இந்த வார நட்சத்திர பலன்கள் (ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை)  ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை

By செய்திப்பிரிவு

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


ரோகிணி -
மன உளைச்சல்களிலிருந்து வெளியே வருவீர்கள். நெருக்கடி தந்து கொண்டிருந்த கடன்கள் படிப்படியாக தீரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் மாறும். சக ஊழியர்கள் உங்களுக்கு தாமாக முன் வந்து உதவுவார்கள்.


தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும்.வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.இழந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள்.


கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்து ஏற்பாடுகள் அகலும். மன ஒற்றுமை ஏற்படும். சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த கலைஞர்களுக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நம்பிக்கை பிறக்கும். மாணவர்கள் கல்வியில் புதிய உத்வேகம் பெறுவார்கள். கல்வியில் நல்ல முனைப்போடு கவனம் செலுத்துவார்கள்.


கடன் தொடர்பான வழக்குகள், தொழில் தொடர்பான வழக்குகள் என அனைத்தும் சுமுகமாக தீரும்.

இந்த வாரம் -

திங்கள்-
உற்சாகமான மனநிலை இருக்கும். பணியிடத்தில் சிறப்பாக பணி செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
குலதெய்வ வழிபாடு செய்யும் எண்ணம் வரும். ஆன்மிகப் பெரியவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல தகவல் ஒன்று கிடைக்கும்.

புதன்-
பலவித நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில்லாத பெண்களுக்கு இன்று வேலைக்கான அழைப்பு கிடைக்கும். இடம் பூமி சம்பந்தப்பட்ட வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

வியாழன்-
பயணங்கள் அதிகமாக ஏற்படும். அதன் காரணமாக செலவுகளும் ஏற்படும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். வீட்டு உபயோகப் பொருட்களில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

வெள்ளி-
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் பழைய ஆபரணங்களை விற்று புதிய ஆபரணங்கள் வாங்குவார்கள்.

சனி-
நீண்ட நாளாக முடிக்காமல் இருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான சந்திப்புகளில் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும்.

ஞாயிறு-
பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்வீர்கள். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக வராமலிருந்த பணத்தை கடுமை காட்டி வசூலிப்பீர்கள். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்திப்பீர்கள்.

வணங்கவேண்டிய தெய்வம்-
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். பிரச்சினைகள் தீரும் மனதில் நம்பிக்கை பிறக்கும்.
**********************************************************************


மிருகசீரிடம் -
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும். மனதை வருத்திக் கொண்டிருந்த கடன் பிரச்சினைகள் படிப்படியாக தீரும். வேறு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கல்வித் தகுதிக்கு தகுந்த வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.


பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்., சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். கலைஞர்களுக்கு இதுவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்புகள் இனி வரிசையாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
சிறு தூர பயணம் ஏற்படும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உதவிகள் எதிர்பார்த்து வருவார்கள்.எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.அலுவலகத்தில் சகஜமான நிலையே நீடிக்கும்.

செவ்வாய்-
வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். புதிதாக கடை அல்லது சிறு நிறுவனங்கள் ஆரம்பிக்க தகுதியான இடம் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகளை பேசி சமாளித்து தேவையான கால நீட்டிப்பு பெறுவீர்கள்.

புதன்-
ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஒப்பந்தங்கள் ஏற்படும். பத்திரிகையாளர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். புதிய பயிற்சி வகுப்புகளில் சேரும் எண்ணம் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வியாழன்-
அதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான தேவையான உதவிகள் கிடைக்கும். அடகு நகைகளை மீட்க வாய்ப்பு உண்டு.

வெள்ளி-
உங்களுக்கு தொடர்பு இல்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் தேவையற்ற சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள்.உயரதிகாரிகளின் பேச்சுக்கு கட்டுப்படுங்கள்.

சனி-
வெளிநாடுகளில் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பெண்களுக்கு சகோதரரால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பேச்சுவார்த்தைகள் இன்று முடிவுக்கு வரும்.

ஞாயிறு-
எதிர்பார்த்துக் கொண்டிருந்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படும். அரசு வழியில் இருந்த ஒரு சில சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவிகள் கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
சிவாலயத்தில் உள்ள வன்னி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி தூப தீபம் காட்டி வழிபடுதல், அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தரும். சிவ வழிபாடு மற்றும் நந்தி வழிபாடு மிகுந்த பலனைத் தரும்.
******************************************************************

திருவாதிரை -
இல்லத்தில் சுப விசேஷங்கள் தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும்.


தொழில் ரீதியான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முழு வெற்றி கிடைக்கும். வருமானம் தரக்கூடிய வியாபாரம் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.வணிக ரீதியாக புதிய ஏஜென்சி, டீலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.

செவ்வாய்-
அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். அது தொடர்பான மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

புதன்-
நிலம் தொடர்பான வியாபாரத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இன்று பத்திரப் பதிவுகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. இல்லத்தில் சுப காரியங்கள் சம்பந்தமான விஷயங்கள் முடிவு எடுக்கப்படும். சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருக்கும் அதிக அளவில் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

வியாழன்-
பிரசித்திபெற்ற ஆலயங்களுக்குச் சென்று வர வாய்ப்பு உண்டாகும். குழந்தைகளின் கல்வியால் பெருமைப்படுவீர்கள். கூட்டுத் தொழில் தொடர்பான விஷயங்களில் பிரச்சினைகளைப் பேசி முடிக்கப்படும்.

வெள்ளி-
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி-
அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். தொழில் தொடர்பான ஒரு நம்பிக்கையான நபரை சந்தித்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இல்லத்திற்கு உறவினர்கள் வருகை உண்டு. சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ஞாயிறு-
வெளிநாடு தொடர்புடைய விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். அயல்நாட்டில் வேலை பெறுவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
பிரத்யங்கிரா தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். நெருக்கடிகள் தீரும்.
**********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்