- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
ரோகிணி-
செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதற்கேற்ற வருமானம் இருந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத நன்மைகள் நடக்கும். நீங்களே ஆச்சரியப்படும் வகையிலான விஷயங்கள் நடக்கும்.
உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் இருமடங்காக இருக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள். புதிய வியாபார கிளைகளை தொடங்குவார்கள்.திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல தகவல் கிடைத்து ஒப்பந்தங்கள் போடுவார்கள்.உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு விரும்பிய கல்வி கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப விஷயம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.
செவ்வாய் -
குடும்பச் செலவுகள் அதிகமாக ஏற்படும். ஆடம்பரச் செலவுகள் உண்டு.வாகன மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.
புதன் -
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வியாபார பேச்சுவார்த்தைகள் லாபகரமாக இருக்கும்.
வியாழன் -
நண்பர்களுக்காக ஒரு சில உதவிகள் செய்து கொடுப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர் விடுமுறையின் காரணமாக செல்வார். அவரின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டியது வரும்.
வெள்ளி -
திருமணம் உள்ளிட்ட சுப பேச்சுவார்த்தைகள் இன்று நல்லபடியாக முடியும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒரு உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.
சனி-
பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதை தள்ளி வையுங்கள். செலவுகள் அதிகமாக இருப்பதால் சிக்கனமாக இருக்கவேண்டும்.
ஞாயிறு -
சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடங்குவீர்கள்.பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். வியாபார பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தரும்.எதிர்ப்புகள் அகலும். மன அமைதி உண்டாகும்.
***************************************************************************
மிருகசீரிடம் -
எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதில் இயல்பாக லாபமும் ஆதாயமும் கிடைக்கப்பெறுவீர்கள். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சேமிப்பு உயரும் . கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாக இருக்கும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உற்பத்தியான பொருட்கள் விறுவிறுப்பாக விற்பனையாகும்.
பங்கு வர்த்தகத் துறையில் எதிர்பாராத அளவுக்கு லாபம் அதிகரிக்கும்.
பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சுப விசேஷ விஷயங்களில் முனைப்பு காட்டுவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான முன்னேற்றத்தைக் காண்பார்கள். குறிப்பாக உயர்கல்வி மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். திரைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும், ஒப்பதங்களால் கிடைக்கப்பெறும் பணம், மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
எதிர்பார்த்த பணம் கடைசி நேரத்தில் கிடைக்கும். மனம் படபடப்பாக இருக்கும்.பதட்டம் இல்லாமல் இருந்தால் வேலைகள் எளிதில் முடியும்.
செவ்வாய் -
பணவரவு இருமடங்காக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். தாமதமான விஷயம் இன்று முடிவுக்கு வரும்.
புதன் -
குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். புதிய வியாபார பேச்சுவார்த்தையை தொடங்குவீர்கள்.மன சஞ்சலம் அகலும்.
வியாழன் -
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நன்மைகள் அதிகமாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வெள்ளி -
செலவுகள் ஏற்படும். தாயாருக்கு மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. தொலைதூரப் பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள்.
சனி-
ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபாரங்கள் சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.
ஞாயிறு -
வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். அதுதொடர்பான நல்ல தகவல் இன்று கிடைக்கும். திருமணம் மற்றும் சொந்த வீடு வாங்குவது போன்ற சுப காரியங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு.
வணங்கவேண்டிய தெய்வம் -
சுப்பிரமணியர் வழிபாடு அதிக நன்மைகளை ஏற்படுத்தி தரும். சண்முக கவசம் தினமும் படித்து வாருங்கள். கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். எதிர்ப்புகள், எதிரிகள் என்பதே இல்லாமல் போகும்.
****************************************************
திருவாதிரை-
நன்மைகள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும் . பதவி உயர்வு கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்பு வரும்.
இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும் .தொழிலில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். கடந்த சில மாதங்களாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் இந்த வாரம் முடிவுக்கு வரும். பங்கு வர்த்தகத்தில் லாபம் இரு மடங்காக இருக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்பட்டு வியாபாரம் வளர்ச்சியாக இருக்கும்.பெண்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.
செவ்வாய் -
பணியிடத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
புதன் -
எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். புதிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.மனத் திருப்தி உண்டாகும் நாள்.
வியாழன் -
தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பயணம் ஒன்று ஏற்படும். தொழில் தொடர்பாக முக்கிய நபர்களை சந்திப்பீர்கள்.
வெள்ளி -
திருமணம் சம்பந்தமான விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சொந்த வீடு வாங்குவதற்கான உதவி கிடைக்கும். முக்கியமான கடன் ஒன்று தீரும்.
சனி-
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். நண்பர்களுக்காக சில உதவிகளை செய்து கொடுக்க வேண்டி வரும். உறவினர்கள் உங்கள் உதவியை எதிர்பார்ப்பார்கள்.
ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். லாபம் தரும் ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஶ்ரீநடராஜர் பெருமானுக்கு அர்ச்சனை செய்து தீபமேற்றி வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
******************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago