2020 - நட்சத்திர பலன்கள் : திருவோணம் நட்சத்திரத்துக்கான பலன்கள்

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


திருவோணம்:

உழைப்புக்கு அஞ்சாத உறுதியான மனம் கொண்ட திருவோண நட்சத்திர அன்பர்களே!


நீங்கள் எந்தச் செயலையும் நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். நீங்கள் சந்திர பகவானை நட்சத்திர நாயகனாகவும், சனி பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள்.


இந்த வருடம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து நிதானமாகப் பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.


குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களைக் கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும்.


பெண்களுக்கு : கோபத்தைத் தவிர்த்து நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும்.
கலைத்துறையினருக்கு : பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியம். கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை.


அரசியல் துறையினருக்கு : நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபவர்கள் அதிக பயன்பெறுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு.


மாணவர்களுக்கு : திட்டமிட்டுப் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் திருப்பதி பெருமாளுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா காரியங்களும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் பெறும்.


மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்திற்கு 68% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


+: பணவரவில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.


-: வலிய சென்று உதவுவதை தவிர்க்கவும்.


******************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்