இந்த வார நட்சத்திர பலன்கள் (ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை)  புனர்பூசம், பூசம், ஆயில்யம்

By செய்திப்பிரிவு

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


புனர்பூசம் -
வாரத்தின் பிற்பகுதி நாட்கள் அதிக நன்மையை ஏற்படுத்தித் தரும். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அலுவலகத்தில் இயல்பான நிலையே நீடிக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.


பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுபவிசேஷ நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. திருமணம் உறுதியாகும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும்.


புதிதாகத் தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு, இப்பொழுது புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சற்று இழுபறியான நிலையே இந்த வாரம் இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
பரபரப்பாக செயல்பட்டு பல வேலைகளை செய்து முடிப்பீர்கள். உணவு உண்ணக் கூட நேரம் இருக்காது. பசி மறந்து செயலாற்ற வேண்டிய அளவுக்கு சூழ்நிலைகள் இருக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல், எதிர்பார்த்தது போலவே கிடைக்கப் பெறுவீர்கள்.

செவ்வாய்-
எதிர்பார்த்த வேலைகளில் பாதி அளவுதான் சாதகமாக இருக்கும். மீதி விஷயங்கள் தள்ளிப்போகும். வீணாக மனதை போட்டு குழப்பிக் கொள்வீர்கள். குழப்பமான மனநிலை இருக்கும்.

புதன்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று நல்ல முடிவிற்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும் வேலை மாற்ற சிந்தனை உண்டாகும். தொழில் தொடர்பாக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
அலுவலகத்தில் சக ஊழியரின் வேலைகளை பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பாக அலைச்சல்கள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் இழுபறியாக இருக்கும்.

வெள்ளி-
புதிதாக தொழில் தொடங்கும் சிந்தனை ஏற்படும். அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். சுபவிசேஷ பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். பத்திரிக்கை மற்றும் எழுத்தாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

சனி-
வீண் அலைச்சல்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பொறுமை மிக மிக அவசியம்.

ஞாயிறு-
தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இடம் பூமி தொடர்பான வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு ஒப்பந்தங்கள் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதரரால் மிகப்பெரிய உதவி கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
சித்தர்கள் வழிபாடு சிறப்பைத் தரும். குறிப்பாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று வாருங்கள். அங்கு தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்துள்ளார். இவரை வணங்குவதால் நெருக்கடிகள் தீரும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
****************************************************************

பூசம் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சரியாக செய்தாலும், ஏதோ ஒரு தடை தாமதம் இருந்துகொண்டே இருந்தது. இனி அந்தத் தடை தாமதங்கள் அனைத்தும் விலகும். நன்மைகள் அதிகமாக நடைபெறத் தொடங்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.


உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும், புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள்.


கலைஞர்களுக்கு பொறுமை, நிதானம், மிக மிக அவசியம். பெண்களுக்கு தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் இனி எந்தத் தடையும் இல்லாமல் நல்ல முடிவுக்கு வரும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும், சுய தொழில் தொடங்கும் முயற்சியில் தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியது வரும்.

இந்த வாரம் -

திங்கள்-
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்குவதற்கான வழிவகை உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலையை அனைத்தும் இனிதே செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். எதிர்ப்புகள் காட்டிக்கொண்டிருந்த அவர்கள் பணிந்து போவார்கள்.

புதன்-
பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். வீண் செலவுகள் ஏற்படும். நண்பர்களுடன் தேவையில்லாத விரோதம் ஏற்படும்.

வியாழன்-
இடம் வீடு தொடர்பான சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ரியல் எஸ்டேட் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் தொடர்பாக புதிய நிறுவனங்களில் ஒப்பந்தம் கிடைக்கும்.

வெள்ளி-
குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலை தோன்றும். உறவினர்கள் வருகை ஏற்படும். சுபச்செலவுகள் ஏற்படும். மனக்குழப்பம் தீரும்.

சனி-
குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.எடுத்துக்கொண்ட வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். மனநிறைவான நாள்.

ஞாயிறு-
வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பணவரவுகள் கடைசி நேரத்தில் கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
தட்சிணாமூர்த்தி குரு பகவானுக்கு கொண்டைக் கடலை நிவேதனம் செய்து நெய் தீபமேற்றி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.
************************************************************

ஆயில்யம் -
பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். அலுவலகத்தில் இருந்த எதிர்ப்புகள் அகலும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிதாகத் தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.


வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் புதிய கிளைகளை ஆரம்பிக்கும் முயற்சி சாதகமாக இருக்கும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். பழைய ஆபரணங்களை மாற்றி புதிய ஆபரணங்கள் வாங்குவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதிருக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வேலை தொடர்பாக சாதகமான பதில் கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சியில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

செவ்வாய்-
வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பாஸ்போர்ட் மற்றும் விசா தொடர்பான குளறுபடிகள் தீரும். அரசு வழி ஆதாயம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களுக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

புதன்-
விறுவிறுப்பாக பணியாற்றி வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபாரங்கள் முடிவுக்கு வரும். லாபகரமான நாளாக இருக்கும்.

வியாழன்-
முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான பிள்ளையார்சுழி போடுவீர்கள். சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சுபகாரியப் பேச்சு வார்த்தைகள் இனிதாக முடிவடையும்.

வெள்ளி-
தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். வாகனப் பழுது உண்டு. வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். மின்சாதனப் பொருட்கள் பழுதடையும். அதற்காக செலவு செய்ய வேண்டியது வரும்.

சனி-
புதிய வியாபார பேச்சுவார்த்தைகள் தொடங்குவீர்கள். வெளிநாடுகளில் வேலை தேடும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களால் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும்.

ஞாயிறு-
ஆலய வழிபாடு செய்வீர்கள். குடும்பத்தினரோடு உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று வருவீர்கள். சகோதரர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் ஏற்படும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
சீனிவாச பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யுங்கள். நம்மைகள் கூடுதலாகும். முயற்சிகள் வெற்றியாகும்.
************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்