இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்கிற குழப்பம் ஏற்படும். நீங்கள் சாதாரணமாக சொல்லக்கூடிய சில கருத்துகள்கூட சீரியசாகக் கூடும்.

ரிஷபம்: வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வேலைச்சுமை குறைந்து சற்று ஓய்வெடுப்பீர்கள்.

கடகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும்.

சிம்மம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பணம் வரவு உயரும்.

கன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் மனம் நோகும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள். எதிர்பார்த்த பணம் நீண்ட இழுபறிக்குப் பின்னர் வரும்.

துலாம்: சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும் எதிர்பார்த்த வேலைகள் உடனுக்குடன் முடியும்.

தனுசு: மனைவிவழியில் ஆதரவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விடுங்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பணவரவு உண்டு.

மகரம்: சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். பண தட்டுப்பாட்டை சமாளித்து விடுவீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் தக்கசமயத்தில் பண உதவி செய்வார்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும்.

மீனம்: எதிர்பார்ப்புகள் அடுத்தடுத்து நிறைவேறும். குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அரசு காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்