- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
திருவோணம் -
எடுக்கின்ற முயற்சிகளில் பெருமளவு வெற்றியும் நன்மையும் உண்டாகும்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். ஒரு சிலர் உத்தியோகத்தை விட்டுவிட்டு சொந்தத் தொழில் தொடங்கும் ஆர்வம் ஏற்படும். அதற்கான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழிலை விரிவு படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் பெரிய வளர்ச்சியைக் காண்பார்கள். புதிய கிளைகளை தொடங்கும் எண்ணம் ஏற்படும். பங்கு வர்த்தகத் துறை நல்ல வளர்ச்சியில் இருக்கும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்த பெண்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். அடுத்த ஆண்டு கல்விக்காக இப்போதே தங்களை தயார் செய்து கொள்வார்கள்.கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
செவ்வாய் -
திருமணம் சம்பந்தமான விஷயங்களில் நல்ல தகவல் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
புதன் -
எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பு பலமாகும். மன நிறைவு ஏற்படும் நாள்.
வியாழன் -
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைப்பது மட்டும் முக்கியமல்ல, திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் இன்று அதை உணர்வீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். லாபம் தரக்கூடிய ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும்.
வெள்ளி -
அலைச்சல் அதிகரிக்கும். உடலில் சோர்வு அசதி போன்றவை ஏற்படும். உடல் நலிவுற்றது போல் உணர்வீர்கள். தொலைதூரப் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்.
சனி-
வெளிநாடு வேலை தொடர்பான தகவல் இன்று கிடைக்கும். ஆதாயம் தரும் பயணம் ஒன்று ஏற்படும். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த ஒரு சில சச்சரவுகள் இன்று சுமூகமாக முடிவடையும்.
ஞாயிறு -
செலவுகள் அதிகரிக்கும் நாள். நண்பர்கள் உதவி கேட்டு தொல்லை தருவார்கள். தர்ம காரிய சிந்தனைகள் தோன்றும். குலதெய்வ வழிபாடு செய்ய ஆர்வம் ஏற்படும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வணங்கி வாருங்கள்.ஸ்ரீ வாராஹி மூல மந்திரத்தை உச்சாடனம் செய்யுங்கள். நன்மைகள் பல மடங்காகப் பெருகும். நினைத்தது நிறைவேறும்.
*********************************************
அவிட்டம்-
உத்தியோகத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. இயல்பான நிலையே இருக்கும். தொழிலில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். உற்பத்தி செய்யும் பொருட்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் அமைதி காப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றம் காண்பார்கள்.
பங்கு வர்த்தகத் துறையினர் கவனமாக முதலீடு செய்ய வேண்டும். வியாபாரிகள் சராசரியான வளர்ச்சியைக் காண்பார்கள்.கலைஞர்கள், நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
செவ்வாய் -
எதிர்பார்த்த ஒரு சில உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் கடைசி நேரத்தில் முடிவடையும்.
புதன் -
நன்மைகள் நடைபெறும் நாள். வேண்டிய உதவிகள் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.
வியாழன் -
வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி எடுப்பீர்கள். அந்த முயற்சியில் ஓரளவு வெற்றி கிடைக்கும். கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறுவார்கள். வியாபார ஒப்பந்தங்கள் மனநிறைவு தரும்படி இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
வெள்ளி -
சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தங்களாக மாறும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக கிடைக்கும். தொல்லை தந்து கொண்டிருந்த கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.
சனி-
செலவுகள் அதிகமாக ஏற்படும். மருத்துவச் செலவு முதல் வீட்டுப் பராமரிப்பு செலவுகள் வரை ஏற்படும் வாய்ப்பு உண்டு. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஞாயிறு -
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அலுவலகப் பணியில் ஏற்பட்ட ஒரு சில குறைபாடுகளை சரிசெய்வீர்கள். சொத்து சம்பந்தமான விஷயங்கள் அதாவது சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாகும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
கால பைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். பிரச்சினைகள் குறையும். எதிர்ப்புகள் அகலும். நன்மைகள் நடக்கும்.
****************************************
சதயம்-
நன்மைகள் அதிகமாக ஏற்படும். ஆனாலும் எதிலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம். நிதானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும். அலுவலகத்திலும் வேலை செய்யும் இடத்திலும் அதிக கவனமாக இருக்க வேண்டும். செய்கின்ற வேலைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்கள் தொழில் சார்ந்த எந்த வாக்குறுதியும் தரக்கூடாது, அதை நிறைவேற்ற முடியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.
பெண்கள் குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லவேண்டும். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவேண்டும். உங்களுடைய வார்த்தைகளிலிருந்து குற்றங்களை கண்டுபிடிப்பார்கள்.
மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பக்குவமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஒப்பந்தங்களில் ஒரு சில திருத்தங்கள் ஏற்பட்டு மீண்டும் மறு ஒப்பந்தம் ஏற்படும்.
செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிது கவனம் பிசகினாலும் அனைத்தும் தவறாக முடியும். கூடுதல் கவனம், எச்சரிக்கை உணர்வு தேவை.
புதன் -
நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். மனமகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையிலான செலவுகள் ஏற்படும்.உற்சாகம் தரும் தகவல் ஒன்று கிடைக்கும்.
வியாழன் -
தொலைபேசி வழித்தகவலால் நன்மைகள் நடக்கும். ஆதாயம் தரும் வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடையும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். சொத்து விற்பனை சம்பந்தமான விஷயம் சாதகமாகும்.
வெள்ளி -
வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பத்திரப் பதிவுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பணத்தேவைகள் பூர்த்தியாகும்.எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக முடியும்.
சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வசூலாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும்.
ஞாயிறு -
அமைதியாக இருப்பதும், மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பதும், அடுத்தவர்கள் விஷயங்களில் கருத்து தெரிவிக்காமல் இருப்பதும் நல்லது. உங்களுக்கு சம்பந்தமில்லாத பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். முக்கிய சந்திப்புகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள்.
வணங்கவேண்டிய தெய்வம் -
அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள்.கந்த சஷ்டி கவசம் படியுங்கள். நன்மைகள் அதிகமாகும். தடைகள் அகலும்.
********************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago