- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
திருவோணம்-
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை தேடும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். பதவி உயர்வு எதிர்பார்த்த கொண்டிருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான முதலீடுகள் கிடைக்கும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு வீடு தேடி வாய்ப்புகள் வரும்.
பெண்களுக்கு இயல்பான சொத்து சேர்க்கை ஏற்படும். தந்தைவழி சொத்துகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து தங்கள் திறமையை நிரூபிப்பார்கள்.
இந்த வாரம் -
திங்கள்-
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். வியாபாரிகள் மற்றும் சிறு நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் புதிய கிளைகளை தொடங்கும் வாய்ப்பு உள்ளது. அசையாச் சொத்து வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும். சொத்துக்கள் விற்பது வாங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படும்.
செவ்வாய்-
வியாபார விஷயமாக அலைச்சல் ஏற்படும். அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். அலைச்சல் அதிகரிப்பதால் உடலில் அசதி தோன்றும். மருத்துவச் செலவுகள் சிறிய அளவில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எதிர்காலம் பற்றிய கவலை மனதை வாட்டும்.
புதன்-
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்டநாள் வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும்.வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்.
பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கப் பெறுவார்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியத்திற்காக நல்ல தகவல் இன்று கிடைக்கும்.
வியாழன்-
வெளிநாடுகளில் வேலை தேடும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் ஏற்படும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும் கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணை வழியே ஆதாயம் கிடைக்கும்.
வெள்ளி-
பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குடும்பத்தினரின் எதிர்காலத்திற்காக சேமிப்புகள், முதலீடுகள் போன்றவற்றை செய்வீர்கள். வியாபார விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். நன்மைகள் அதிகமாக நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும்.
சனி-
எதிர்பாராத அளவிற்கு நன்மைகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஆதாயம் பலமடங்காக இருக்கும்.
ஞாயிறு-
குடும்பத்தினருடன் நேரத்தை செலவழியுங்கள். நண்பர்களுடன் வெளியில் செல்வதைத் தவிர்த்து விடவேண்டும். பயணங்கள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இருந்தால் அதையும் ஒத்தி வையுங்கள்.
வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தரும்.தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் காணாமல்போகும். நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.
********************************************************
அவிட்டம்-
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகள் தானாக கிடைக்கும். பெருமளவு நன்மைகள் ஏற்படும். அசையாச் சொத்து உள்ளிட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் மாறும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும் கடைகள் மற்றும் வணிக நிறுவனம் நடத்துபவர்களுக்கு புதிய கிளைகளைத் தொடங்கும் வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.கலைத்துறையினருக்கு அருமையான வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும். எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம், மதிப்பு மரியாதை, கவுரவம் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
பொது நலச் சேவையில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலைகளை பகிர்ந்து கொள்வீர்கள். மனநிறைவான நாள்.
செவ்வாய்-
நன்மைகள் அதிகமாக நடைபெறும். தேவைகள் பூர்த்தி ஆகும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கிளைகளைத் தொடங்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
புதன்-
வீண் அலைச்சல்களை தவிர்த்துவிடுங்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது யோசித்து கையெழுத்திட வேண்டும். காசோலைகள் தரும்போது கவனமாக இருக்கவேண்டும்.வியாபார பேச்சுவார்த்தைகளில் அதிக கவனத்துடன் பேச வேண்டும்.
வியாழன்-
இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இன்று வேலைக்கான நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். அசையாச் சொத்து வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். சகோதர வழியில் இருந்த மனவருத்தங்கள் மாறும். சகோதரர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவார்கள்.
வெள்ளி-
கடன் தொடர்பான முக்கிய பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும்.எதிர்பார்த்த பண உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மருத்துவச் செலவுகள் முற்றிலுமாக குறையும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உண்டாகும்.
சனி-
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும், லாபமும் உண்டாகும். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை உணர்வார்கள்.
ஞாயிறு-
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். தொழில் தொடர்பான அத்தனை உதவிகளும் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் பல வழிகளிலும் வரும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.
வணங்கவேண்டிய தெய்வம்-
ஹயக்ரீவ வழிபாடு நன்மை தரும். ஹயக்ரீவர் ஆலயம் அருகில் இல்லாதவர்கள் ஏழை மாணவர்களுக்கு கல்வி தொடர்பான நோட்டுப்புத்தகம், பேனா போன்றவற்றை வழங்குங்கள். நன்மைகள் அதிகமாக நடைபெறும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
*************************************************************
சதயம் -
நீண்ட நாளாக இடமாற்றம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு தாமதமாகிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது பதவி உயர்வு கிடைக்கும்.
குடும்பத்தில் சுப விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகளுக்கு புதிய பள்ளியில் சேர்க்கை நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி அடைவார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு உண்டாகும். பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஆதாயம் தரக்கூடிய விஷயங்கள் நடைபெறும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் அபரிமிதமான லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.
இந்த வாரம் -
திங்கள்-
சொந்த வீடு வாங்கும் கனவு இன்று நனவாகும். அதற்கான வாய்ப்புகள் இன்று சாதகமாக இருக்கிறது. வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
ஒருசிலர் பூர்வீகச் சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். பெண்கள் பழைய நகைகளை விற்று புதிய நகைகள் வாங்குவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இன்று நல்ல தகவல் கிடைத்து மகிழ்ச்சி அடைவார்கள்.
செவ்வாய்-
உங்களால் மற்றவர்களுக்கு ஆதாயம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலை செய்ய வேண்டியது வரும். பயணங்களால் அலைச்சல்தான் மிச்சம். ஆதாயம் குறைவாக இருக்கும்.
புதன்-
பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். வியாபார பேச்சு வார்த்தை சாதகமாக இருக்கும். பத்திரப் பதிவுகள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. நல்ல பலன்கள் நடைபெறும் நாள்.
வியாழன்-
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் உங்களை கோபப்படுத்தி பார்ப்பார்கள். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்துவிடுங்கள். அமைதி ஆனந்தத்தைத் தரும்.
வெள்ளி-
அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதால் ஆதாயம் கிடைக்கும்.எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.
சனி-
சுபச்செலவுகள் ஏற்படும். ஆனாலும் பணவரவில் தடை ஏதும் இருக்காது. வியாபாரத்தில் ஆதாயம் இருமடங்காக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
ஞாயிறு-
நல்ல பலன்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளால் ஆதாயம் கிடைக்கும். பெரிய மனிதரின் நட்பு கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம்-
சித்தர்களின் ஜீவசமாதி சென்று வாருங்கள். சித்தர் பெருமக்களை மனதில் நினைத்து வழிபடுங்கள். நன்மைகள் இருமடங்காகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சுபவிசேஷ நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும்.
**********************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago