ஜோதிடர் ஜெயம் சரவணன்
மூலம் -
உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளாமல் இருந்தாலே பிரச்சினைகள் பெரிதும் எதுவும் இருக்காது.
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் எப்படியாவது முடித்து விடுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் முதல் உயரதிகாரிகள் வரை எல்லோரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள். உங்கள் கருத்திலேயே பிடிவாதமாக இருக்க வேண்டாம். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்துவதற்கான முதலீடுகள் கிடைக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். புதிய கிளைகளை தொடங்கும் ஆர்வம் ஏற்படும்.திருமணம் தாமதப்பட்டு கொண்டிருந்த பெண்களுக்கு இந்த வாரம் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மாணவர்கள் தங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்புகள் இந்த வாரம் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையினர் பங்குகளில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
சில எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.பேச்சு வார்த்தையும் தள்ளிப்போகும்.வியாபாரத்தில் ஆதாயம் குறையும்.
செவ்வாய் -
கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும். அடகு வைத்த பொருட்களை மீட்பதற்கு வழி கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
புதன் -
ஆலய வழிபாடு ஏற்படும். மகான்கள் சந்திப்பு உண்டாகும். எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
வியாழன் -
வேண்டிய உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் சாதகமாகும்.
வெள்ளி -
சொத்து விற்பனை தொடர்பான விஷயங்கள் நன்மை தரும்.வேலை இல்லாமல் இருந்தவருக்கு இன்று வேலைக்கான வாய்ப்பு கிடைக்கும். வங்கிக் கடன் தொடர்பான தகவல் நம்பிக்கை தருவதாக இருக்கும்.
சனி-
நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தூரத்து உறவினர் ஒருவரால் நன்மைகள் நடக்கும்.தொழில் தொடர்பாக புதிய நபரை சந்திக்க வேண்டியது வரும்.
ஞாயிறு -
நீண்ட நாளாக பேசிவந்த வியாபாரம் இன்று நல்ல முடிவுக்கு வரும். புதிய வியாபாரத் தொடர்பு ஒன்று ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். முடிக்காமல் இருந்த முக்கியமான வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள்.
வணங்கவேண்டிய தெய்வம் -
திருவக்கரை வக்கிரகாளி மற்றும் சிதம்பரம் தில்லைக் காளி வழிபாடு நன்மைகள் தரும். எதிர்ப்புகளை விலக்கும்.
*******************************************************
பூராடம் -
கடந்த சில நாட்களாக இருந்த குழப்பமான மனநிலையில் இருந்து வெளியே வருவீர்கள்.
தெளிவான சிந்தனை தோன்றும். பணவரவு தாராளமாக இருக்கும். கடந்த சில நாட்களாக இருந்த அழுத்தங்கள் தற்போது குறையும். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். தொழில்வளர்ச்சி அமோகமாக இருக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புதிய கிளைகளை துவக்குவார்கள். பெண்கள் தங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் காண்பார்கள்.மருத்துவச் செலவுகள் குறையும்.கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
பங்கு வர்த்தகத் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்பத்தில் சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.வியாபார பேச்சுவார்த்தையில் திருப்தி இருக்கும்.
செவ்வாய் -
குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் வாகனப் பழுது செலவுகள் என ஏற்படும்.ஆடம்பரச் செலவுகளும் உண்டு.
புதன் -
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவைகள் பூர்த்தியாகும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.
வியாழன் -
தொழில் தொடர்பான பயணம் ஏற்படும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போகும். ஒப்பந்தங்கள் போடுவதில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
வெள்ளி -
நேற்றைய வேலைகள் இன்று நல்லபடியாக முடியும்.வியாபாரம் முடிந்து லாபம் கிடைக்கும்.தொழிலில் நல்ல அபிவிருத்தி ஏற்படும்.
சனி-
மன அழுத்தம் தந்து கொண்டிருந்த கடன் பிரச்சினை தீரும்.வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும் நீண்ட நாளாக முடிக்காமல் இருந்த வேலை இன்று எளிதாக முடியும்.தொழில் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.
ஞாயிறு -
எதிர்காலத் திட்டங்களை வகுப்பீர்கள். அடுத்த வாரத்திற்கான வேலைகளை இன்று திட்டமிட்டு கொள்வீர்கள்.வியாபார விஷயமான பயணம் ஏற்படும். அதில் ஆதாயம் கிடைக்கும். நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சியில் இறங்க திட்டமிடுவீர்கள்.
வணங்கவேண்டிய தெய்வம் -
பெருமாள் ஆலயத்தில் இருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு வெண்பொங்கல் நிவேதனம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாக நடக்கும்.பணவரவு அதிகரிக்கும்.
*****************************************************
உத்திராடம் -
சுப விசேஷங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சுப செலவுகளுக்காக கடன் வாங்குவீர்கள்.
உத்தியோகம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். பணி இடத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. இட மாற்றம் விரும்பியவர்களுக்கு தகுந்த இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு உள்ளிட்ட விஷயங்கள் எளிதாகக் கிடைக்கும்.
சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் வியாபாரக் கடைகள் நடத்தி கொண்டிருப்பவர்களுக்கும் அற்புதமான பலன்கள் நடைபெறும். லாபம் இரு மடங்காக இருக்கும், கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர வழி கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்பொழுது நனவாகும்.
வேலை இல்லாத பெண்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்டவை இயல்பாகக் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும்.
இந்த வாரம் -
திங்கள் -
தொழில் தொடர்பாக அல்லது வியாபார விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். சேமிப்பிலிருந்து ஒருசில விஷயங்களுக்காக செலவிட வேண்டியது வரும்.
செவ்வாய் -
வீடு வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் இன்று சாதகமாக இருக்கும் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணம் தொடர்பான விஷயங்களுக்கான நல்ல தகவல் கிடைக்கும்.
புதன் -
குடும்பத்தினருக்காகவும் நண்பர்களுக்காகவும் செலவு செய்ய வேண்டியது வரும்.நீண்ட நாளாக பேசிவந்த ஒரு வியாபாரம் இன்று நல்ல முடிவுக்கு வரும். ஆதாயம் தரும் விஷயங்கள் நடக்கும்.
வியாழன் -
சாதகமான தகவல்களை இன்று எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும்.
வெள்ளி -
தொலைதூரப் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்த்து கையெழுத்திட வேண்டும்.
சனி-
தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும்.
ஞாயிறு -
எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான நல்ல தகவல் இன்று கிடைக்கும். முக்கியமான நபரை சந்திப்பதால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
திருமலை திருப்பதி சீனிவாச பெருமாளை வணங்கி வாருங்கள். அதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.
*****************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago