இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது பொறுப்புகள் ஏற்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

ரிஷபம்: கடந்தகால இனிய சம்பவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும்.

மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

கடகம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள்.

தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவிவழியில் அந்தஸ்து உயரும். மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வரும்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

கும்பம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியில் பேசுவதை தவிர்த்து விடுங்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்