இந்த வார நட்சத்திர பலன்கள் (ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை) பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

By செய்திப்பிரிவு

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


பூரட்டாதி -
அதிக அளவிலான நன்மைகள் ஏற்படும் வாரம். எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.


தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டு லாபம் பெருகும். அயல்நாட்டில் இருந்து முதலீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.பங்கு வர்த்தகத் துறையில் நல்ல ஏற்றம் ஏற்படும். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு அதிக அளவிலான வியாபாரங்கள் ஏற்படும்.


பெண்கள் தங்கள் குடும்பத்தில் மன மகிழ்ச்சி ஏற்படும்படியான சம்பவங்கள் நடக்கும்.திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.கலைஞர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
திட்டமிட்ட காரியங்கள் மட்டுமல்லாமல், திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணம் பைகளை நிரப்பும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

செவ்வாய் -
சிறு தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். பயணங்களால் ஒரளவுக்கு ஆதாயம் கிடைக்கும் வீட்டுக்குத் தேவையான முக்கியமான செலவுகளை செய்ய வேண்டியது வரும்.

புதன் -
நீங்கள் மனதில் நினைத்த அனைத்து விஷயங்களும் இன்று செயல்வடிவம் பெறும். வியாபார விஷயங்கள் ஆதாயத்துடன் நிறைவேறும். அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும்.

வியாழன் -
வாகனச் செலவுகள் வீட்டு பராமரிப்பு செலவுகள் என செலவுகள் அதிகமாக இருக்கும். அலைச்சல் ஏற்படும். முக்கிய சந்திப்புகள் தள்ளிப் போகலாம்.

வெள்ளி -
சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வழக்குகள் சாதகமாகும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும்.எதிர்பார்த்த தகவல் தாமதமாகும். கடன் சம்பந்தப்பட்ட விஷயம் பேசி முடிப்பீர்கள்.வியாபார பேச்சுவார்த்தைகள் இழுபறியாக இருக்கும்.

ஞாயிறு -
ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்று பேசி முடிப்பீர்கள். லாபம் இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் மனநிறைவைத் தரும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
பசு மடத்தில் பசுக்களுக்கு உணவளியுங்கள், மனதில் திருப்தி உணர்வு உண்டாகும். சிந்தனை சிறப்பாக இருக்கும். பணவரவு மனநிறைவைத் தரும்.
*******************************************


உத்திரட்டாதி-
வாரத்தின் பெரும்பாலான நாட்கள் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு வேலைக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறலாம். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு அதிக ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும். எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் அகன்று ஆதாயம் பெருகும்.
கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டு மன மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். சகோதரர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான தகவல் இன்று கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

செவ்வாய் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

புதன் -
உத்தியோகம் தொடர்பாக வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.செலவுகள் அதிகமாக இருந்தாலும் மனநிறைவு இருக்கும்.

வியாழன் -
ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். அதில் ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.

வெள்ளி -
உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.மற்றவர்கள் விஷயங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம். அது உங்களுக்கு எதிராகத் திரும்பும்.

சனி-
நீண்ட நாளாக இழுபறியாக இருந்த பேச்சுவார்த்தை இன்று சுமூகமான முடிவுக்கு வரும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். கடன் தொடர்பான ஒரு முக்கிய பிரச்சினை முடிவுக்கு வரும்.

ஞாயிறு -
தொலைதூரப் பயணங்கள் செய்ய வேண்டாம். பேச்சு வார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். ஒப்பந்தங்கள் போடுவதை தவிர்க்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அமைதியாக இருப்பது நல்லது.

வணங்கவேண்டிய தெய்வம் -
குச்சனூர் சனி பகவானை வழிபாடு செய்யுங்கள். ஒருமுறை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். எதிர்ப்புகள் அகலும். தேவைகள் பூர்த்தியாகும்.
******************************************************************

ரேவதி-


எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியை தரும். வெளிநாடு சென்று வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த வாரம் அதற்கான நல்ல தகவல் கிடைக்கும்.


பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், புதிய பாடங்களை கற்றுக் கொள்ளுதல் அல்லது புதிய மொழி கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டு அதற்கான பயிற்சி வகுப்புகளில் சேர்வார்கள்.


சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமாக மாறும். தாயாரின் ஆரோக்கியத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்துங்கள்.


கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பெரிய நிறுவனங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவீர்கள். இசைத்துறை மற்றும் நாட்டிய கலைஞர்கள் அயல்நாடு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
வெளிநாடு தொடர்புடைய விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புதிதாக ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

செவ்வாய் -
பெரிய அளவிலான வியாபாரங்கள் பேசி முடிப்பீர்கள். லாபம் தரும் வியாபாரம் ஒன்று எளிதாக முடியும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உண்டாகும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று கிடைக்கும்.

புதன் -
மனமகிழ்ச்சி தரும்படியான செய்திகள் கிடைக்கும்.சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள ஒரு நபரை சந்திப்பதால் ஆதாயம் கிடைக்கும். புதிய வியாபார பேச்சுவார்த்தைகள் தொடங்குவீர்கள்.தொழில் தொடர்பான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும்.

வியாழன் -
செலவுகள் அதிகமாக ஏற்படும். ஆனால், அந்த செலவுகள் அனைத்தும் ஆதாயத்திற்காக ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டு.

வெள்ளி -
வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். பத்திரப் பதிவுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகன்று ஒற்றுமை ஏற்படும்.

சனி-
கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடுதலாக இருக்கும். எதிர்பார்த்த ஒரு சில ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய ஒரு நபரை இன்று சந்திப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் முழுமையடையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடிவடையும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் இன்று ஆரம்பமாகும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீதுர்கை அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
******************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்