- சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
விசாகம் -
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் வாரம் . பணவரவு கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு மதிப்பு மரியாதை கிடைக்கும். சக ஊழியர்களால் பாராட்டு பெறுவீர்கள். தொழிலில் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உற்பத்தியான பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும்.
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும், வியாபாரிகள் புதிய கடைகளை ஆரம்பிப்பார்கள். பெண்களுக்கு தந்தை வழியில் சேர வேண்டிய சொத்துக்கள் சேரும், புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள பெண்கள் அனைவருக்கும் தேவையான உதவிகள் கிடைக்கும். இதுவரை வேலையில்லாமல் இருந்த பெண்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும், சொத்துக்கள் வாங்குவார்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
வியாபார பேச்சுவார்த்தைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வரும். அலுவலக வேலைகளை, ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியதிருக்கும்.பிள்ளைகளின் கல்விக்காக செலவுகள் செய்ய வேண்டியது வரும்.
செவ்வாய் -
தேவையான பண உதவிகள் கிடைக்கும். முக்கியமான வேலைகள் அனைத்தும் இன்று விறுவிறுப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
புதன் -
பராமரிப்பு செலவுகள் அதிகமாக இருக்கும். மின்சார பொருட்களை புதிதாக மாற்ற வேண்டியது வரும். அலைச்சல் அதிகரிக்கும்.
வியாழன் -
வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்கள் இன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.
வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான முக்கிய பிரச்சினை தீரும். அடகு பொருட்களை மீட்க வழி கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
சனி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.தொழில் முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.
ஞாயிறு -
வியாபார விஷயங்கள் யாவும் வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு, அதற்குத் தேவையான உதவிகள் இன்று கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரக வழிபாடு நன்மை உண்டாக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
*************************************************************
அனுஷம் -
பெருமளவு நன்மைகள் நடைபெறும். பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் வேண்டும். யாருக்கும் உத்தரவாதம் தந்து பேசக்கூடாது. காசோலைகள் தரும்பொழுது அதிக கவனத்துடன் இருக்கவேண்டும். உத்தியோகத்தில் பெரிய மாறுதல் ஏதும் இருக்காது. சக ஊழியர்களை பற்றி தேவையற்ற கருத்துக்களை கூற வேண்டாம். தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் இருந்தாலும், ஒரு சில நெருக்கடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். பெண்கள் தங்கள் குடும்பத்தாருடன் தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் கல்வியில் அதிக சிரத்தை எடுக்க வேண்டும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், ஒப்பந்தங்கள் ஏற்படும். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் கருத்துக்களை வெளியிடும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும்.
இந்த வாரம் -
திங்கள் -
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். வீடு விற்பது வாங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும்.வியாபார வளர்ச்சி ஏற்படும். பெண்கள் ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
செவ்வாய் -
மன அழுத்தங்கள் ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகள் தேடிவரும். பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும்.
புதன் -
தொழிலில் இருந்த ஒரு நெருக்கடி தீரும்.வியாபாரப் பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.முக்கியமான கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.
வியாழன் -
வீட்டுப் பராமரிப்பு செலவுகள் அதிகமாக இருக்கும். வாகனப் பழுது ஏற்படும். வாகன மாற்றச் சிந்தனை ஏற்படும். சேமிப்பிலிருந்து ஒரு சில செலவுகள் செய்வீர்கள்.
வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி அடையும். இடம் பூமி சம்பந்தப்பட்ட வியாபாரப் பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தும் இன்று செய்து முடிப்பீர்கள்.
சனி-
வேறு வேலைக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணவரவு இன்று கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
ஞாயிறு -
நன்மைகள் அதிகமாக நடைபெறும். குடும்பத்தில் சுப விசேஷம் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடக்கும். ஆதாயம் தரும் வியாபாரம் வெற்றியாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
சித்தர் பெருமக்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வாருங்கள். அமைதியாக தியானம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். பிரச்சினைகள் விலகும்.
*************************************************************
கேட்டை -
எந்த ஒரு பிரச்சினையிலும் தலையிடாமல் இருந்தால் நன்மைகள் அதிகமாக ஏற்படும். எவரிடமும் எதற்காகவும் வாக்குவாதங்கள் செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியது வரும்.தொழிலில் அரசு வழியில் ஒரு சில நெருக்கடிகள் தோன்றும். இயந்திரங்கள் தொடர்பான பழுதுகள் ஏற்படும். கணக்கு வழக்குகளில் சில குறைபாடுகள் ஏற்படும் வியாபாரம் சீராக இருக்கும்.
கலைஞர்களுக்கு பொறுமை காப்பதும், நிதானத்தை இழக்காமல் இருப்பதும் நல்லது. பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். சகோதரர்களிடம் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
அலுவலகத்திலும் பொதுவெளியிலும் ஒருசில எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பொறுமை மிக மிக அவசியம்.
செவ்வாய் -
எதிர்பார்த்த ஒரு சில நல்ல விஷயங்கள் நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நெருக்கடி தந்த பிரச்சினை ஒன்று சத்தமில்லாமல் விலகும்.
புதன் -
உதவி கேட்டு பலரும் உங்களிடம் வருவார்கள். நீங்களே பல பிரச்சினைகள் இருப்பதால் யாருக்கும் உதவ முடியாத ஒரு சூழ்நிலை உருவாகும். இதனால் ஒரு சில மன வருத்தங்கள் ஏற்படும்.
வியாழன் -
நேற்றைய பிரச்சினை ஒன்று இன்றைக்கு முடிவுக்கு வரும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை தருவதாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
வெள்ளி -
வேலைக்காக வேறு நிறுவனத்திற்கு மனு செய்வீர்கள். அதற்கு நல்ல பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரரால் ஆதாயம் உண்டாகும்.
சனி-
கடன் பிரச்சினை ஒன்றை பேசித் தீர்ப்பீர்கள். வங்கியில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்று தீரும். தொழில் தொடர்பான முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். வியாபாரம் சீரான வளர்ச்சியில் இருக்கும்.
ஞாயிறு -
நண்பர்களால் உதவி கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும் நாள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் பெருமானுக்குசெவ்வரளி மலர் சூட்டி வெண்பொங்கல் நிவேதனம் செய்யுங்கள். பிரச்சினைகள் தீரும். எதிர்ப்புகள் குறையும். நன்மைகள் பெருகும்.
****************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago