இந்த வார நட்சத்திர பலன்கள் (டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை) புனர்பூசம், பூசம், ஆயில்யம் எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்?

By செய்திப்பிரிவு


ஜோதிடர் ஜெயம் சரவணன்


புனர்பூசம் -


மன நிறைவு தரக்கூடிய வாரமாக இருக்கும்.


குடும்ப பிரச்சினைகள் தீரும். பெரிய மனிதரின் உதவியோடு கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் தீரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை தேடும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுயதொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.


நீண்ட நாளாக பேசி வந்த வியாபாரப் பேச்சுவார்த்தைகள் நன்மை தரும் வகையில் முடிவடையும். பெண்களுக்கு தந்தை வழியில் சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும்.கலைஞர்களுக்கு எதிர்பாராத அளவுக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும்.

இந்த வாரம் -
திங்கள் -


எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் இன்று நல்ல தகவல் கிடைக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும்.

செவ்வாய் -
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். தொலைபேசி வழித் தகவல் மன நிம்மதியைத் தரும்.

புதன் -
குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் அல்லது வியாபாரம் ஆரம்பிப்பது பற்றிய சிந்தனை உருவாகும்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தங்கள் உண்டாகும். வெளிநாடு தொடர்புடைய தொழில் மற்றும் வியாபாரம் செழிப்பாக இருக்கும். கடன் அடைவதற்கான வழிவகை உண்டாகும்.

வெள்ளி -
செலவுகள் அதிகமாக இருக்கும். அதிலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல்சோர்வு ஏற்படும். மனதில் இனம்புரியாத கவலை உண்டாகும்.

சனி -
வீடு நிலம் போன்ற வியாபார பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக ஒரு முக்கிய நபரை சந்திக்க வேண்டியது வரும். தொழில் தொடர்பான ஒரு சில கணக்கு வழக்குகளை இன்று சரிசெய்வீர்கள். வங்கியில் இருந்து சாதகமான பதில் கிடைக்கும். மொத்தத்தில் நன்மைகள் அதிகமாக ஏற்படும்.

ஞாயிறு -
வரவேண்டிய லாபங்களில் ஆதாயம் குறையும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போகும். குழந்தைகளுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும். ஆடம்பரச் செலவாகவும் இருக்கலாம், அல்லது மருத்துவச் செலவாகவும் இருக்கலாம்.

வணங்கவேண்டிய தெய்வம் -
பிள்ளையார்பட்டி விநாயகர் பெருமானை மனதார நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப பிரச்சினைகள் சுமுகமாகும்.
**************************************************

பூசம் -


கடந்த சில நாட்களாக இருந்த நெருக்கடிகள் அகலும்.


எதிர்பார்த்த உதவிகள் இந்த வாரம் கிடைக்கும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை நீண்ட இழுபறிக்கு பின் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் ஒரு சில உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும்.


தொழிலில் எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பங்கு வர்த்தகத் துறை ஏற்றம் தருவதாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் புதிய கிளைகளை ஆரம்பிக்கும் முயற்சியில் வெற்றி காண்பார்கள்.


பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் அகன்று சுறுசுறுப்பாக இயங்குவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதி இப்பொழுது மீண்டும் ஒன்று சேர்வார்கள்.


மாணவர்களின் கல்வியில் அசாத்திய முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த கல்விக்கடன் கிடைக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஊடகத்துறையினர் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -
திங்கள் -

அலுவலக விஷயமாகவோ அல்லது தொழில் விஷயமாகவோ பயணங்கள் ஏற்படும். எதிர்பாராத ஒரு சில செலவுகள் ஏற்படும். பழுதடைந்த பொருட்களை மாற்றி புதிய பொருட்களை வாங்குவீர்கள்.எதிர்பார்த்த பண உதவி தள்ளிப்போகும்.

செவ்வாய் -
வெளிநாடு தொடர்புடைய தொழில் வியாபாரம் போன்றவை மனநிறைவைத் தரும் வகையில் இருக்கும். கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பணவரவு எதிர்பார்த்த மாதிரியே இருக்கும்.

புதன் -
சந்திராஷ்டம தினம். அதிக கவனம் தேவை. உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.செலவுகள் அதிகமாக ஏற்படும். ஆலய வழிபாடு செய்யுங்கள்.

வியாழன் -
திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் இன்று சாதகமான பதில் கிடைக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் ஏற்படும். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நடக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

வெள்ளி -
அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவடையும். தொழிலில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் மன நிறைவு தரும் வகையில் முழுமையாகும்.

சனி-
குடும்பச் செலவுகள் அதிகமாக ஏற்படும். சுப விஷயங்களுக்காக ஒரு தொகையை ஒதுக்க வேண்டியது வரும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வாகனச் செலவுகள் ஏற்படும்.

ஞாயிறு -
கமிஷன் தொடர்பான வியாபாரங்கள் இன்று பேசி முடிக்கப்படும். ஒப்பந்தங்கள் போடுவீர்கள். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பரப் பொருள் சேர்க்கை ஏற்படும். ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை நிவேதனம் செய்து செய்யுங்கள். நன்மைகள் இருமடங்காகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சுப விசேஷங்கள் தடையின்றி நடக்கும்.
**************************************************************

ஆயில்யம் -


எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும்.


நீண்ட நாளாக தீராமல் இருந்த பிரச்சினைகள் இந்த வாரம் முடிவுக்கு வரும். தொல்லை தந்த கடன் பிரச்சினை ஒன்றை சுமுகமாக பேசி முடிப்பீர்கள். சுயதொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மேலும் பல நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் ஏற்படும். அரசு ஒப்பந்ததாரர்களாக இருப்பவர்களுக்கு ஒரு சில நெருக்கடிகள் தோன்றும்.


பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் புதிய கிளைகளை ஆரம்பிக்கும் உத்வேகம் ஏற்படும். அது தொடர்பான முயற்சிகளில் வெற்றி காண்பார்கள்.


பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்த ஒரு சில பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். மருத்துவச் செலவுகள் குறையும். இயல்பான சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -


தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் ஏற்படும். தொழில் தொடர்பான உதவிகள் தேடி வரும். புதிய முதலீட்டாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.

செவ்வாய் -
அனாவசிய செலவுகள் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டும்.முக்கிய விஷயத்திற்காக ஒதுக்கியிருந்த பணத்தில் இருந்து வேறு ஒரு விஷயத்திற்காக செலவு செய்ய வேண்டியது வரும்.

புதன் -
வியாபாரம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மகிழ்ச்சிகரமான நாள்.

வியாழன் -
வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பணிநீட்டிப்பு கிடைக்கும். குடியுரிமை தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி காண்பார்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
எதிர்காலம் பற்றிய சிந்தனை தோன்றும். ஒரு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளுக்காக சேமிப்புகளை தொடங்குவீர்கள். எதிர்பார்த்த வியாபாரம் சுமூகமாக முடிவடையும்.

சனி-
தொழில் தொடர்பான ஒரு முக்கிய நபரை சந்தித்து ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் அடகு வைத்த பொருட்களை மீட்பீர்கள்.

ஞாயிறு -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வாகன பழுதை சரி செய்வீர்கள். நண்பர்களால் விரயம் உண்டாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போகும். ஒப்பந்தங்கள் ஏற்படுவதில் சுணக்கம் ஏற்படும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அன்னையை வணங்குங்கள். அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் மனநிறைவு ஏற்படும் வகையில் இருக்கும்.
*********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்