இந்த வாரம் இப்படித்தான்; வார நட்சத்திரப் பலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை)      - புனர்பூசம், பூசம், ஆயில்யம், - 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

By செய்திப்பிரிவு


இந்த வாரம் இப்படித்தான்; வார நட்சத்திரப் பலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை)
- புனர்பூசம், பூசம், ஆயில்யம்

- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


புனர்பூசம்-
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாரமாக இருக்கும்.


வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சியைக் காண்பார்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் இருமடங்காக இருக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் தீரும். நல்ல வேலை கிடைக்கும்.


மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். அயல்நாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வேலையில் இடமாற்றம் எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் லாபம் இருக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட மன வருத்தம் தீரும். வெளிநாடு செல்லும் முயற்சி முன்னேற்றம் தருவதாக இருக்கும்.

செவ்வாய் -
அவசரம் வேண்டாம். பதட்டத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். அமைதியாக இருப்பது நல்லது. பயணங்கள் வேண்டாம்.

புதன் -
எதிர்பார்த்த அனைத்தும் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களின் கல்வியில் அக்கறை ஏற்படும்.

வியாழன் -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக முடிக்காமல் இருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக முக்கிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

வெள்ளி -
நல்லநல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நாள். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். வியாபார விஷயங்கள் ஒப்பந்தங்களாக மாறும். குடும்பத்தில் சுபவிசேஷ பேச்சுவார்த்தைகள் நடக்கும்.பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

சனி-
பொறுமையும் நிதானமும் அவசியம். அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது. சக ஊழியர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் என அனைவரிடமும் கவனமாகப் பேச வேண்டும். அலட்சியமாகப் பேசி அடுத்தவரின் வருத்தத்துக்கு ஆளாக வேண்டாம்.

ஞாயிறு -
எதிர்பாராத அளவுக்கு நன்மைகள் நடைபெறும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
அனுமன் வழிபாடு செய்யுங்கள்.வெண்ணெய் சாற்றுங்கள். நன்மைகள் அதிகமாகும். எதிர்ப்புகள் விலகும். நினைத்தது நிறைவேறும்.
**************************************************************

பூசம்-
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.


வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பெண்களுக்கு மனம் மகிழும்படியாக ம்பவங்கள் நடக்கும்.


திருமணம் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குழந்தையில்லாத பெண்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகமும் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
நிதானமாக செயல்படவேண்டும்.பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களுடனும் உயரதிகாரிகளிடமும் வாக்குவாதம், பிடிவாதம் பிடிக்க வேண்டாம். பொறுமை மிகமிக அவசியம்.

செவ்வாய் -
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். அதிக நன்மைகள் நடைபெறும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வேலையில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

புதன் -
நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடுகளில் வேலை தேடும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும்.

வியாழன் -
அதிக நன்மைகள் நடக்கும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரங்களில் லாபம் இருமடங்காக ஏற்படும். எதிர் பார்த்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
தொழில் தொடர்பான முடிவுகள் எடுக்கவேண்டாம். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும். பணியிடத்தில் அழுத்தம் அதிகரிக்கும்.

சனி-
எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வருமானம் இருமடங்காக இருக்கும். வியாபார வளர்ச்சி அபாரமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றத்தை தரும்.எதிர்பார்த்துக் கொண்டிருந்த முக்கிய தகவல் இன்று கிடைக்கும்.

ஞாயிறு -
வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று திரும்ப கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்யுங்கள். செவ்வரளி மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
**************************************************************

ஆயில்யம்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.

தொழில் தொடர்பான உதவிகள் தானாக தேடி வரும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சகோதரர்கள் உதவி கிடைக்கும். அவர்களிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அதிக முயற்சி எடுத்து அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது வரும். அலுவலகத்தில் செய்த வேலைகளில் திருத்தம் செய்ய வேண்டியது வரும். வீண் அலைச்சல் ஏற்படும். ஒருசில ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியது வரும்.

செவ்வாய் -
கடினமான முயற்சிகளும் இன்று எளிதாக முடியும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.தொழில் தொடர்பாக புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும்.


புதன் -
வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நீண்டநாளாக முடியாமல் இருந்த வேலையை இன்று எளிதாக செய்து முடிப்பீர்கள்.

வியாழன்-
வேண்டிய உதவிகள் தேடிவரும். பண வரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை தொடர்பான தகவல் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாகும்.

வெள்ளி-
புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தொழிலில் புதிய முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். சுப விஷேசங்கள் முடிவாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

சனி-
ஆலய வழிபாடு செய்யுங்கள், அக்கம்பக்கத்தினருடன் இணக்கமாக இருங்கள். வீண் விவாதங்கள் வேண்டாம். வீண் செலவுகளை செய்ய வேண்டாம். தர்ம காரிய பணிகளில் ஈடுபடுங்கள்.

ஞாயிறு -
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் மன நிறைவைத் தரும்.எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடியும் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும் கடன் பிரச்சனைகள் தீர்வதற்கு வழி கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
திருமலை திருப்பதி வேங்கடவனை தரிசனம் செய்யுங்கள், தடைகள் அகலும், நன்மைகள் அதிகமாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

*********************************************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்