இந்த வார நட்சத்திர பலன்கள்- (ஜனவரி 13 முதல் 19 வரை) -  பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி - எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? 

By செய்திப்பிரிவு


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


பூரட்டாதி-


நல்ல பலன்கள் தரும் வாரம். ஆனால் அவற்றை உணர முடியாமல் தவிப்பீர்கள். நடக்கின்ற நல்ல விஷயங்களை கவனிக்காமல் ஒன்றுமில்லாத சிறிய விஷயத்திற்கு அதிகமாக கவலைப்படுவீர்கள். ஆரோக்கியம் பற்றிய அச்சுறுத்தல் இருக்கும்.


வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும். சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.


திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலைச்சல் அதிகமாக ஏற்படும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். தேவையற்ற பொருட்களை வாங்குவீர்கள்.வியாபார பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டே போகும். தொழில் தொடர்பான நபரை சந்திப்பது தாமதமாகும்.

செவ்வாய் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியைத் தரும். தொழில் தொடர்பான முக்கிய நபரை சந்தித்து ஆதாயம் பெறுவீர்கள்.

புதன் -
நற்பலன்கள் நடக்கும் நாள். பிரிந்த உறவினர்கள் மீண்டும் இணைவார்கள்.குடும்பத்தினருக்கு தேவையானதை செய்து தருவீர்கள்.

வியாழன் -
நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வெள்ளி -
வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நிலம் தொடர்பான வியாபாரங்கள் எதிர்பார்த்தது போலவே முடியும்.திருமணம் போன்ற சுபவிசேஷ பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

சனி-
குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். ஆதாயம் தரும் வியாபாரங்கள் பேசி முடிப்பீர்கள். வாகன மாற்றம் சிந்தனை உண்டாகும்.வெளியூர் பயணம் ஏற்படும்.

ஞாயிறு -
திட்டமிட்டு வைத்திருந்த காரியங்கள் அனைத்தும் இன்று திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
குரு தட்சிணாமூர்த்தி பகவானை வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். எண்ணங்கள் செயல்வடிவம் பெறும்.
*****************************************

உத்திரட்டாதி-

உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இல்லை. சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு வர்த்தகம் ஏற்ற இறக்கம் இருந்தாலும் லாபம் குறையாது.


வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியது வரும்.
திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாக வாய்ப்பு உள்ளது. தந்தைவழி சொத்து சம்பந்தமான விஷயம் சாதகமாக இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். ஒப்பந்தங்கள் ஏற்படும்.

செவ்வாய் -
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

புதன் -
மகிழ்ச்சிகரமான நாள். செலவுகள் இருந்தாலும் வருத்தம் வராது. ஆலய வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்ய முற்படுவீர்கள்.

வியாழன் -
கடன் சம்பந்தமான பிரச்சினை ஒன்று தீரும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.

வெள்ளி -
நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். பத்திரப்பதிவு போன்ற விஷயங்கள் நடக்கும்.

சனி-
நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நெருங்கிய உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ஞாயிறு -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் தொடங்கும். திருமணம் தொடர்பான சுபகாரிய பேச்சுக்கள் முடிவுக்கு வரும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள். விநாயகர் அகவல் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.
*******************************************************


ரேவதி-
பணியில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவேண்டும். சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த முக்கியமான ஒப்பந்தம் கிடைக்கும்.


பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் உயரும். பெண்களுக்கு அதிகளவில் நன்மைகள் ஏற்படும்.திருமண முயற்சி சாதகமாக இருக்கும். வியாபாரிகள் சீரான லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டும். கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கலைத் துறையினர், எழுத்தாளர்கள், ஊடகத்துறையினர் இவர்களுக்கெல்லாம் எதிர்பாராத அளவுக்கு உதவிகள் கிடைக்கும், எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். செலவுகள் இருமடங்காக இருக்கும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். பணி செய்யும் இடத்தில் கூடுதல் அக்கறையோடு வேலைகளைச் செய்ய வேண்டும். கடன் தொடர்பான ஒரு நெருக்கடி ஏற்படும்.

செவ்வாய் -
வியாபாரத் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். அலுவலகத்தில் தேங்கி நின்ற வேலைகளை இன்று விரைந்து முடிப்பீர்கள்.

புதன் -
மனநிறைவை தரும் நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர் சந்திப்பு ஏற்படும். சகோதர ஒற்றுமை பலப்படும்.

வியாழன் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வங்கிக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும்.கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகிடைக்கும்.

வெள்ளி -
நண்பர்களுக்காக சில உதவிகளை செய்து தருவீர்கள். எதிர்பார்த்த பேச்சுவார்த்தைகள் மேலும் தள்ளிப்போகும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்த வெளிநாடு தொடர்புடைய தகவல் ஒன்று கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முழுமையடையும். தொழில் தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.கடன் தொடர்பான முக்கிய பிரச்சினையில் சில சலுகைகள் கிடைத்து கடனில் ஒரு பகுதியை அடைக்க வாய்ப்புகள் கிடைக்கும்.

ஞாயிறு -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கடன் தொடர்பான விஷயங்கள் முடிவுக்கு வரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். வெளிநாடு செல்வதற்கான தகவல் ஒன்று கிடைக்கும்.வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும். ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்று வில்வார்ச்சனை செய்து வேண்டிக் கொள்ளுங்கள். தடைகள் அகலும். பிரச்சினைகள் தீரும்.
*******************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்