்மைகள் நடைபெறும்.சுப காரிய பேச்சுக்கள் மனதிற்கு நிறைவைத்தரும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி திருப்தியாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும்.

சனி-
தொழில் தொடர்பான ஒரு சில பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். ஆதாயம் ஏற்படும் ஒரு வியாபார ஒப்பந்தம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.சிறு தூரப் பயணங்கள் ஏற்படும்.

ஞாயிறு -
நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு ஒரு உதவி செய்து கொடுப்பீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.வாகனம் மாற்றும் சிந்தனை உண்டாகும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யுங்கள். சிவ புராணம் வாசியுங்கள். எதிர்பாராத அளவுக்கு நன்மைகள் நடக்கும்.
***********************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்