இந்த வார நட்சத்திர பலன்கள் - பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; (டிசம்பர் 23 முதல் 29 வரை) எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? 

By செய்திப்பிரிவு

ஜோதிடர் ஜெயம் சரவணன்

பூரட்டாதி -
நல்ல பலன்கள் நடைபெறும் வாரம். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தேவையான பண வரவு இருக்கும். குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் உருவாகும். அதை சமாளிக்கும் ஆற்றலும் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபச் செலவுகள் அதிகமாக இருக்கும்.

உத்தியோகம் -
வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.விரும்பிய இடமாற்றம் ஏற்படும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றியாகும். வெளிநாடுகளில் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல தகவல் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும். குடியுரிமை சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக நடக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றியாகும். இப்போதிருக்கும் நிறுவனத்திலேயே பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

தொழில் -
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். போட்டி நிறுவனங்கள் போட்டியில் இருந்து விலகிச் செல்வார்கள். தொழில் தொடர்பான வழக்குகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தத் தேவையான உதவிகள் கிடைக்கும். அரசு சலுகைகள், மானியங்கள் கிடைக்கும். புதிதாகத் தொழில் தொடங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் உதவிகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். புதிய வியாபார ஏஜென்சிகளை எடுப்பார்கள். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் ஒரு சில சலுகைகளை அறிவித்து வியாபாரத்தை பெருக்குவீர்கள்.

பெண்களுக்கு -
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அரசு வேலை எதிர்பார்த்த பெண்களுக்கு இந்த வாரம் அரசு வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். அடுத்த ஆண்டு கல்விக்காக இப்பொழுதே உங்களை தயார் செய்து கொள்வீர்கள். விரும்பிய கல்விப் பாடங்கள் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
உங்கள் துறை சார்ந்த பயிற்சி பள்ளி வகுப்புகள் ஆரம்பிக்க முற்படுவீர்கள். அதற்கான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும்.

பொதுப் பலன் -
குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். தேவையற்ற விவாதங்களைச் செய்யவேண்டாம். பிடிவாதம் பிடிக்காதீர்கள். குடும்பத்தினரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சுபச்செலவுகள் ஏற்படும். வீடு வாங்குவது, திருமண முயற்சிகள் போன்றவை இனிதாக நிறைவேறும். ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், தலைவலி போன்ற பிரச்சினைகள் வரலாம்.

இந்த வாரம் -
திங்கள் -

எதிர்பார்த்த பணவரவு தாராளமாக கிடைக்கும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தமாக மாறும்.

செவ்வாய் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். தொழில் தொடர்பாக எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

புதன் -
செலவுகள் அதிகமாக ஏற்படும். வீட்டைப் புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும்.அதுதொடர்பான செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்காக குறிப்பிட்ட அளவு பணத்தை ஒதுக்க வேண்டியது வரும்.

வியாழன் -
சொத்து சம்பந்தமான பிரச்சினை ஒன்று சுமூகமாக தீரும். பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

வெள்ளி -
நண்பர்கள் உதவி கேட்டு தொல்லை தருவார்கள். அவர்களுக்காக ஒரு சில செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். அலைச்சல் அதிகமாக இருக்கும். உடலில் சோர்வு தோன்றும்.

சனி-
தொழில் தொடர்பான ஒரு பயணம் ஏற்படும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். வங்கி தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

ஞாயிறு -
அவசர வேலைகளைத் தவிர வேறு எந்த வேலைகளையும் செய்ய வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஒப்பந்தங்கள் ஏதும் போடுவதாக இருந்தால் தள்ளி வையுங்கள்.


வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, நெய்தீபம் ஏற்றி, இனிப்பு பலகாரங்கள் நைவேத்யம் செய்து வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.

*******************************************
உத்திரட்டாதி -

சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம் . எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை தொழில் செய்யும் எண்ணம் இல்லாதவர்கள்கூட இப்போது சொந்தத் தொழில் தொடங்கும் ஆர்வம் ஏற்படும். தேவையான உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் உண்டாகும், தகுந்த மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உத்தியோகம் -
எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.விரும்பிய இடமாற்றம் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பணிநீட்டிப்பு மட்டுமல்லாமல், குடியுரிமையும் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும், இடமாற்றமும் உண்டாகும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தங்கள் கல்வித் தகுதிக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்கும்.

தொழில் -
தொழிலில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். முதலீடுகளை அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். கூட்டாகத் தொழில் செய்ய பலர் முன்வருவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பிரம்மாண்டமான வளர்ச்சி ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் இருமடங்காகும்.கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். புதிய கிளை துவங்குவார்கள்.

பெண்களுக்கு -
சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கையும் உண்டு. திருமண முயற்சிகள் கைகூடும். புதிதாக ஏற்படும் நட்புகளிடம் சற்று விலகியே இருங்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் எதிர்பார்த்ததைவிட நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும்.

கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பெரிய அளவிலான லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். அயல் நாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்து சேர்க்கை ஏற்படும். எழுத்தாளர்களுக்கு பொன்னான நேரம் இது.

பொதுப்பலன் -
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரும். பெரிய அளவிலான பாதிப்புகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஒரு சிலருக்கு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.

இந்த வாரம் -


திங்கள் -
வெளிநாடு செல்லும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் முடியும்.

செவ்வாய் -
மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குடும்ப நலனுக்காக சேமிப்புகள் தொடங்கும் எண்ணம் ஏற்படும்.

புதன் -
எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

வியாழன் -
நண்பர்களால் செலவுகள் உண்டாகும். தேவையற்ற பயணம் ஒன்று ஏற்படும். உணவு சம்பந்தப்பட்ட ஆரோக்கிய பிரச்சினை வரும்.

வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பான முக்கிய நபரை சந்தித்து ஆதாயம் பெறுவீர்கள்.

சனி-
வாகனம் மாற்றும் சிந்தனை ஏற்படும். வீட்டில் இயந்திரப் பொருட்களில் பழுது ஏற்படும். அதற்காக செலவு செய்ய வேண்டியது வரும்.

ஞாயிறு -
வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் ஏற்படும். நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரகத்தில் இருக்கும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். எள் கலந்த தயிர்சாதம் நிவேதனம் செய்து தானம் தாருங்கள். நன்மைகள் அதிகமாக நடக்கும். ஆரோக்கியம் சீராகும்.

**************************************************************************

ரேவதி -
அதிக அளவிலான நன்மைகள் ஏற்படும் வாரம். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். ஆரோக்கியத்தில் இருந்த ஒருசில அச்சுறுத்தல்கள் விலகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக முடிவடையும். அக்கம்பக்கத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும்.

உத்தியோகம் -
பணியிடத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும். ஒரு சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட பதவி உயர்வு இந்த வாரம் கிடைக்கும். ஒரு பெரிய நிறுவனத்திலிருந்து வேலைக்கான அழைப்பு வரும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடைகள் வணிக நிறுவனங்கள் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும்.

தொழில் -
தொழிலில் ஒரு சில தேவையற்ற அச்சுறுத்தல்கள் ஏற்படும். அரசு வழியில் ஒரு சில நெருக்கடிகள் தோன்றும். அனைத்தையும் எளிதாக சமாளிப்பீர்கள். ஆனாலும் தொழில் தொடர்பான டாக்குமென்டுகளை சரியாக வைத்துக்கொள்ளுங்கள். வங்கி தொடர்பான பிரச்சினை ஒன்று இந்தவாரம் முடிவுக்கு வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அளவுக்கு ஒரு சில ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும்.

பெண்களுக்கு -
தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். தந்தையின் சொத்துக்கள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஆரோக்கியத்தில் ஒரு சில பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். சேமிப்பு உயரும் . ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள்.

மாணவர்களுக்கு-
கல்வியில் நீங்களே எதிர்பாராத அளவுக்கு பெரிய முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் ஆச்சரியமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வெளிநாடுகளில் சென்று கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
எவருக்குமே கிடைக்காத நல்ல வாய்ப்பு ஒன்று உங்களுக்குக் கிடைக்கும். அதன் மூலமாக பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சொத்துக்கள் வாங்குவீர்கள். உங்கள் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் ஆரம்பிப்பீர்கள்.

பொதுப்பலன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்தாலும் வந்த வேகத்தில் மறையும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் எளிதாக பேசித் தீர்ப்பீர்கள். தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளால் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், அதை பேசியே சரிசெய்து விடுவீர்கள்.

இந்த வாரம் -
திங்கள் -

வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் இறங்கி இருப்பவர்களுக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பணிநீட்டிப்புக்கான உத்தரவு கிடைக்கும். வியாபாரங்களில் லாபகரமான ஒப்பந்தம் ஏற்படும்.

செவ்வாய் -
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் இன்று பேசித் தீர்ப்பீர்கள். ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்று ஏற்படும். கடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை இ ஒன்று முடிவுக்கு வரும்.

புதன் -
சேமிப்புகளிலிருந்து முதலீடுகள் செய்யும் எண்ணம் வரும். ஒருசிலர் அசையாச் சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சியில் இறங்குவார்கள். அது தொடர்பான நல்ல விஷயங்கள் நடக்கும். வியாபாரம் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். தொழில் தொடர்பான எதிர்பாராத உதவி ஒன்று கிடைக்கும்.

வியாழன் -
அலைச்சல்கள் அதிகமாக ஏற்படும். எனவே பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடலில் அசதி, சோர்வு போன்றவை தோன்றும். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

வெள்ளி -
வீட்டு பராமரிப்புச் செலவு முதல் வாகனச் செலவுகள் வரை ஏற்படும். வியாபாரப் பேச்சு வார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். பயணங்கள் கூடாது.

சனி-
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் வெற்றிகரமாக முடியும். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய விஷயங்களில் நல்ல தகவல் கிடைக்கும்.

ஞாயிறு -
கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். ஆலய வழிபாடு உண்டாகும். தர்ம காரிய சிந்தனைகள் தோன்றும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வர முயற்சிப்பீர்கள்.

வணங்கவேண்டிய தெய்வம் -
விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டை நிவேதனம் செய்து தானம் தாருங்கள். கோயில் யானைக்கு உணவளியுங்கள். நன்மைகள் அதிகமாகும். ஆரோக்கியம் சீராகும். தேவைகள் பூர்த்தியாகும்.
********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்