வி.ராம்ஜி
சூரியனைப் போற்றி வணங்குவதுதான் பொங்கல் பண்டிகையின் தாத்பரியம். தைத்திருநாளின் தொடக்கமும் பொங்கல் பண்டிகையும் ஒருசேர வருகிற அற்புத நன்னாள்.
அஸ்வத் வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ:சூர்ய பிரசோதயாத்
என்று சூரிய காயத்ரியை மனதாரச் சொல்லி, சூரிய நமஸ்காரம் செய்து, பொங்கல் நன்னாளைக் கொண்டாடுவோம்.
சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியில் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் தொடங்குகிறது. இதையே மகர சங்கராந்தி என்கிறோம்.
சூரிய பூஜை மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலில் கண்களுக்கும் தோல்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரியக்குளியல் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்தானே. தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும் என ஆன்றோர் வலியுறுத்துவதைக் கேட்டிருக்கிறோம்.
மனதில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கு சூரிய வழிபாடு மிகவும் உன்னதமானது. உயிர்ப்புடன் இருக்கச் செய்வது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதனால்தான் பக்தி மார்க்கத்திலும் யோகாவிலும் சூரிய நமஸ்காரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மார்கழி மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது.
தமிழர் திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது ’பொங்கு’ எனும் சொல்லில் இருந்து வந்ததுதான்!
தை மாதம் அறுவடைக்காலம். புது நெல் வந்திருக்கும் .ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது நம்பிக்கை. களத்தில் அறுத்த நெற்கதிர்களில் சிலவற்றை அழகாகப் பின்னி அலங்காரம் போல் செய்து (அதிலிருக்கும் நெல் மணிகளுக்கு கொஞ்சமும் சேதம் வராமல்) அதை வீட்டு முன் வாசலில் தொங்க விடுவார்கள்.
சிறு சிட்டுக் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும். அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அழகாக இருக்கும்.
குருவிகளுக்காகவே அவற்றைப் பின்னுவார்கள். தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்து உண்ணும் பெருந்தன்மை அதில் தெரியும். உணவுச் சுழற்சி பற்றியும் சுற்றுச் சூழல் சமன்பாடு பற்றியும் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும்.
வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையைத் தரும் விழாவாக அமைந்துள்ளது பொங்கல் நன்னாள். அதனையே பொங்கல் பொங்கி வரும் போது ’பொங்கலோ பொங்கல்’ என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லி, குலவையிட்டு பானையில் அரிசியையும், பாலையும் இட்டு மகிழ்ச்சியானது பொங்கித்ததும்பும் விழாவாக அமைந்து உள்ளது.
பானையின் கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதி பூசி, சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டு அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்து பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பார்கள்.
பொங்தித்தள்ளும் அந்த நுரைத்த பால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் கொள்வார்கள். கிழக்கு, வடக்கு, நோக்கி பால்வழிந்தால் நல்லதென மகிழ்வார்கள். சிலர் பொங்கிய தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்கு எடுத்துச் சென்று தெளிப்பார்கள்.
பால் போல் மனமும் நீர் போல் தெளிவும் வார்த்தையில் இனிமையும் கொண்டு சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்தும் மங்கல விழாதான் இந்தப் பொங்கல் பண்டிகையின் தாத்பரியம்.
தை மாதப் பிறப்பான பொங்கல் நன்னாளில், கோலப்போட்டி, உறியடித்தல், கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் முதலானவை நடைபெறும்.
மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுதல் வழக்கம்.
பழையன கழிப்போம். புதியன பெறுவோம். பொங்கலைக் கொண்டாடுவோம்!
******************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago