இந்த வார நட்சத்திர பலன்கள் : எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள் (ஜனவரி 20 முதல் 26 வரை) ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -
கடந்த சில நாட்களாக இருந்து வந்த மன அழுத்தங்கள் விலகும். பிரச்சினைகள் தீரும். எடுத்துக்கொண்ட செயல்கள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வழக்குகள் காணாமல் போகும். தந்தையின் உடல்நலம் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்டுக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் சாதகமாகும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத உதவி கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சீராகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய்-
பயணங்கள் அதிகரிக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் நடக்கும். அலுவலகத்தில் சகஜமான நிலையே நீடிக்கும். வீடுமனை உள்ளிட்ட வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்தி தரும்.

புதன்-
மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் உருவாகும். முடிவுகள் எடுப்பதில் குழப்பங்கள் உண்டாகும். பொறுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.

வியாழன்-
அயல்நாடுகளில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் ஏற்படும். பெண்களின் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வெள்ளி-
தெளிவாக சிந்தித்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். பரபரப்பாக இயங்கி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகளில் ஒப்பந்தங்கள் ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

சனி-
வியாபார விஷயங்களில் லாபம் இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். மாணவர்களின் கல்வியில் புதிய திருப்புமுனை ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்களில் நம்பிக்கை தரும் வகையில் பேச்சுவார்த்தைகள் இருக்கும்.

ஞாயிறு-
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். பேச்சுவார்த்தைகள் தள்ளி வையுங்கள். செலவுகள் இருமடங்காக ஏற்படும்.பொறுமை மிக மிக அவசியம்.

வணங்கவேண்டிய தெய்வம்-
தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். சமயபுரம் மாரியம்மனை மனதில் நினைத்து வணங்குங்கள். மனக் குழப்பங்கள் அனைத்தும் தீரும்.பெரும் நன்மைகள் நடக்கும்.
**********************************************

மிருகசீரிடம் -
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம். தடைபட்டிருந்த வேலைகள் அனைத்தும் இனி தடையில்லாமல் நடக்கும். அலுவலகத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.
தொழிலில் இருந்த நெருக்கடிகள் தீரும். பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களின் கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். காத்திருந்து அதிக ஏமாற்றங்களை சந்தித்த கலைஞர்கள் இனி நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகத்தில் இயல்பான நிலையே தொடரும். எதிர்ப்பு காட்டி வந்த சக ஊழியர்கள் சமாதானமாவார்கள். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்பு ஒன்று ஏற்படும். அதனால் ஆதாயம் கிடைக்கும். பெண்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். புதிய நட்பு ஒன்று ஏற்படும்,புதிய நட்பால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த ஒரு சில சலுகைகள் கிடைக்கும்.

புதன்-
அலைச்சல்களும் இருக்கும் அதே சமயம் கடைசி நேரத்தில் ஒரு சில ஆதாரங்களும் கிடைக்கும்.பணத் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு சீரான வளர்ச்சி இருக்கும்.

வியாழன்-
பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பணம், செல்போன் உள்ளிட்ட கைப் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஆலய வழிபாடு மன அமைதி தரும். முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.

வெள்ளி-
ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் இருக்கும். வியாபார வளர்ச்சி அபாரமாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சகோதர வழியில் இருந்த மனவருத்தங்கள் தீரும்.

சனி-
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். முக்கிய நபர்களை சந்திப்பதன் மூலம் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஞாயிறு-
ஏராளமான நன்மைகள் நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்தங்கள் ஏற்படும். எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளிலும் முழு வெற்றி கிடைக்கும் .பெண்களுக்கு சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாகும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
பைரவர் வழிபாடும், தெரு நாய்களுக்கு உணவளிப்பதும் அதிக நன்மைகளை ஏற்படுத்தித்தரும். பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
***************************************************************************************************

திருவாதிரை -
அதிக நன்மைகள் நடைபெறும் வாரம். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அவசர முடிவுகள் எடுக்காமல் இருந்தால் நன்மைகள் மேலும் அதிகமாக நடைபெறும்.
அலுவலகத்தில் இயல்பான நிலையைத் தொடரும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி முன்னேற்றம் உண்டாகும்.
பெண்களின் திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகத் துறையினருக்கு திடீர் பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
ரியல் எஸ்டேட் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் பன்மடங்காக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடைகள் மற்றும் வியாபாரத் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சியைக் காண்பார்கள்.
உத்தியோகத்தில் இடமாற்றம் தொடர்பான தகவல் கிடைக்கும்.மாணவர்கள் புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்பட்டு அது தொடர்பான பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது.

செவ்வாய்-
வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். நோய் பற்றிய அச்சம் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மேலும் பல ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவார்கள். திரைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றமும், வளர்ச்சியும் பங்கு வர்த்தகத்தில் ஏற்படும்.

புதன்-
பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.சொத்து சம்பந்தமான பத்திரப் பதிவுகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உள்ளது. எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம், கௌரவம் கிடைக்கும்.

வியாழன்-
சுபச்செலவுகள் ஏற்படும். வீட்டு பராமரிப்பு செலவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அலைச்சல்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையை நீங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மேலும் தள்ளிப்போகும்.

வெள்ளி-
பொறுமை ,நிதானம் மிக மிக அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கக் கூடாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். ஆலய வழிபாடு மன அமைதியை ஏற்படுத்தி தரும்.

சனி-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் தேங்கி நின்ற வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள்.தொழில் தொடர்பான புதிய உபகரணங்கள் இன்று கிடைக்கப் பெறுவீர்கள்.

ஞாயிறு-
சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பெண்களுக்கு அசையாச் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.சகோதர வழியில் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
நவகிரக சாந்தி ஹோமம் செய்யுங்கள். கோளறு பதிகம் படித்து வாருங்கள். நன்மைகள் கூடுதலாகும். எதிரிகள் காணாமல் போவார்கள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
*******************************************************

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்