ஜோதிடர் ஜெயம் சரவணன்
மூலம் -
ஒரு சில பிரச்சினைகள் தலை தூக்கினாலும் அவையெல்லாம் சமாளிக்கும் வல்லமையும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது. செலவு அதிகமாக இருக்கும். அதேசமயம் வருமானம் அதற்கு தகுந்தாற்போல் இருக்கும். முடிந்தவரை அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருங்கள். மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். முக்கியமான முடிவுகளை நீங்களாக எடுக்க வேண்டாம். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தந்தை அல்லது உங்களின் மூத்த மகன் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் எந்த சச்சரவுக்கும் ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உயரதிகாரிகளிடம் தேவையில்லாமல் பகை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். இடமாற்றம் விரும்பினால், அதற்கான வாய்ப்புகள் பலமாக உள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் பணியில் கவனமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களிடம் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும்.
தொழில் -
தொழிலில் ஒரு சில உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும் பங்கு வர்த்தகத் துறையினர் கவனமாகவும் அளவாகவும் முதலீடு செய்யவேண்டும்.ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்பவர்கள் இன்னும் சில நாட்கள் பொறுமை காத்தால் தொழிலில் அபார வளர்ச்சி ஏற்படும்.வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
பெண்களுக்கு -
மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாக ஏற்படும். எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு தருவார்கள். சிக்கனம் தேவை.
மாணவர்களுக்கு-
கல்வியில் மந்த நிலை தொடரும். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் போகலாம். பொறுமையை இழக்க வேண்டாம். வரும் வாரங்களில் இந்த பிரச்சினைகள் தீரும்.
கலைஞர்களுக்கு -
நல்ல தகவல்கள் கிடைக்கும். ஒருசிலருக்கு ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். பத்திரிக்கைத் துறையினர், ஊடகத்துறையினர் கடும் நெருக்கடிக்கு ஆளாவார்கள்.
பொதுப்பலன் -
எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கவேண்டும். சொத்துக்கள் விற்பனை சம்பந்தமான விஷயங்களில் அவசரம் காட்ட வேண்டாம். பணத்தைக் கையாளும்போது அதிக கவனம் வேண்டும். குறிப்பாக வங்கிப் பணியாளர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உடல் நலத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஆனாலும் மனதில் இனம் புரியாத பயம், தேவையற்ற குழப்பம் ஏற்படும். தியானம் பழகுங்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
நிதானமாக இருக்க வேண்டும். பொறுமையைச் சோதிப்பது போல் சில விஷயங்கள் நடக்கும். எல்லாவற்றையும் அமைதியாகக் கடந்து செல்லுங்கள்.
செவ்வாய் -
வியாபார விஷயங்களில் பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கும்.நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று திரும்பக் கிடைக்கும். முக்கியமான தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
புதன் -
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஒப்பந்தங்கள் போடுவதற்கு வாய்ப்பு உள்ளது. பணத்தேவைகள் பூர்த்தியாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.
வியாழன் -
வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகமாகும். வேறு நிறுவனங்களுக்கு இன்று மனு செய்வீர்கள். சுய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
வெள்ளி -
எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வங்கியிலிருந்து கடன் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.
சனி-
செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். மருத்துவச் செலவும் உண்டாகும்.குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அதிகமாகும்.
ஞாயிறு -
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, 7 நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். குழப்பங்கள் தீரும். மனம் நிம்மதி பெறும். காரியத்தில் வெற்றி உண்டாகும்.
