- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சதயம்:
கிடைத்தது எதையும் சாமர்த்தியமாக தக்க வைத்துக்கொள்வதில் திறமையுடைய சதய நட்சத்திர அன்பர்களே!
நீங்கள் நட்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். நீங்கள் ராகு பகவானை நட்சத்திர நாயகனாகவும் சனி பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள்.
இந்த வருடம் அனைத்து கிரக சஞ்சாரமும் உங்களுக்கு சாதகம் தரும் வகையில் இருக்கிறது. பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செவ்வாய் சஞ்சாரம் இட மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் நீடித்து வந்த ஆரோக்கிய குறைபாடு பூர்த்தியாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும்.
பெண்களுக்கு : பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
கலைத்துறையினருக்கு : வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்களால் இருந்து வந்த தொல்லைகள் தானாக விலகும். கண்கள் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை.
அரசியல் துறையினருக்கு : உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். உழைப்பு வீண் போகாது.
மாணவர்களுக்கு : கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரிகாரம்: பாலாம்பிகா தேவியை வியாழக்கிழமையில் வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும்.
மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்திற்கு 72% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
+: போட்டிகள் குறையும்.
-: முயற்சிகள் அதிகரிக்கும்.
*************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago