மேஷம்: வி.ஐ.பி.யின் ஆதரவு கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.. பொதுக்காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சிக்கல்களைத் தீர்க்க நண்பர்களின் ஆலோசனைகளும், உதவியும் கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. வாகனம் செலவு வைக்கும்.
மிதுனம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
கடகம்: மனதில் தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். திட்டவட்டமாக, தெளிவாக முக்கிய முடிவுகள் எடுத்து வெற்றி பெறுவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள்.
சிம்மம்: விலை உயர்ந்தப் பொருட்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக விலகியிருந்த சொந்தபந்தங்கள் வீடுதேடி வருவார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
கன்னி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
துலாம்: மற்றவர்களிடம் பேசும்போது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். சொல்ல வருவதை பக்குவமாக சொல்லுங்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.
விருச்சிகம்: பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டு. குடும்பத்துடன் திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
தனுசு: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப சீர் செய்வீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
மகரம்: பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். விருந்தினர் வருகை உண்டு.
கும்பம்: வேலைச்சுமை குறையும். வழக்குகள் சாதகமாகும். ஆரோக்கியம், அழகு கூடும். பெற்றோருடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
மீனம்: வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வீடு பராமரிப்புச் செலவு திட்டமிட்டதைவிட அதிகரிப்பதால் கடன் வாங்கும் சூழல் உருவாகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago