இந்த வார நட்சத்திர பலன்கள்- (ஜனவரி 13 முதல் 19 வரை) -  அஸ்தம், சித்திரை, சுவாதி - எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? 

By செய்திப்பிரிவு


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


அஸ்தம் -


அதிக அளவிலான நன்மைகள் ஏற்படும் வாரம். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அதிக அக்கறை காட்டவேண்டும். எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.


உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.பங்கு வர்த்தகத் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு அதிக அளவிலான வியாபாரங்கள் ஏற்படும்.


பெண்கள் தங்கள் குடும்பத்தில் மன மகிழ்ச்சி ஏற்படும்படியான சம்பவங்கள் நடக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும்.சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.


மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.கலைஞர்களுக்கு நல்லநல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணிபுரிவோர் பதவி உயர்வு உள்ளிட்ட சிறப்புச் சலுகைகள் கிடைக்கப்பெறுவார்கள்.

இந்த வாரம் -
திங்கள் -

திட்டமிட்ட காரியங்கள் மட்டுமல்லாமல், திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பண வரவு திருப்தியாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

செவ்வாய் -
பயணங்களால் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான முக்கியமான செலவுகளை மேற்கொள்ள வேண்டியது வரும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். புதிய வியபாரத் தொடர்புகள் ஏற்படும்.

புதன் -
நீங்கள் நினைத்த அனைத்து விஷயங்களும் இன்று சாதகமாக இருக்கும். வியாபார விஷயங்கள் ஆதாயத்துடன் நிறைவேறும். அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். உற்சாகமான மன நிலை இருக்கும்.

வியாழன் -
நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.எதிர்பார்த்த தகவல் சாதகமாக இருக்கும்.வியாபாரப் பேச்சுவார்த்தைகள் திருப்தியாக இருக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

வெள்ளி -
சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.சுப விசேஷங்கள் தொடர்பான தகவல் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும்.எதிர்பார்த்த உதவி தாமதமாகும். ஆனாலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.

ஞாயிறு -
ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்று பேசி முடிப்பீர்கள். லாபம் இருமடங்காக இருக்கும்.தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் மனநிறைவைத் தரும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.நன்மைகள் மேலும் அதிகமாகும். பணவரவு மனநிறைவைத் தரும்.
**********************************************************************

சித்திரை -


இந்த வாரம் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு வேலைக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு அதிக ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.


சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும். எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.

சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.சகோதரர்கள் உதவி கிடைக்கும்.விற்பனை பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களுக்கு முன்னேற்றமான பலன் கிடைக்கும் வாரமாக இருக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -

அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் ஏற்படும்.எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும்.உங்களால் மற்றவர்களுக்கு நன்மை நடக்கும்.

செவ்வாய் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

புதன் -
நன்மைகள் அதிகமாக இருக்கும்.எதிர்பாரத சந்திப்புகளால் மனமகிழ்ச்சி உண்டாகும்.குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும்.

வியாழன் -
வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும், அதில் ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகளால் ஆதாயம் பெருகும்.

வெள்ளி -
நினைத்ததை முடிக்கும் நாள். வியாபார தொடர்புகளால் ஆதாயம் கிடைக்கும்.வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும்.திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் முடிவாகும்.

சனி-
நீண்ட நாளாக இழுபறியாக இருந்த பேச்சுவார்த்தை இன்று சுமூகமான முடிவுக்கு வரும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். கடன் தொடர்பான ஒரு முக்கிய பிரச்சினை முடிவுக்கு வரும்.

ஞாயிறு -
அநேக நன்மைகள் நடக்கும்.பண வரவு தாராளமாக இருக்கும். எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மன நிறைவான நாள்.

வணங்கவேண்டிய தெய்வம் -
சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்று வாருங்கள். அங்கு அமைதியாக தியானம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். எதிர்ப்புகள் அகலும். தேவைகள் பூர்த்தியாகும்.

********************************************************************************

சுவாதி -
அதிக நன்மைகள் நடக்கும் வாரம். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியைத் தரும்.


வெளிநாடு சென்று வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த வாரம் அதற்கான நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.


தொழிலில் வேண்டிய உதவிகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த முதலீடுகள் கிடைக்கும்.பங்கு வர்த்தகத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.பெண்களின் எண்ணங்கள் முழுமையாக நிறைவேறும். தந்தையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.


கலைத்துறையினருக்கு சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும். பெரிய நிறுவனங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவீர்கள். இசைத்துறை மற்றும் நாட்டியக்கலை சார்ந்தவர்கள் அயல்நாடு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலுவலகத்தில் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும்.

செவ்வாய் -
பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவுகள் அதிகமாகும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

புதன் -
மகிழ்ச்சியான நாள். குடும்பத்தினரோடு நேரத்தை செலவிடுவீர்கள். உறவினர்கள் வருகை ஏற்படும்.

வியாழன் -
சில விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். எதிர்பார்த்த தகவல் தாமதமாகும். வியாபார விஷயங்கள் தள்ளிப்போகும்.

வெள்ளி -
வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். பத்திரப் பதிவுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

சனி-
செலவுகள் அதிகமாக ஏற்படும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடுதலாக இருக்கும். ஆதாயம் தரும் பயணம் ஏற்படும்.

ஞாயிறு -
குடும்பத்தினர் தேவைகளை செய்து கொடுப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் முழுமையடையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடிவடையும். தொழில் தொடர்பான முதலீடுகள் சம்பந்தமாக ஒப்பந்தம் ஏற்படும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீவாராஹி அம்மனை வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
****************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்