- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
மகம் -
போராடிய பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வாழ்க்கைத் துணையின் குடும்பத்தாரால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.
பங்கு வர்த்தகத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பத்திரிகை மற்றும் ஊடகத்தில் பணிபுரிபவர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
நீண்ட நாளாக எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த ஒரு விஷயம் இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
செவ்வாய்-
வெளிநாடு செல்லும் முயற்சிகளில் முழு வெற்றி கிடைக்கும். தொலைதூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முழுமையடையும். சொத்துக்கள் வாங்க விற்க எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும்.
புதன்-
கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இன்று பத்திரப் பதிவுகள் நடக்கும். அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றியும் உண்டாகும். தன வரவு தாராளமாக இருக்கும் .திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். நல்ல வேலை இல்லையே என்று ஏங்கிக் கிடந்த பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
வியாழன்-
அலைச்சல் அதிகரிக்கும். தேவையில்லாத செலவுகள் ஏற்படும். வீட்டு மராமத்துப் பணிகள் செய்வீர்கள். வாகனப் பழுது ஏற்படும். அலுவலகத்திலும் வெளியிடத்திலும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
வெள்ளி-
பணியிடத்தில் உங்களுக்கான வேலைகளை முழுமையாக முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவு பெற்று லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினை ஒன்று இன்று தீரும். அடகு வைத்த பொருட்களை மீட்கவும் வாய்ப்பு உண்டு.
சனி-
வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றமான விஷயங்கள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும். கடன் தொடர்பான விஷயங்கள் கட்டுக்குள் இருக்கும். நெருக்கடிகள் விலகும்.
ஞாயிறு-
பூமி தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம்-
யோக நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். தடைகள் அகலும். எதிரிகளின் மறைமுகத் தொல்லை விலகும்.
******************************************************
பூரம் -
சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம். எதிர்பார்த்த உதவிகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான தேவையான அனைத்து சலுகைகளும் கிடைக்கும். அரசு வழியில் இருந்த நிர்ப்பந்தங்கள் விலகும். பெண்களின் திருமண முயற்சிகள் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
அலுவலகப் பணியில் இருப்பவர்கள், சிறு நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள், பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அவர்கள் மூலமாக வெளிநாடுகளில் வேலை வாய்ப்பும் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. பெண்கள் தங்களுடைய பழைய ஆபரணங்களை விற்று புதிய ஆபரணங்கள் வாங்குவர். ஒரு சிலர் தங்கள் குழந்தைகளின் பெயரில் வைப்பு நிதி போன்ற சேமிப்புகளைச் செய்வீர்கள்.
செவ்வாய்-
அலுவல் விஷயமாகவோ அல்லது தொழில் விஷயமாகவோ பயணம் ஏற்படும். பண வரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் திருப்தி தரும்.
புதன்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். குடும்ப நலன் சார்ந்து ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வங்கிக்கடன் தொடர்பான விஷயங்கள் சுமுகமாக முடிவுக்கு வரும்.
வியாழன்-
வருமானம் பல வழிகளிலும் வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முழுமையாகும்.
வெள்ளி-
வேண்டாத செலவுகள் ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். தாயாரின் உடல் நலத்திற்காக மருத்துவச் செலவுகளும் ஏற்படும். பொறுமையாக இருப்பதும், நிதானத்தை இழக்காமல் இருப்பதும் நல்லது.
சனி-
பாதியில் நின்ற வேலைகள் அனைத்தும் இன்று செய்து முடிப்பீர்கள். நண்பர்களாலும் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக முக்கிய நபரை சந்திப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். புதிய கிளைகளைத் துவங்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஞாயிறு-
அக்கம்பக்கத்தினருக்காக ஒரு சில வேலைகளை செய்து கொடுப்பீர்கள். பொது நல சேவைகளில் ஆர்வம் ஏற்படும்.சொந்த செலவில் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
வணங்கவேண்டிய தெய்வம்-
அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்யுங்கள். அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சென்று நெய் தீபமேற்றி அம்மனை வழிபடுங்கள். நன்மைகள் கூடுதலாகும். பணவரவு தாராளமாக இருக்கும். நினைத்தது நிறைவேறும்.
****************************************************************
உத்திரம்-
பெருமளவு நன்மைகள் ஏற்படும் வாரம். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் ஏற்பட்டு இருந்த ஒரு சில சங்கடமான சூழ்நிலைகள் விலகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.
பங்கு வர்த்தகத் துறையில் அபரிமிதமான முன்னேற்றம் வளர்ச்சி ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் ஏற்படும்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். வேலையில்லாத பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்தத் தொழில் செய்யும் முயற்சியில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைத்து தொழில் ஆரம்பிக்கும் சூழ்நிலை உருவாகும். கலைத்துறை சார்ந்தவர்கள் நல்ல வாய்ப்புகள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
இந்த வாரம் -
திங்கள்-
அலைச்சல் அதிகரிக்கும். அலைச்சலுக்கு உண்டான ஆதாயம் கிடைப்பது அரிதாக இருக்கும். உங்கள் உழைப்பை பயன்படுத்தி மற்றவர்கள் பயன்பெறுவார்கள். பொறுமை மிக மிக அவசியம்.
செவ்வாய்-
அதிக நன்மைகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குலதெய்வ வழிபாட்டால் மன நிம்மதி பெறுவீர்கள். வியாபாரிகள் எதிர்பாராத லாபம் கிடைக்கப் பெறுவர்.
புதன்-
வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும். வீடு கட்டுவதற்கு வீட்டுக்கடன் விண்ணப்பித்தவர்களுக்கு வங்கியில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இன்று தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரிகள் கிளைகளை ஆரம்பிக்க நல்ல வியாபாரக் கடை, இடம் முடிவாகும்.
வியாழன்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் முழுமூச்சாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களால் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பெண்களுக்கு தங்கள் சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும்.
வெள்ளி-
எதிர்பார்த்த பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வருமானம் பல மடங்காகும். வியாபாரத்தில் அபார வளர்ச்சி உண்டாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சி முழு வெற்றியைத் தரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
சனி-
வீடு மராமத்துச் செலவுகள் ஏற்படும். வீட்டில் உள்ள மின் சாதனப் பொருட்களில் பழுது ஏற்பட்டு புதிதாக மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த ஒரு சில விஷயங்கள் தாமதமாகலாம்.
ஞாயிறு-
நிலம் பூமி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்று முடிவுக்கு வரும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் இன்று முடிவுக்கு வரும். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம்-
சிவாலயத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வணங்குங்கள். நன்மைகள் பெருகும். ஆதாயம் அதிகமாகும். வருமானம் இரட்டிப்பாகும்.
*************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago