ஜோதிடர் ஜெயம் சரவணன்
ரோகிணி -
செலவுகளும், செலவுக்கு ஏற்ற வருமானமும் சமமாக இருக்கும்.
எதிர்பார்த்த உதவிகள் கடைசி நேரத்தில் கிடைக்கும். சுப விசேஷ செலவுகள் ஏற்படும்.வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.குழந்தைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது வரும். அவர்களின் கல்வி பற்றிய கவலை தோன்றும்.
உத்தியோகத்தில் ஒரு சில இடைஞ்சல்கள் ஏற்படும், அதை எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும்,முதலீடுகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் அளவாக முதலீடு செய்யுங்கள்.வியாபாரிகள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள்.பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும், குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்வியில் மந்த நிலை ஏற்படும். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் குறையும். கலைஞர்களுக்கு ஒரு சில ஒப்பந்தங்கள் கிடைக்கும் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
இந்த வாரம் -
திங்கள் -
எடுத்துக் கொண்ட அனைத்து செயல்களும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரப் பேச்சு வார்த்தை சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வீடு வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
செவ்வாய் -
குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டு மராமத்துப் பணிகள் செய்ய வேண்டியது வரும். அலுவலகத்தில் வேலை நெருக்கடி அதிகமாக இருக்கும். பத்திரிக்கைத் துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக ஏற்படும். பெண்களுக்கு தங்கள் சேமிப்பிலிருந்து செலவு செய்ய வேண்டியது வரும்.
புதன் -
வீடு, நிலம் சம்பந்தப்பட்ட வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அரசு வழி ஆதாயங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
வியாழன் -
தரகு உள்ளிட்ட வியாபாரத்தில், கிடைக்கும் லாபத்தை பங்கு போட வேண்டியது வரும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு வேலையில் கூடுதல் சுமை, அழுத்தங்கள் ஏற்படும்.செலவுகள் மிகுந்த நாளாக இருக்கும்.
வெள்ளி -
சுப விசேஷங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக பேசித் தீர்க்கப்படும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தம் இன்று ஏற்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மருத்துவச் செலவுகள் குறையும். பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவம் குடும்பத்தில் நடக்கும்.
சனி-
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் கருத்துக்களை முதலில் வைக்க வேண்டாம். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். செலவுகள் அதிகமாக ஏற்படக்கூடிய நாளாக இருக்கிறது, சிக்கனமாக இருக்க வேண்டும்.
ஞாயிறு -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான விஷயம் எளிதாக பேசி முடிக்கப்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக உதவி கிடைக்கும். கலைத்துறை சார்ந்தவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அதிக அளவில் நன்மை ஏற்பட கூடிய நாள்.
வணங்கவேண்டிய தெய்வம் -
பகவான் கிருஷ்ணருக்கு வெண்ணெய் படைத்து வணங்குங்கள். அல்லது விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். அல்லது கேளுங்கள். பிரச்சினைகள் குறையும். கவலைகள் மறையும். தேவைகள் பூர்த்தியாகும்.
********************************************************************
மிருகசீரிடம் -
குழப்பமான மனநிலை இருந்தாலும், தெளிவான முடிவுகள் கிடைக்கும்.
எதிர்பாராத உதவிகள் கடைசி நேரத்தில் கிடைக்கும். பணத்தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்கு வாதம் செய்ய வேண்டாம். வேறு வேலைக்கு மாற முயற்சி இப்போதைக்கு தேவையில்லை.
தொழில் தொடர்பான உதவிகள் ஓரளவுக்கு கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் கவனமாக முதலீடு செய்ய வேண்டும். வியாபாரிகள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளவர்கள் இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். பெண்கள் குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லவேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்யக் கூடாது. கணவன் மனைவி விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும்.மாணவர்கள் தேர்வுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
கலைத்துறை சார்ந்தவர்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் வேலை சம்பந்தமாக புதிய முயற்சிகள் ஏதும் எடுக்க வேண்டாம்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் நீண்ட நாளாக முடிக்கப்படாத வேலைகளை இன்று செய்து முடிப்பார்கள்.
செவ்வாய் -
எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். லாபகரமான ஒப்பந்தங்கள் ஏற்படும்.தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
புதன் -
பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் ஏற்படும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கடன் பிரச்சினைகளை நினைத்து கவலை ஏற்படும்.
வியாழன் -
தரகு சம்பந்தப்பட்ட வியாபாரங்கள் சுமூகமாக முடிவடையும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் ஏற்பட்டிருந்த சில பிரச்சினைகள் இன்று தீரும்.எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
வெள்ளி -
ஆலய வழிபாடு ஏற்படும். குலதெய்வ கோவிலுக்கு சென்று வர திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். காலங்கடந்து உணவு உண்ண வேண்டிய நிலை வரும்.
சனி-
கடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையை பேசி முடிப்பீர்கள். அல்லது மேலும் கால அவகாசம் கேட்பீர்கள். வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். தொழில் தொடர்பான உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஞாயிறு -
கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும்.கடன் வாங்க வேண்டிய நிலை உண்டாகும். ஆரோக்கியம் பற்றிய பயம் உண்டாகும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்யுங்கள். அல்லது மனதில் நினைத்து வழிபடுங்கள். அருகில் இருக்கும் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். மனம் தெளிவடையும். பிரச்சினைகள் விலகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
******************************************************************
திருவாதிரை -
குழப்பமான மனநிலையில் இருந்து வெளியே வருவீர்கள். தெளிவான சிந்தனை ஏற்படும். தள்ளிப்போன உதவிகள் இந்த வாரம் கிடைக்கும்.
பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் குறைய ஆரம்பிக்கும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட குளறுபடிகளை சரிசெய்வீர்கள். கூட்டுத்தொழிலில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் விலக ஆரம்பிக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
வியாபாரிகள் ஓரளவுக்கு லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். மாணவர்கள் தங்கள் கல்வியில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும்.
இந்த வாரம் -
திங்கள் -
வெளிநாடு செல்லும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும். எதிர் பார்த்த பணம் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.வியாபார ஒப்பந்தங்கள் இன்று நிறைவடையும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் தங்கள் பங்குகள் உயர்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.
செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகளை சரியாக செய்து முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை செய்து கொடுப்பீர்கள்.வேறு வேலைக்கு மாறுவதற்கான முயற்சிகளில் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.
புதன் -
நீங்கள் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.வியாபார ஒப்பந்தங்கள் முடிவடைந்து மகிழ்ச்சியைத் தரும். தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.
வெள்ளி -
அலுவலகம் தொடர்பாகவோ அல்லது தொழில் ரீதியாக ஒரு பயணம் ஏற்படும். வாகன மாற்றம் சிந்தனை உருவாகும்.வீட்டைப் புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும்.வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சனி-
குடும்பப் பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள்.பண வரவு தாமதமாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு ஒரு சில உதவிகள் செய்ய வேண்டியது வரும்.
ஞாயிறு -
இல்லத்தில் சுப விசேஷ நிகழ்ச்சிகள் நடக்கும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும் பணத்தேவைகள் பூர்த்தியாகும் வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள். கிடைக்கப் பெறுவார்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மலர்மாலை சூட்டி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். நன்மைகள் அதிகமாகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும்.
******************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago