’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
மகம் -
ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முற்றிலுமாக நீங்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இழந்த சொத்துக்களை மீட்க வழி வகை உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் அகன்று எதிர்பாராத வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும்.வியாபார வளர்ச்சி சுறுசுறுப்பாக இருக்கும்.
பெண்களின் கனவுகள் நனவாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் அபரிமிதமான வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும். நல்ல வாய்ப்புகளுக்காக காத்துக்கிடந்த கலைஞர்களுக்கு இப்போது ஓய்வு எடுக்கக் கூட நேரமில்லாத அளவுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
முயற்சியில் ஒரு சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் சாதுரியமாக அனைத்தையும் சமாளிப்பீர்கள். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். புதிய நபர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.
செவ்வாய்-
சிறப்பான பலன்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
புதன்-
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் பன்மடங்காக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் எதிர்பாராத வளர்ச்சி உண்டாகும்.மாணவர்கள் கல்வியில் தொடர்பாக உதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். வேலையில்லாத பெண்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
வியாழன்-
இதுவரை செய்த தவறுகளை எண்ணிப் பார்த்து தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். குடும்பத்தின் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிதாக தொழில் தொடங்கும் சிந்தனை தோன்றும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு தொடர்பான தகவல் கிடைக்கும்.
வெள்ளி-
எதிர்பாராத பணவரவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். இடம் பூமி தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து தேதி குறிக்கப்படும் மருத்துவச் செலவுகள் முற்றிலுமாக முடிவுக்கு வரும்.
சனி-
குலதெய்வ வழிபாடு செய்ய முற்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நீங்களாக முன்வந்து உதவி செய்வீர்கள். முக்கியமான கடன் பிரச்சினை ஒன்றை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள்.
ஞாயிறு-
பால்யகால நண்பர்களால் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். வெளிநாடு தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முக்கியமான தகவல் கிடைக்கும். சிறப்பான பலன்கள் நடைபெறும் நாள்.
வணங்கவேண்டிய தெய்வம்-
சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து நெய் தீபமேற்றி வணங்குங்கள்.
***************************************
பூரம் -
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வாரத்தின் பிற்பகுதியில் பெருவாரியான நன்மைகள் நடக்கும்.
அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் தொடர்பான தடைகள் அனைத்தும் அகலும். தேவையான உதவிகள் கிடைக்கும். அரசு வழிச் சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
பெண்களுக்கு முன்னேற்றத்தை தரக்கூடிய வாரமாக இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் புதிய கிளைகளைத் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.
செவ்வாய்-
அலைச்சல் அதிகமாக ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டியது வரும். எதிலும் கவனமாக இருக்கவேண்டும். எச்சரிக்கை உணர்வு அதிகம் தேவை.
புதன்-
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
வியாழன்-
வெளிநாட்டு தொடர்பு உடைய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சொத்து வாங்குவது விற்பது போன்ற முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
வெள்ளி-
சேமிப்புகள் உயரும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் தொடர்பான வளர்ச்சிகள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.
சனி-
அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். ஆதாயம் தரக்கூடிய வியாபாரம் வெற்றிகரமாக முடியும். கடைகள், சிறு நிறுவனங்கள் போன்ற தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாவதுடன், விற்பனை இரு மடங்காக இருக்கும். லாபம் அதிகரிக்கும்.
ஞாயிறு-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். நண்பர்களுடன் மன வருத்தம் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். சிறிய விஷயமும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும்.
வணங்கவேண்டிய தெய்வம்-
முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து மகிழுங்கள். கந்தசஷ்டி கவசம் படித்து வாருங்கள். நன்மை அதிகரிக்கும். முயற்சிகளில் முழு வெற்றி கிடைக்கும்.
************************************************************
உத்திரம்-
செயல் வேகம் அதிகரிக்கும். ஆனாலும் எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் இழுபறியாகவே முடியும். ஆரோக்கியத்தில் சிறு அச்சுறுத்தல் ஏற்படும். மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. குலதெய்வ வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.
பணியிடத்தில் இயல்பான நிலையே நீடிக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். கலைஞர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு வாய்ப்புகளைப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தாருடன் இணக்கமாக இருக்க வேண்டும். தேவையற்ற சச்சரவு ஏற்பட காரணமாக இருக்க வேண்டாம்.
இந்த வாரம் -
திங்கள்-
மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். தெளிவாக முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். மருத்துவச் செலவு ஏற்படும்.
செவ்வாய்-
பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்துக் கொண்ட வேலைகளை கடைசி நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். அலுவலகத்தில் சகஜமான நிலையே நீடிக்கும்.
புதன்-
அலுவலகத்தில் அடுத்தவர் வேலையை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். தொழில் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகளில் குழப்பம் நீடிக்கும்.
வியாழன்-
பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள்.
வெள்ளி-
வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலைக்கான அழைப்பு கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். குடும்பப் பிரச்சினைகள் சுமூகமாக தீரும். சகோதரர்கள் இணக்கமாக இருப்பார்கள்.
சனி-
எதிர்பார்த்த தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வங்கி பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் உங்களுக்கு சேரவேண்டிய பங்கு கிடைக்கும்.
ஞாயிறு-
வியாபார ஒப்பந்தங்கள் இனிதே நிறைவேறும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தார் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.
வணங்கவேண்டிய தெய்வம்-
மஹாலக்ஷ்மி தாயாருக்கு வெண்தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். தாயாரின் நைவேத்யத்திற்கு பசு நெய் தானம் தாருங்கள்.நன்மைகள் அதிகமாகும். குழப்பங்கள் தீரும். பணவரவு தாராளமாக இருக்கும்.
*******************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago