இந்த வார நட்சத்திரப் பலன்கள் - (ஜனவரி 6 முதல் 12 வரை) அஸ்வினி, பரணி, கார்த்திகை : எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? 

By செய்திப்பிரிவு

'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்வினி -
சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம் . தேவைகள் பூர்த்தியாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கியமான விஷயங்களில் நன்கு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அவசர முடிவுகள் கூடாது. வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வும் கிடைக்கலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். ஆரோக்கியத்தில் தேவையற்ற ஒரு அச்ச உணர்வு வந்து போகும்.பெண்கள் தாங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பொருள் சேர்க்கை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆதாயம் கூடும்.கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அலட்சியம் கூடாது.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த நன்மைகள் மட்டுமல்லாமல், எதிர்பாராத நன்மைகளும் நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

செவ்வாய் -
பயணங்கள் அதிகமாக ஏற்படும். அலைச்சல் மிக்க வேலைகளாகவே இன்று அமையும்.மனதில் இனம் புரியாத பயம் ஏற்படும்.

புதன் -
வியாபாரத் தொடர்புகள் சுமுகமாக இருக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இருக்கும். சொத்து வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் லாபத்தைத் தரும்.

வியாழன் -
முக்கியமான பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போகும். ஒப்பந்தங்கள் போடுவதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் செய்த வேலையை மீண்டும் திருத்திச் செய்ய வேண்டியது வரும்.

வெள்ளி -
முக்கியமான கடன் பிரச்சினை ஒன்று தீரும்.தடைகள் ஏற்பட்டிருந்த வியாபாரப் பேச்சுவார்த்தைகள் இன்று சுமூகமாக முடிவடையும். தொழில் தொடர்பான முதலீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

சனி-
அடுத்தவர் வேலையை நீங்கள் செய்ய வேண்டியது வரும். கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வார்த்தைகளில் கவனம் தேவை.

ஞாயிறு -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் சுபகாரிய விஷயங்கள் பேசி முடிக்கப்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
முருகப் பெருமான் வழிபாடு நன்மைகளை அதிகப்படுத்தும். எடுக்கின்ற முடிவுகள் சாதகமாக இருக்கும்.
***********************************************************

பரணி -
குடும்ப நலன் சார்ந்து ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் சகஜமான நிலை இருக்கும். இடமாற்றம் வேண்டி விண்ணப்பிக்க வேண்டியது வரும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படும்.
தொழிலை விரிவுபடுத்துவதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். உற்பத்தியான பொருட்கள் உடனடியாக விற்பனையாகும். கட்டுமானத் தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு. பங்கு வர்த்தகத் துறை அளவான லாபத்தை தரும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பெண்கள் தங்களின் சுய தேவைகளை பூர்த்தி அதுமட்டுமல்லாமல் சொத்து சேர்க்கை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
அதிக அளவு நன்மைகள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய சிந்தனை ஒன்று தோன்றும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

செவ்வாய் -
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக மாறும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றிகரமாக முடியும்.

புதன் -
செலவுகள் அதிகமாக ஏற்படும். எதிர்பாராத செலவுகளும் உண்டு. உடல்நலத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு. தொழில் செய்யும் இடத்தில் இயந்திரங்கள் பழுது சம்பந்தமான செலவுகள் ஏற்படும்.

வியாழன் -
வியாபாரம் தொடர்பான ஒரு சில ஒப்பந்தங்கள் ஏற்படும். பேச்சுவார்த்தைகள் சுமூகமாக இருக்கும். இடம் வீடு சம்பந்தமான வியாபாரங்கள் வெற்றிகரமாக முடியும். பத்திரப்பதிவு உள்ளிட்ட விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு.

வெள்ளி -
பயணங்கள் ஏற்படும். அலுவலக விஷயமாகவோ அல்லது தொழில் ரீதியாக ஒரு முக்கிய நபரை சந்திக்க வேண்டியது வரும். அலுவலகத்தில் அரைகுறையாக நின்ற வேலைகள் இன்று முழுமையாக செய்து முடிப்பீர்கள்.

சனி-
வங்கி தொடர்பான விஷயங்கள் சுமுகமாக இருக்கும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக சுபச் செலவுகள் செய்வீர்கள்.

ஞாயிறு -
முக்கிய சந்திப்புகள் எதுவும் இருந்தால் தள்ளி வையுங்கள். பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. ஒப்பந்தங்கள் எதுவும் போட வேண்டாம். முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம், பகை கடிதல் பாராயணம் செய்யுங்கள். தடைகள் அகலும்.நன்மைகள் அதிகமாகும்.
******************************************

கார்த்திகை -
வாரத்தின் பெரும்பாலான நாட்கள் நன்மையையும், ஒரு சில நாட்கள் மன குழப்பத்தையும் தரும். அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் அனைவரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள். உயரதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள்.
சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைக் காண்பார்கள். புதிய கிளைகளை துவங்குவதற்கான வாய்ப்பு உண்டு.பெண்கள் சுய தொழில் தொடங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அலட்சியமாக இருக்கக்கூடாது. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
வெளிநாடு செல்லும் முயற்சியில் இந்த நல்ல தகவல் கிடைக்கும். அலுவலகத்தில் இடமாற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான மிகப்பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். கடன் சம்பந்தப்பட்ட உதவி ஒன்று கிடைக்கும்.

செவ்வாய் -
வேலை மாறுவதற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

புதன் -
வியாபார ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடியும். லாபம் இருமடங்காக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வேண்டிய உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

வியாழன் -
தொழில் தொடர்பான பயணம் ஒன்று ஏற்படும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்பு உண்டாகும். கடன் சம்பந்தப்பட்ட நெருக்கடி ஒன்று முடிவுக்கு வரும்.

வெள்ளி -
ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொத்து விற்பது வாங்குவது தொடர்பான வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

சனி-
ஒரு சில மருத்துவச் செலவுகள் ஏற்படும். உடலில் அசதி சோர்வு போன்றவை தோன்றும். மனதில் கவலைகள் ஏற்படும்.

ஞாயிறு -
நண்பர்களால் ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்று முடியும். ஒரு முக்கியமான கடனை அடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்க உதவிகள் கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
சிவாலயத்தில் சிவபெருமானுக்கும், நந்தியம் பெருமானுக்கும் அபிஷேக ஆராதனை செய்யுங்கள். மனம் தெளிவாகும். எண்ணங்கள் செயல்வடிவம் பெறும்.
*********************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்