இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்

வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று, நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்

தேவையற்ற அச்சம், கவலை, மன உளைச்சல் நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, கலகலப்பாக சிரித்துப் பேசும் சூழல் அமையும். தந்தை வழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு.

மிதுனம்

திறமையுடன் செயல்பட்டு, கடினமான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். மனக் குழப்பங்கள் நீங்கும். புதிய நபர்களால் நன்மை உண்டு. தந்தை உடல்நலத்தில் கவனம் தேவை.

கடகம்

கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய், பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராடவேண்டி வரும்.

சிம்மம்

எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

கன்னி

அரசு, வங்கி காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். விலகிச் சென்ற சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள்.

துலாம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். எதிலும் பொறுமை தேவை.

விருச்சிகம்

வெளியூர் பயணத்தால் ஆதாயம், அனுகூலம் உண்டு. பெற்றோர் உடல்நலத்தில் அக்கறை தேவை. எதிர்பாராத செலவுகள் உண்டாகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள்.

தனுசு

பழுதான வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்காக இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும்.

மகரம்

சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்

கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களக மனக் குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். எதிலும் நிதானம் தேவை.

மீனம்

பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுங்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. சாட்சிக் கையெழுத்து, சிபாரிசு, ஜாமீன் போன்றவை வேண்டாம்.

*********

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்