பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கார்த்திகை:
அனுபவத்தையும் திறமையையும் கொண்டு காரியங்களைத் திறம்பட செய்யும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே!
நீங்கள் சூரிய பகவானை நட்சத்திர நாயகனாகவும் முதல் பாதத்திற்கு செவ்வாய் பகவானை ராசி நாயகனாகவும், 2, 3, 4 பாதங்களுக்கு சுக்ர பகவானை ராசிநாயகனாவும் கொண்டவர்கள். நீங்கள் எந்த சூழ்நிலையிலும் விவேகத்தை கைவிடாதவர்கள்.
இந்த வருடம் கடிதப் போக்குவரத்து சாதகமான பலன்களைத் தரும். அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தடைபட்டிருந்த கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாகச் செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும்.
குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடமும் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.
பெண்களுக்கு : மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வீண் வாக்குவாதத்தை விட்டு நிதானமாகப் பேசுவது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு : மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதுர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
அரசியல் துறையினருக்கு : வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.
மாணவர்களுக்கு : கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.
பரிகாரம்: முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்க, எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்துக்கு 70% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்
+: அரசு அனுகூலம் ஏற்படும்
-: உடல்நிலையில் கவனம் தேவை
*******************************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago