இந்த வார நட்சத்திரப் பலன்கள் - (ஜனவரி 6 முதல் 12 வரை) புனர்பூசம், பூசம், ஆயில்யம்: எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? 

By செய்திப்பிரிவு


'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


புனர்பூசம் -
அதிக நன்மைகள் நடக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். புதிதாகத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தொழில் அபார வளர்ச்சி ஏற்படும்.
வியாபாரிகள் நல்ல லாபம் கிடைக்கப்பெறுவார்கள். புதிய வியாபாரக் கடைகள் ஆரம்பிப்பார்கள். பெண்கள் தங்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக இந்த வாரம் இருக்கும்.ஆபரண சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சி கைகூடும். மாணவர்கள் கல்வியில் சுமாரான முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். எதிர்பார்த்த வங்கிக்கடன் தள்ளப்போகும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

இந்த வாரம்-

திங்கள்-
ஒரு சில விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணவரவு தாமதமாகும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டே போகும். வேலையில் கூடுதல் சுமை ஏற்படும்.

செவ்வாய்-
கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். தொழில் வளர்ச்சி ஏற்படும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

புதன்-
எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தேவையற்ற பிரச்சினைகள் தலை தூக்கும். பொறுமையாக இருப்பது நல்லது.

வியாழன் -
தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

வெள்ளி -
திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

சனி-
வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

ஞாயிறு -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வாருங்கள். தடைகள் அகலும். நினைத்தது நடக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.
****************************************************

பூசம் -
பெருமளவு நன்மைகள் நடைபெறும். நினைத்தது நிறைவேறும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பாராத லாபகரமான ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
தொழில் தொடர்பான முக்கியமான நபரை சந்திப்பதால் தொழிலில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றம் ஏற்படும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தோல்வியடைந்த பாடங்களை மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு இந்த வாரம் நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைத்து, வேலைவாய்ப்பு உறுதியாகும்.வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புதிய வியாபார முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
வாரத்தின் தொடக்க நாளே வெற்றிகரமான நாளாக இருக்கிறது. ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு வர்த்தகம் லாபம் தரும் நாளாக இருக்கும். வியாபாரம் வளர்ச்சி அடையும்.வியாபாரம் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும்.

செவ்வாய் -
முக்கிய கடனை திருப்பிச் செலுத்துவீர்கள். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் செய்து முடித்த வேலைகளில் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டியது வரும்.

புதன் -
பணவரவில் திருப்திகரமான நாள். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறி பத்திரப்பதிவு வரை செல்லும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் புதிய வியாபாரக் கிளைகளை ஆரம்பிப்பார்கள்.

வியாழன் -
அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையைச் செய்ய வேண்டியது வரும். இல்லத்தில் பராமரிப்புச் செலவுகளும் ஏற்படும். மின்சாரப் பொருட்கள் பழுதடையும். அது தொடர்பான செலவுகள் ஏற்படும்.

வெள்ளி -
மனநிறைவு ஏற்படுத்தக் கூடிய நாளாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் சாதகமாகும்.

சனி-
வீண் அலைச்சல்கள் ஏற்படும். வாகனப் பழுது ஏற்படும். சம்பந்தமில்லாத செலவுகளைச் செய்ய வேண்டியது இருக்கும். சிக்கனமாக இருக்க வேண்டும்.

ஞாயிறு -
நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
தட்சிணாமூர்த்தி குருபகவானுக்கு கொண்டை கடலை நிவேதனம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
****************************************************

ஆயில்யம் -
இதுநாள்வரை உழைத்த உழைப்பின் பலன்களை இந்த வாரம் திரும்பப் பெறுவீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் , பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
தொழிலில் எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் ஏற்படும். இதுவரை தொழில் செய்யாதவர்கள் கூட இப்போது தொழில் தொடங்கும் ஆர்வம் ஏற்படும். அதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பெண்களுக்கு தந்தை வழி சொத்துகள் சேரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய கல்வி கற்கும் ஆர்வம் உண்டாகும், அது தொடர்பான பயிற்சி வகுப்புகளில் சேர்வீர்கள். கலைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அயல்நாடு சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலுவலக ரீதியாகவோ அல்லது வியாபார ரீதியாகவோ பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பணவரவு தாமதமானாலும், கடைசி நேரத்தில் கிடைத்துவிடும்.

செவ்வாய் -
நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலை இன்று முடிந்துவிடும். அதனால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். தன வரவு தாராளமாக இருக்கும். இடம் வீடு சம்பந்தமான வியாபாரப் பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக முடியும்.

புதன் -
அலுவலக வேலைகளில் ஒரு சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும்.வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருந்தாலும், ஒப்பந்தங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படும்.

வியாழன் -
அதிக நன்மைகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வெள்ளி -
சுபகாரிய விஷயங்களுக்காக செலவு செய்ய வேண்டிவரும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்துவிடுவீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

சனி-
இழுபறியாக இருந்த வேலையை இன்று திட்டமிட்டு சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். பணவரவு உண்டு.தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு உற்சாகத்தைத் தரும்.

ஞாயிறு -
வெளிநாடு செல்லும் முயற்சிக்கான முக்கிய தகவல் இன்று கிடைக்கும். நீண்ட நாளாக சந்திக்க முடியாமல் இருந்த நபரை இன்று சந்திப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக முடியும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
தாய் மூகாம்பிகை அம்மனை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். எந்தத் தடைகளும் வராமல் காத்தருள்வாள்.
********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்