இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்

தேவையற்ற சஞ்சலங்கள், மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருவதால், வீடு களைகட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.

ரிஷபம்

வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பணப் பற்றாக்குறை விலகும். கடனுதவிகள் கிடைக்கும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாய் உடல்நலம் சீராகும்.

மிதுனம்

எதிலும் அவசரப்பட வேண்டாம். சிலரது விமர்சனங்கள், கேலிப் பேச்சுக்கு ஆளாவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் ஏற்படும். ஆன்மிக நாட்டம் கூடும்.

கடகம்

உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். எதிலும் தனித்தன்மையுடன் இருங்கள். இழுபறியாக உள்ள பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள்.

சிம்மம்

உற்சாகம், சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் உடல்நலம் சீராக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை.

கன்னி

எதிரிகளின் கொட்டம் அடங்கும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பண வரவு உண்டு.

துலாம்

நம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்த கசப்புணர்வு நீங்கும். செலவுகள் ஒருபக்கம் இருந்தாலும், பணப் புழக்கமும் அதிகரிக்கும்.

விருச்சிகம்

இழுபறியாக இருந்த கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டாகும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. அரசு, வங்கி வகையில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு

ஆரவாரமின்றி செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல், அசதி, செலவு இருந்தாலும், ஆதாயமும் உண்டு.

மகரம்

தேவையற்ற மன உளைச்சல் வந்துபோகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும்.

கும்பம்

சில வேலைகளை உங்கள் நேரடி பார்வையில் முடிப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

மீனம்

செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவீர்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். பேச்சில் பொறுமை தேவை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்