மேஷம்: அலைச்சல் இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்கள் நீண்ட இழுபறிக்குப் பின்னர் முடியும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.
ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்களை வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப்படும்.
மிதுனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைபடி சொத்துப் பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
கடகம்: தடைபட்டிருந்த சில காரியங்கள் முழுமையடையும். விஐபிகளின் ஆதரவு கிட்டும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.
சிம்மம்: வீண் அலைச்சல், பண தட்டுப்பாடு வரக்கூடும். அரசு காரியங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். எதிர்பாராத மருத்துவச் செலவுகள், வீண்பழிகள் வந்து நீங்கும்.
கன்னி: பால்ய நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளுக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கித் தருவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
துலாம்: பிரபலங்களின் நட்பு கிட்டும். சகோதர, சகோதரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த இடத்தில் இருந்து உதவிகள், ஆலோசனைகள் கிடைக்கும். வீண் குழப்பங்கள் நீங்கும். விஐபிக்கு நெருக்கமாவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
தனுசு: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். நீண்ட நாட்களாக விலகியிருந்த சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள்.
மகரம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதரருடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
கும்பம்: புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். நட்பு வட்டாரம் விரியும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள்.
மீனம்: எந்தக் காரியத்தையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லுங்கள். அடுத்தவர் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். வீிண் விவாதங்களைத் தவிர்த்து விடுங்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago