இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் சுபச் செலவுகள் அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். ஆனால் பேச்சில் நிதானம் அவசியம்.

ரிஷபம்: உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை, நல்ல மனதை புரிந்து கொள்வார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். சகோதரி உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்.

சிம்மம்: விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து போகும். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். அவசரப்படாமல் கொஞ்சம் நிதானமுடன் செயல்படுங்கள்.

கன்னி: மனோபலம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அடகு வைத்திருந்த நகை, சொத்துகளை மீட்பீர்கள்.

துலாம்: பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்தர் சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். வீண் விவாதங்களில் தலையிட வேண்டாம்.

விருச்சிகம்: வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு: பிள்ளைகள் கேட்டதை உடனுக்குடன் வாங்கித் தருவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

மகரம்: தாயாரின் உடல்நலம் சீராகும். வீடு கட்ட அரசு அனுமதி கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை புரிந்து கொண்டு வலிய வந்து உதவுவார்கள். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.

மீனம்: யாரையும் அநாவசியமாக பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் சந்தேகம், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்