இந்த வார நட்சத்திரப் பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? (ஜனவரி 6 முதல் 12 வரை) திருவோணம், அவிட்டம், சதயம்

By செய்திப்பிரிவு


’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

திருவோணம் -
அதிக நன்மைகள் ஏற்படும் வாரம் . பணவரவு தாராளமாக இருக்கும். லாபம் இருமடங்காக ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஒருசிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பாக பதவி உயர்வு கிடைக்கும்.
தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரிகள் வியாபாரத்தில் அபரிமிதமான லாபத்தைக் காண்பார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். எதிர்பாராத சொத்து சேர்க்கையும் உண்டாகும்.
மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள். உயர் கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்,சேமிப்பு உயரும், சொத்துக்கள் வாங்குவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக இருக்கும்.

செவ்வாய் -
வியாபாரம் ஒப்பந்தங்கள் முடிவடையும். இடம் பூமி சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தை சாதகமாக இருக்கும். தொலைபேசி வழித் தகவலால் மனம் மகிழ்ச்சியடையும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

புதன் -
எதிர்காலம் கருதி சேமிப்புகளை தொடங்குவீர்கள். முதலீடுகளில் முதலீடு செய்ய ஆர்வம் ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடியும்.

வியாழன் -
பெருமளவு நன்மைகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய உச்சம் ஏற்படும். தொழில் தொடர்பான முன்னேற்றமான தகவல் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

வெள்ளி -
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.வியாபார நிமித்தமாக பயணங்கள் ஏற்படும். வாகனச் செலவுகள் ஏற்படும்.

சனி-
மன நிறைவு தரும்படியான சம்பவங்கள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

ஞாயிறு -
உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். எந்த பிரச்சினைகளில் இருந்தும் சற்று விலகியே இருங்கள். உங்கள் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை அம்மனை வணங்குங்கள். ஸ்ரீ துர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள் நன்மைகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

********************************************


அவிட்டம் -
சாதகமான பலன்கள் நடைபெறும் வாரம் . சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.அலுவலகத்தில் சகஜமானநிலையே நீடிக்கும். எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒரு குழுவுக்கு தலைமை ஏற்க வேண்டியது வரும்.
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்துவதற்கான வங்கிக் கடன் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். உங்கள் பெயரிலேயே புதிய சொத்துக்கள் வாங்கும் நிலை ஏற்படும்.
மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான முன்னேற்றத்தைக் காண்பார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் புதிய உச்சத்தைத் தொடுவார்கள். கிளைகளை ஆரம்பிக்கும் எண்ணமும் ஏற்படும்.
கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். அயல்நாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். செலவுகள் கூடும். வாகன மாற்றம் சிந்தனை உருவாகும் மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.

செவ்வாய் -
நீண்ட நாளாக முடியாமல் இருந்த வேலை இன்று சுலபமாக முடியும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியான எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.

புதன் -
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.

வியாழன் -
வியாபார விஷயமாக பயணங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.

வெள்ளி -
சுபகாரிய விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும்.

சனி-
செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவைகளுக்காக அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டியது வரும்.தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும்.

ஞாயிறு -
வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் தொழில் தொடர்பான முக்கிய நபர்களை சந்தித்து ஆதாயம் பெறுவீர்கள் சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்கள் முன்னேற்றமாக இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வணங்குங்கள் ஸ்ரீ வாராஹி மூலமந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் கூடும் தேவைகள் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும்.

********************************************************

சதயம் -
எதிர்பார்த்த நன்மைகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத நன்மைகளும் நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தன வரவு தாராளமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
உத்தியோகத்தில் சகஜமான நிலை நீடிக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான அத்தனை உதவிகளும் கிடைக்கும். பெண்கள் தங்கள் உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். ஒற்றுமை பலப்படும்.திருமண முயற்சிகள் கைகூடும்.
புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஆண் வாரிசுக்காக ஏங்கியவர்களுக்கு இப்பொழுது ஆண் வாரிசு கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பது மட்டுமல்லாமல் புதிய கிளைகளை தொடங்கவும் முற்படுவார்கள்.
கலைஞர்களுக்கு எதிர்பாராத அளவுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். தங்கள் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க முற்படுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
நெருக்கடி தந்து கொண்டிருந்த கடன் பிரச்சினை இப்பொழுது முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும்.

செவ்வாய் -
வெளிநாடு தொடர்பு உடைய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து ஒப்பந்தங்களாக மாறும் நிலைக்கு வரும்.

புதன் -
பெருமளவு நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவது தொடர்பான முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.

வியாழன் -
வெளிநாடு செல்லும் முயற்சி சாதகமாக இருக்கும். அயல்நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும்.ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வெள்ளி -
குடும்ப நலன் சார்ந்த ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு உயரும் . குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடுகள் செய்வீர்கள்.

சனி-
பணவரவு தாராளமாக இருக்கும். லாபகரமான ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

ஞாயிறு -
எந்த புதிய முயற்சிகளிலும் இறங்க வேண்டாம். பேச்சுவார்த்தை எதிலும் ஈடுபட வேண்டாம். உங்கள் கருத்துக்களை மற்றவர்களிடம் திணிக்க முயற்சிக்காதீர்கள். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
காவல் தெய்வங்களாக இருக்கும் எல்லை தெய்வங்களை வணங்குங்கள். காவல் தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை சூட்டி வணங்குங்கள். மனநிறைவு உண்டாகும்.

************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்