இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் பளிச்சிடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

ரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பால்ய நண்பரின் உதவி கிடைக்கும்.

மிதுனம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் தடங்கல் இன்றி நிறைவேறும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணவரவு சரளமாக இருக்கும். அரசியல் விஐபியின் உதவி கிடைக்கும்.

கன்னி: உறவினர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

துலாம்: நீண்ட நாட்களாக தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய ஈகோ பிரச்சினை தீரும்.

விருச்சிகம்: சவாலான காரியங்களைக்கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்களின் தனித்திறமை அனைத்திலும் பளிச்சிடும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு உண்டாகும்.

தனுசு: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொந்தபந்தங்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

மகரம்: உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களை ஒதுக்குவீர்கள். இடம், பொருள் ஏவலறிந்து பேசுங்கள். புண்ணிய தலம் செல்வீர்கள்.

கும்பம்: வறட்டுக் கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். வேலைச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். கடன் பிரச்சினை அதிகமாகும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்