’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
ரோகிணி -
செலவுகள் இருமடங்காக ஏற்படும். சேமிப்புகள் கரையும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மின்சாரப் பொருட்கள் பழுதடையும். அலுவலகத்தில் இயல்பாக இருங்கள். யாரிடமும் எதற்காகவும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். வியாபாரம் சீராக இருக்கும். பெண்கள் - குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் என எவரிடமும் அளவாகப் பேசுங்கள். மாணவர்களுக்கு கல்வியைத் தவிர மற்ற விஷயங்களில் அதிக ஆர்வம் ஏற்படும், எனவே மனதை கட்டுப்படுத்துங்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அலட்சியமாக இருந்து எதையும் கோட்டை விட்டுவிடவேண்டாம். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். அதிக கவனமும், எச்சரிக்கை உணர்வும் தேவை.
இந்த வாரம் -
திங்கள் -
தேவையான உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும் அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
செவ்வாய் -
தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைத் தரும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு குடியுரிமை தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
புதன் -
வேலை மாற்றம் பற்றிய ஒரு நல்ல தகவல் கிடைக்கும்.தொழில் சம்பந்தமான முன்னேற்றமான விஷயங்கள் நடக்கும்.ஆரோக்கியம் பற்றிய அச்சுறுத்தல் ஒன்றுமில்லாமல் போகும்.
வியாழன் -
வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். பத்திரப் பதிவுகள் நடக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும்.
வெள்ளி -
வாகன மாற்றம் சிந்தனை உண்டாகும். அல்லது வாகன பழுது ஏற்படும்.செலவுகள் அதிகமாக ஏற்படும். உங்களுக்கு தொடர்பில்லாத ஒரு பிரச்சினையில் மனக்குழப்பம் உண்டாகும்.
சனி-
வியாபாரம் தொடர்பான பயணம் ஏற்படும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். அடகு பொருட்களை மீட்பதற்கு உதவி கிடைக்கும்.
ஞாயிறு -
குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் செலவு செய்ய வேண்டியது வரும். குழந்தைகளின் கல்விக்காக புதிய பயிற்சி வகுப்புகளில் சேர்த்து விடுவீர்கள். வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
சீனிவாச பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
*******************************************************
மிருகசீரிடம் -
மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். செலவுகள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக ஏற்படும். மருத்துவச் செலவுகளும் உண்டு.
தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கூட வாக்குவாதங்கள் செய்யவேண்டாம். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகலாம். அரசு வழியில் ஒரு சில நெருக்கடிகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பெண்கள் குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்லவேண்டும். அக்கம்பக்கத்தினருடன் தேவையில்லாத சச்சரவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
மாணவர்கள் கல்வியில் தீவிரமான கவனம் செலுத்த வேண்டும். கலைஞர்கள் பொறுமை காத்திருந்தால் நன்மைகள் நடக்கும்.வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அளவான வளர்ச்சியைக் காண்பார்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
ஒரு சில நெருக்கடிகள் தோன்றும்.தேவையில்லாத சர்ச்சைகளில் ஈடுபட வேண்டியது வரும். அமைதியாக இருப்பது நல்லது. தொலைதூரப் பயணங்கள் ஏதும் இருந்தால் தள்ளி வைக்க வேண்டும்.
செவ்வாய் -
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த உதவி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பணத்தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
புதன் -
நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய ஒரு நபரை இன்று சந்திப்பீர்கள். அவரால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டுக்குச் செல்லும் முயற்சி வெற்றியாகும். வேலை மாற்றம் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
வியாழன் -
கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.வழக்குகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் நம்பிக்கை தருவதாக இருக்கும்.
வெள்ளி -
நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும் வியாபாரப் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நினைத்த மாதிரியே நடந்து முடியும்.
சனி-
நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். மருத்துவச் செலவு ஏற்படவும் வாய்ப்புண்டு.
ஞாயிறு -
வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இந்த நாள் இருக்கும்.சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு எதிர்ப்புகளையும் எதிரிகளையும் இல்லாமல் செய்துவிடும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும்.
**********************************************************
திருவாதிரை -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்க கூடிய வாரமாக இந்த வாரம் அமையும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சேமிப்புகள் உயரும் . கடன் பிரச்சினைகள் தீரும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோகத்தில் இயல்பான நிலையே நீடிக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். தொழில் தொடர்பான அத்தனை உதவிகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும், தந்தை வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மந்தநிலை தொடர்ந்தாலும், கடும் முயற்சி எடுத்து தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகத் துறையில் இருப்பவர்கள் அனைவருக்கும் அற்புதமான வாய்ப்புகள் கிடைத்து, உங்கள் நிலையை உயர்த்திக் கொள்வீர்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
வங்கியில் எதிர்பார்த்த கடன் இன்று கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது இடமாற்றம் பற்றிய தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.
செவ்வாய் -
வியாபாரப் பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தையில் அடுத்த நிலைக்கு செல்லுகின்ற நாளாக இந்த நாள் இருக்கும்.
புதன் -
பெரிய அளவிலான உதவிகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் நிறைவேறும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் இன்று கிடைக்கும்.
வியாழன் -
வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி உண்டாகும். அது தொடர்பான முக்கிய தகவல் இன்று கிடைக்கும்.தொழில் தொடர்பான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் இன்று கிடைக்கும்.
வெள்ளி -
திடீர் அதிர்ஷ்டம் போல் ஒரு சில காரியங்கள் நடக்கும். எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
சனி-
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். நீண்ட நாளாக வராமலிருந்த பணத்தை இன்று வசூல் செய்து காட்டுவீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும்.புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
ஞாயிறு -
வாகனம் புதுப்பித்தல், வீட்டை புதுப்பித்தல் போன்ற பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.நண்பர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படும்.புதிய முயற்சிகள் ஏதும் தொடங்க வேண்டாம்.
வணங்கவேண்டிய தெய்வம் -
மதுரை மீனாட்சி அம்மனை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்த காரியம் நினைத்தபடி முடியும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும்.
*******************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago