இந்த வார நட்சத்திர பலன்கள் (ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை)  மூலம், பூராடம், உத்திராடம்

By செய்திப்பிரிவு

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மூலம் -
உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் மெல்ல மெல்ல விலகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும்.


பங்கு வர்த்தகத் துறையில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அளவுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களின் ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும். மருத்துவச் செலவுகள் குறையும்.


குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கலைஞர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அயல்நாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பாராத அளவுக்கு நன்மைகள் அதிகமாக ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். கூட்டாகத் தொழில் செய்ய பலரும் முன்வருவார்கள்.

செவ்வாய் -
அனாவசிய செலவுகள் ஏற்படும். வீட்டுப் பராமரிப்புச் செலவு முதல் வாகனப் பழுது செலவுகள் வரை ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். பயணங்களை தள்ளி வைக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளை ஒத்தி போடுங்கள்.

புதன் -
வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். பணவரவு தாராளமாக இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் திருப்திகரமாக இருக்கும்.

வியாழன் -
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். தொழில் செய்யுமிடத்தில் இயந்திர பழுதுகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

வெள்ளி -
நேற்றைக்கு முடியாமல் தாமதமான வேலைகள் அனைத்தும் இன்று முடியும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கடன் தொடர்பான விஷயங்கள் சுமுகமாகத் தீரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

சனி-
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். வேலையில் அழுத்தங்கள் கூடும். அடுத்தவர் வேலைகளை நீங்கள் பார்க்க வேண்டியது வரும். செய்து முடித்த வேலைகளில் திருத்தம் செய்ய வேண்டியது இருக்கும்.

ஞாயிறு -
தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபார பேச்சுவார்த்தைகள் முன்னேற்றத்தை தரும். பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாளாக சந்திக்க முடியாமல் இருந்த நபரை இன்று சந்திப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சித்தர் பெருமக்களை வணங்குங்கள். சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வாருங்கள். நன்மைகள் அதிகம் நடைபெறும். தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் மேம்படும்.
******************************************************

பூராடம் -


எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் தாமதப்பட்டுக் கொண்டிருந்த சலுகைகள் கிடைக்கும்.


தொழிலில் எதிர்பாராத லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.


மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்களில் ஒப்பந்தம் ஆவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
நல்லநல்ல பலன்கள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

செவ்வாய்-
உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும்.

புதன்-
தேவைகள் பூர்த்தியாகும், பண வரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். நிலம் பூமி தொடர்பான தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன் -
வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.சுப செலவுகள் உண்டாகும்.

வெள்ளி -
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் செலவு செய்ய வேண்டியது வரும். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் கல்விக்காக அதிக அக்கறை காட்டூவீர்கள்.

சனி-
கடன் தொடர்பான முக்கிய பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாகவே இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் வேண்டிய உதவிகள் கிடைக்கும். லாபம் இருமடங்காக இருக்கக்கூடிய நாள்.

ஞாயிறு -
வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவழியுங்கள்.நண்பர்களால் தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்க வேண்டியது வரும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
பிள்ளையார்பட்டி விநாயகரை வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாக நடைபெறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும்.
******************************************

உத்திராடம் -
நன்மைகள் நடைபெறும் வாரம் . தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியப் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் பெருமளவில் கிடைக்கும்.


புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். மாணவர்கள் கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும்.

செவ்வாய் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் தருவதாக இருக்கும்.

புதன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும். தேவைகள் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தையும் சுமூகமாக இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

வியாழன் -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பயணங்களில் கவனம் தேவை. மின்சாரப் பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.வாகனங்களை கவனமாக கையாளவேண்டும்.

வெள்ளி -
பெருமளவு நன்மைகள் நடைபெறும். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

சனி-
குடும்ப செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையற்ற பொருளை வாங்கி கவலைப்படுவீர்கள். ஒரு புதிய நட்பு கிடைக்கும். நண்பர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

ஞாயிறு -
கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.சகோதர ஒற்றுமை பலப்படும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபடுங்கள்.வெண்ணெய் சாற்றி வழிபடுவதும் சிறப்பு. நன்மைகள் அதிகமாகும். ஆரோக்கியம் மேம்படும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
*******************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்