- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
அஸ்வினி-
எண்ணங்கள் நிறைவேறும் வாரம். தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக முடியும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் சாதகமாகும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
பணியில் இடமாற்றம் உண்டாகும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள் -
மனசஞ்சலம் ஏற்படும்.உடல் அசதி,சோர்வு தோன்றும். எதிர்பார்த்த தகவல் தாமதமாகும். வியாபாரத்தில் சிறிய அளவில் தேக்கம் ஏற்படும்.
செவ்வாய்-
பரபரப்பாக செயல்பட்டு அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
புதன்-
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தமாகும். பெண்களின் திருமணம் தொடர்பான தகவல் மன நிம்மதி தரும். மாணவர்கள் கல்வியில் உயர்வு உண்டாகும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும்.
வியாழன்-
வங்கி தொடர்பான சிக்கல்கள் விலகும். வீண் செலவுகள் ஏற்படும். கோபமான உணர்ச்சிகள் கட்டுப்படுத்த வேண்டும். மருத்துவச்செலவு ஏற்படும்.
வெள்ளி-
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். நிலம் தொடர்பான விசயங்கள் சாதகமாக இருக்கும். பெண்கள் தங்கள் துறையில் உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெறுவார்கள்.
சனி-
உங்களால் பிறருக்கு நன்மை ஏற்படும். குழந்தைகளின் கல்வி, அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலை தோன்றும். வரவும் செலவும் சமமாக இருக்கும்.
ஞாயிறு-
கடன் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வரும். வங்கியில் ஏற்பட்ட குளறுபடிகள் முடிவுக்கு வரும். வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தமாக மாறும். பெண்களின் திருமண விஷயங்கள் முடிவாகும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சிவாலயத்தில் அதிகாலையில் செய்யப்படும் சிவசூரிய வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள். மனம் தெளிவாகும். செயல்களில் புதிய உத்வேகம் பிறக்கும்.
********************************************************
பரணி-
திங்கட்கிழமை தவிர மற்ற நாட்கள் அற்புதமான பல்ன்களைத் தரக்கூடிய நாட்களாக இருக்கிறது. பணியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும்.
பெண்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள்-
பொறுமையாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பேச்சுவார்த்தைகளை தள்ளிவைப்பது நல்லது. தேவையற்ற சச்சரவுகள் வரும். எதிலும் தலையிட வேண்டாம்.
செவ்வாய்-
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.வெளியூரிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.
புதன்-
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரங்கள் ஒப்பந்தங்களாக மாறும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றமும், எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். வங்கிக் கடன் தொடர்பான பிரச்சினைகள் தீர்ந்து வங்கிக் கடன் கிடைக்கும்.சுவாமி என்று கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாழன்-
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பெண்களின் திருமண முயற்சிகள் கைகூடும்.பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும்.
வெள்ளி-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சேமிப்புகள் குறையும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். பெண்கள் தங்கள் உறவினர்களிடமும், அக்கம்பக்கத்தினருடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
சனி-
தொழில் சீராக இருக்கும். எதிர்பார்த்த தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். ரியல் எஸ்டேட் மற்றும் கமிஷன் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும்.
ஞாயிறு-
அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். தொழில் தொடர்பான சந்திப்புகளில் தாமதம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப் போகலாம். அடுத்தவர்கள் வேலையை செய்து தர வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ துர்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சூட்டி, நெய் தீபமேற்றி வழிபடுங்கள். நன்மைகள் கூடுதலாகும், நீங்கள் நினைத்தது நிறைவேறும், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் சுமுகமான முடிவுக்கு வரும்.
*****************************
கார்த்திகை-
நெருக்கடி தந்து கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக மாறும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
தொழில் தொடர்பான வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு சகோதர வழியில் இருந்த வருத்தங்கள் அகலும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
இந்த வாரம் -
திங்கள்-
உங்களுக்கு தொடர்பில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அது தேவையில்லாத வருத்தத்தில் முடியும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீண் சச்சரவுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
செவ்வாய்-
இன்றும் அமைதி காப்பது நல்லது. பேச்சுவார்த்தைகளை தவிர்த்துவிடுங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக ஆலோசித்து முடிவெடுங்கள்.
புதன்-
தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு இன்று பத்திரப்பதிவு வரை முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி உதவி கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாழன்-
தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். தொழிலுக்கு தேவையான முதலீடுகள் கிடைக்கும்.பெண்களுக்கு சொத்து சம்பந்தமான பிரச்சினையில் நல்ல முடிவு ஏறபடும். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும்.
வெள்ளி-
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் நடத்தும் வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கப் பெறுவார்கள். அதிக அளவிலான ஆர்டர்கள் கிடைக்கும். கட்டுமான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய கட்டுமானத் திட்டங்கள் செயலுக்கு வரும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும்.
சனி-
செலவுகள் இருமடங்காக ஏற்படும். குடும்பத்தினர் தேவைகளுக்காக செலவு செய்ய வேண்டியது வரும். வாகனப் பழுது உள்ளிட்ட செலவுகளும் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வு, அசதி தோன்றும்.
ஞாயிறு-
சொத்து தொடர்பான பிரச்சினைகள் அனைத்தையும் இன்று பேசி முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். கலைஞர்கள் நண்பர்களால் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
வணங்கவேண்டிய தெய்வம்-
முருகப்பெருமானுக்கு மரிக்கொழுந்து மாலை சூட்டி வணங்குங்கள். முருகனுக்கு விருப்பமான பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து பிரசாதமாக தாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தடைகள் அகலும்.
*******************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago