’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
விசாகம் -
நன்மைகள் அதிகம் நடக்கும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியமும் மேம்படும். வீடு தொடர்பான பிரச்சினைகள் தீரும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் சீரான வளர்ச்சி இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். புதிய ஏஜென்சி பெறுவார்கள்.
பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஒப்பந்தங்களும் ஏற்படும். அயல்நாடு சென்று கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு வேலை நீட்டிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
செவ்வாய் -
அலுவலக விஷயமாகவோ அல்லது வியாபார விஷயமாக பயணங்கள் ஏற்படும். பயணத்தால் ஆதாயம் ஏற்படும். முக்கிய நபர்களை சந்திப்பதால் தொழிலுக்கு முன்னேற்றமான விஷயங்கள் நடக்கும்.
புதன் -
அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
வியாழன் -
எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் மனதுக்கு நிறைவைத் தரும்.
வெள்ளி -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மருத்துவச் செலவும் உண்டு. பராமரிப்புச் செலவுகள் கூடும். வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை.
சனி-
வங்கி தொடர்பான பிரச்சினைகள் தீரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அடகு வைத்த பொருட்களை மீட்க வழி கிடைக்கும்.
ஞாயிறு -
நண்பர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.வியாபார பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போகும். ஒப்பந்தங்கள் போடுவதில் தாமதம் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் படியுங்கள். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும். தடைகள் அகலும். எதிரிகள் விலகிச்செல்வார்கள்.
****************************************************************
அனுஷம்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.
தொழிலில் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். பங்கு வர்த்தகத் துறை இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களுக்கு திருமணம் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
புதிய கல்வி அல்லது மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும். அது தொடர்பான பயிற்சி வகுப்புகளில் சேருவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும். புதிய கிளைகளை ஆரம்பித்தல் போன்ற விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களுக்கு சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும்.
செவ்வாய் -
தேங்கிக்கிடந்த வேலைகள் அனைத்தும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒன்றும் முடிவுக்கு வரும்.
புதன் -
பெருமளவு நன்மைகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும்.வியாபாரத்தில் லாபம் பல மடங்காக இருக்கும். சுப விசேஷ நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடக்கும்.
வியாழன் -
பொறுமை அதிக தன்மை தரும் என்பதை உணருங்கள். நிதானத்தை இழக்க வேண்டாம். செலவுகள் அதிகம் ஆனாலும் பதட்டம் வேண்டாம்.
வெள்ளி -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும்.
சனி-
சேமிப்பில் இருந்து ஒருசிலசெலவுகள் ஏற்படும்.வியாபார பேச்சுவார்த்தைகள் தள்ளிப் போகும்.முக்கிய சந்திப்புகள் தாமதமாகும்.உடல் களைப்பாக இருக்கும்.
ஞாயிறு -
தடைபட்டிருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். அம்மனுக்கு எண்ணெய் காப்பு செய்து வழிபடுங்கள். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*****************************************************
கேட்டை -
முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அபார வளர்ச்சி ஏற்படும்.
வியாபாரிகளுக்கு புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் இருந்த வருத்தங்கள் அகன்று ஒற்றுமை பலப்படும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு. மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் காண்பார்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வீட்டுக்கடன் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். நீண்டநாளாக வராமலிருந்த பணம் திரும்பக் கிடைக்கும்.குடும்ப உறுப்பினருக்கு வேலை தொடர்பான செய்தி கிடைக்கும்.
செவ்வாய் -
உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்துக் கூற வேண்டாம். அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும். அக்கம்பக்கத்தினருடன் வீண் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும்.
புதன் -
வியாபாரம் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் வெற்றியாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் திருப்புமுனை ஏற்படுமளவுக்கு ஒரு மாற்றம் ஏற்படும். நன்மைகள் பலவாறாக நடக்கும்.
வியாழன் -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும்.
வெள்ளி -
புதிதாக தொழில் தொழில் தொடங்குவதற்கான உதவிகள் கிடைக்கும். வியாபார விஷயமாக பயணம் ஏற்படும். அந்தப் பயணத்தில் வெற்றி உண்டாகும்.தாமதமாகிக் கொண்டிருந்த பணவரவு கிடைக்கும்.
சனி-
எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாகும். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.
ஞாயிறு -
அத்தியாவசிய பயணங்கள் தவிர மற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது. செலவுகள் அதிகமாக இருக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
சீனிவாச பெருமாள் ஆலயத்தில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கனவுகள் நனவாகும்.
****************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago