இந்த வார நட்சத்திர பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள் (ஜனவரி 20 முதல் 26 வரை), பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

By செய்திப்பிரிவு

'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -
தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றி உலா வருவீர்கள். நன்மைகள் அதிகமாக நடைபெறும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும்.


இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி முழு அளவில் வெற்றிபெறும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப் பெறுவார்கள்.


கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கைத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உரிய அங்கீகாரம் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலைச்சலும் அலைச்சலுக்கு உண்டான ஆதாயமும் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமானாலும் சரியான நேரத்தில் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

செவ்வாய்-
முன்னேற்றமான தகவல்கள் கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்கள் எதிர்பாராத லாபம் கிடைக்கப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

புதன்-
உங்களுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பணியை மட்டும் செய்யுங்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரிகள் கடன் கொடுப்பதை இன்று தவிர்க்க வேண்டும்.

வியாழன்-
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சுபவிசேஷ பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த நன்மைகள் நடைபெறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வெள்ளி-
முக்கியமான கடன் பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும். வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் இன்று பேசித் தீர்க்கப்படும்.

சனி-
எதிர்பாராத லாபம் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் எண்ணம் ஏற்படும்.

ஞாயிறு-
குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் மனநிறைவைத் தரும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஆறுமுகப் பெருமானை வணங்குங்கள். அற்புதங்களை நிகழ்த்துவான். நன்மைகள் அதிகமாக நடைபெறும். நினைத்தது நிறைவேறும்.
*****************************************************************

உத்திரட்டாதி -
அதிகப்படியான நன்மைகள் நடைபெறும் வாரம். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.


வெளிநாடு செல்லும் முயற்சி வெளிநாடுகளில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது.தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் வெற்றி உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் ஏற்படும். கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும்.

செவ்வாய்-
அலைச்சல் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். வீட்டு மராமத்து செலவுகள் உண்டாகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.

புதன்-
அதிக நன்மைகள் ஏற்பட கூடிய நாள். வருமானம் இருமடங்காக இருக்கும் . வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் உண்டாகும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

வியாழன்-
உங்களால் மற்றவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து தருவீர்கள்.

வெள்ளி-
வியாபார விஷயங்களில் லாபம் இருமடங்காக ஏற்படும். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

சனி-
எந்த வேலையிலும் பொறுமையும் நிதானமும் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். செய்கின்ற வேலைகளில் அலட்சியமாக இருக்க வேண்டாம். கவனக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த தகவல் இன்று வந்துசேரும். வெளிநாட்டு நண்பர்களின் உதவியால் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.நன்மைகள் அதிகமாக ஏற்படும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
வீட்டுக்கு அருகில் இருக்கும் பசு மடத்திற்கு செல்லுங்கள். பசுக்களுக்கு உணவளியுங்கள். எப்படிப்பட்ட பிரச்சினைகளும் எளிதாக தீரும். நன்மைகள் பல மடங்காக உயரும்.
***************************************************

ரேவதி -
சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.தாயாரின் உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாக தீரும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.


அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். ஒரு சிலர் இப்போது இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாறுவார்கள். இன்னும் ஒரு சிலருக்கு வேலையை விட்டு விலகும்படி நிர்வாக ரீதியாக நிர்ப்பந்தங்கள் ஏற்படும்.தொழில் ரீதியான வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டாகும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு லாபம் இருமடங்காக ஏற்படும். மாணவர்களின் கல்வியில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும் புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தை சாதகமாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

செவ்வாய்-
அதிக முயற்சி இல்லாமலேயே அனைத்து வேலைகளையும் எளிதாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில்ரீதியான புதிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்குவீர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு லாபங்கள் பல மடங்காகும்.

புதன்-
வீண் அலைச்சல்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் குறையும். எதிர்பார்த்த சந்திப்புகள் தள்ளிப்போகும். வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை.

வியாழன்-
சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக தீரும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

வெள்ளி-
உங்கள் திறமைகளை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே உங்களால் மற்றவர்களுக்கு ஆதாயம் ஏற்படும். அலுவலகத்தில் அடுத்தவர் வேலையை நீங்கள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும் .தொழில்ரீதியான அலைச்சல்கள் ஏற்படும்.

சனி-
நீண்ட நாளாக வருந்திக் கொண்டிருந்த கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். அடகு நகைகளை மீட்கும் வாய்ப்புகள் உண்டு. வியாபார ரீதியாக ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. தொழில்ரீதியான பேச்சுவார்த்தைகள் மனத் திருப்தி உண்டாகும்.

ஞாயிறு-
குடும்பத்தினருடன் நேரத்தை செலவழியுங்கள் புதிய நண்பர்களால் தொல்லைகள் வரலாம்.வீண் அலைச்சல்கள் ஏற்படும்.எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப் போகலாம்.

வணங்க வேண்டிய தெய்வம்-
பிள்ளையார்பட்டி விநாயகப் பெருமானை மனதில் நினைத்து வணங்குங்கள். அருகிலிருக்கும் விநாயகர் கோயிலுக்கு 7 தேங்காய்கள் கொண்ட மாலையை அணிவித்து வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். ஆரோக்கியம் சீராகும். மனதில் நம்பிக்கை பிறக்கும்.
************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்