இந்த வார நட்சத்திர பலன்கள்- (ஜனவரி 13 முதல் 19 வரை) -  மூலம், பூராடம், உத்திராடம் - எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மூலம்-
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம் . ஒருசில விஷயங்களில் பின்னடைவு ஏற்பட்டாலும் உங்களுடைய தனித் திறமையால் சரிசெய்து விடுவீர்கள்.


உத்தியோகத்தில் ஒரு சில நெருக்கடிகள் தோன்றினாலும், சாதுர்யமாக கையாண்டு சரிசெய்து விடுவீர்கள். பணிச்சுமை காரணமாக ஒரு சிலருக்கு மன அழுத்தங்கள் ஏற்படும். சுய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாரமாக இருக்கும்.


வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அளவான வளர்ச்சியைக் காண்பார்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் முதலீடுகளை குறைத்துக்கொள்ளவேண்டும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளைப் பற்றிய கவலை தோன்றும்.
மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்கள் தங்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம்.

இந்த வாரம் -

திங்கள் -
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டும், சிறிய தவறு கூட பூதாகரமாக மாறும். வியாபார பேச்சுவார்த்தைகள் தள்ளிப் போகலாம். எதிர்பார்த்த ஒரு சில உதவிகள் கடைசி நேரத்தில் கிடைக்கும்.

செவ்வாய் -
நெருக்கடி தந்த கடன் பிரச்சினை சுமுகமாக பேசி தீர்க்கப்படும்.வங்கியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.இடம், வீடு தொடர்பான வியாபார விஷயங்கள் சுமூகமாக இருக்கும்.தொழில் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

புதன் -
எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.செலவுகள் சற்று அதிகமாக ஏற்படும். மனதில் இனம்புரியாத கவலை தோன்றும். ஆலய வழிபாடு மன அமைதி தரும்.

வியாழன் -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மனக் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்த வியாபாரம் வெற்றிகரமாக முடியும். ஒப்பந்தங்கள் ஏற்படும்.வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
தொலைபேசி வழித் தகவல் மனதில் உற்சாகத்தை தரும். வியாபார விஷயங்கள் ஒப்பந்தங்களாக மாறும். குடும்பத்தில் சுபவிசேஷ பேச்சுவார்த்தைகள் நடக்கும்.பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

சனி-
வேலை மாறுவது தொடர்பான சிந்தனை உருவாகும். அது தொடர்பான முயற்சிகளில் இறங்குவீர்கள்.வியாபாரிகள் புதிய வியாபாரத் திட்டங்களை தொடங்குவதற்கான முயற்சிகளில் இறங்குவார்கள். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
எதிர்பாராத அளவுக்கு நன்மைகள் நடைபெறும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
அனுமன் வழிபாடு மற்றும் அனுமன் சாலீசா பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தவை நிறைவேறும்.
**********************************************

பூராடம்-
மனதை வருத்திக் கொண்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்க உதவிகள் கிடைக்கும்.


உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தகுதிக்குத் தகுந்த வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு, இப்பொழுது தகுதிக்கு தகுந்த வேலை கிடைக்கும். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் அளவுக்கு நன்மைகள் நடக்கும்.


வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் தொழிலில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பார்கள்.


பெண்களுக்கு மனம் மகிழும்படியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும்.திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். குழந்தையில்லாத பெண்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். இடம் வீடு தொடர்பான வியாபார விஷயங்களில் வருமானம் உண்டாகும். பத்திரப் பதிவுகள் நடைபெறும். வியாபாரத்தில் வருமானம் இருமடங்காக இருக்கும்.

செவ்வாய் -
பழுதடைந்த பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.அத்தியாவசிய செலவுகள் அதிகமாக இருக்கும். சுய தேவைகள் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும்.

புதன் -
நன்மைகள் அதிகமாக ஏற்படும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபார விஷயங்கள் பேசி முடிக்கப்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். மன நிறைவான நாள்.

வியாழன் -
எல்லாவிதமான நன்மைகளும் நடக்கும். நினைத்தது நிறைவேறும். பண வரவு தாராளமாக இருக்கும்.

வெள்ளி -
மன அமைதி காப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். வழக்கமான பணிகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.

சனி-
கடந்த இரண்டு நாட்களாக தேங்கியிருந்த வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் முன்னேற்றத்தை தரும். தாமதமாகிக் கொண்டிருந்த பணவரவு இன்று கிடைக்கும்.

ஞாயிறு -
கிடைக்கின்ற செய்திகள் அனைத்தும் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். வியாபாரங்களில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று திரும்பக் கிடைக்கும்.


வணங்கவேண்டிய தெய்வம் -
நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு வெள்ளை மொச்சை சுண்டல் நிவேதனம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
************************************************************

உத்திராடம் -


பெரும்பாலான நாட்கள் நன்மை தருவதாக இருக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் தீரும். தொழில் தொடர்பான உதவிகள் தானாக தேடி வரும்.


பெண்களுக்கு இயல்பான சொத்து சேர்க்கை ஏற்படும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.


வியாபாரிகள் சீரான வளர்ச்சியைக் காண்பார்கள்.கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுவது, அந்த ஒப்பந்தங்களால் அதிக லாபம் பெறுவது போன்றவை நடக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டும். சிறிய தவறு கூட பூதாகரமாக மாறும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் தள்ளிப் போகலாம். எதிர்பார்த்த ஒரு சில உதவிகள் கடைசி நேரத்தில் கிடைக்கும்.

செவ்வாய் -
நெருக்கடி தந்த கடன் பிரச்சினை ஒன்று சுமுகமாக பேசி தீர்க்கப்படும் வங்கியில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.இடம்,வீடு தொடர்பான வியாபார விஷயங்கள் சுமூகமாக இருக்கும்.தொழில் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

புதன் -
எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். செலவுகள் சற்று அதிகமாக ஏற்படும். மனதில் இனம்புரியாத கவலை தோன்றும். ஆலய வழிபாடு மன அமைதி தரும்.

வியாழன் -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மனக் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்த வியாபாரம் வெற்றிகரமாக முடியும். ஒப்பந்தங்கள் ஏற்படும்.வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
தொலைபேசி வழித் தகவல் மனதில் உற்சாகத்தை தரும். வியாபார விஷயங்கள் ஒப்பந்தங்களாக மாறும். குடும்பத்தில் சுபவிசேஷ பேச்சுவார்த்தைகள் நடக்கும்.பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

சனி-
வேலை மாறுவது தொடர்பான சிந்தனை உருவாகும். அது தொடர்பான முயற்சிகளில் இறங்குவீர்கள்.வியாபாரிகள் புதிய வியாபாரத் திட்டங்களை தொடங்குவதற்கான முயற்சிகளில் இறங்குவார்கள். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
அம்மன் ஆலயங்களுக்கு சென்று வாருங்கள். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தவை நிறைவேறும்.
*****************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்