************************************************
பூராடம் -
தெளிவாக சிந்திக்க முடியாமல் திணறுவீர்கள். மனக்குழப்பம் அதிகமாக இருக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் தள்ளிப் போகலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அதற்கு தகுந்தாற் போல் இருக்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும். பொறுமையாக அனைத்தையும் கையாள வேண்டும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் தேவையில்லாத சச்சரவுகள் உருவாகும். நிர்வாகத்தின் கெடுபிடிக்கு ஆளாக வேண்டியது வரும். தேவையற்ற இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அரசு ஊழியர்கள் தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும், உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அடுத்தவர்களுக்கு உதவுகிறேன் என்று ஏதாவது செய்யப் போனால் அது பிரச்சினையாக மாறும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த ஒரு சில ஒப்பந்தங்கள் கிடைக்கும். பண உதவி கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். இப்படி பல விஷயங்கள் சாதகமாக இருந்தாலும், அரசு வழியில் தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகும். பங்கு வர்த்தகத் துறையினர் முதலீடுகளை குறைத்துக்கொள்ளவேண்டும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்பவர்கள் வியாபார பேச்சுவார்த்தைகளில் சுமுகமாகக் கையாள வேண்டும்.
பெண்களுக்கு -
ஒரு சில உதவிகள் கிடைக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். செலவுகள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஒரு சில நெருக்கடிகள் உருவாகும். எதிர்பாராத இடமாற்றம் உண்டாகலாம்.
மாணவர்களுக்கு -
கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொடர்ந்து கல்வியில் மந்த நிலையே இருக்கும். தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
கலைஞர்களுக்கு -
ஆதாயங்கள் கிடைக்கும். வருமானத்திற்கு மேல் செலவுகள் அதிகமாக ஏற்படும். பேச்சுவார்த்தைகள் மேலும் நீண்டு கொண்டே போகும். பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர், எழுத்தாளர்கள் இவர்களுக்கெல்லாம் ஒரு சில பின்னடைவுகள் ஏற்படும்.
பொதுப் பலன் -
மனக்கட்டுப்பாடு அவசியம். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க வேண்டாம். சமூக வலைதள பயன்பாட்டில் கவனமாக இருக்கவேண்டும். சர்ச்சையான கருத்துக்களை பதிவிட வேண்டாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்வது அவசியம். உடல்நலத்தில் ஒரு சில பாதிப்புகள் ஏற்படும். அதுதொடர்பான மருத்துவச் செலவுகளும் இருக்கும். தந்தை மற்றும் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்த்த ஒரு சில உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும்.
செவ்வாய் -
செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். விரக்தியான மன நிலை தோன்றும். மருத்துவ செலவுகள் உண்டாகும். பொறுமையாக இருப்பது நல்லது.
புதன் -
வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடையும். ஒப்பந்தங்கள் ஏற்படும்.
வியாழன் -
மனம் அமைதி இல்லாமல் தடுமாறும் . தேவையற்ற கற்பனைகள் உண்டாகும். சஞ்சலம் அதிகமாக இருக்கும். இனம்புரியாத பயம் தோன்றும். இறைவழிபாடு செய்யுங்கள்.
வெள்ளி -
நேற்றைய பிரச்சினை இன்றைக்கு முடிவுக்கு வரும். தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர் பார்த்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும்.
சனி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆதாயம் இருமடங்காக இருக்கும். மனக் குழப்பங்கள் தீரும்.வியாபாரத்தில் வெற்றி உண்டாகும்.
ஞாயிறு -
குலதெய்வ வழிபாடு செய்ய முற்படுவீர்கள். ஒரு சில தர்ம காரியங்கள் செய்வீர்கள். மன அமைதி உண்டாகும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
நடராஜப்பெருமானுக்கு மலர்களால் அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனக் குழப்பங்கள் தீரும். நிம்மதி உண்டாகும்.
*****************************************************
உத்திராடம் -
தேவைகளுக்கு ஏற்ப பணம் வரும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். சிக்கனம் மிக மிக அவசியம். சுபச்செலவுகள் மட்டுமல்லாமல், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினர் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து தாருங்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது, வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் சக ஊழியர்கள் முதல், உயரதிகாரிகள் வரை அனைவரிடமும் இணக்கமாக செல்லுங்கள். வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பதவி உயர்வு தள்ளிப் போகலாம். ஒரு சில முக்கியமான பிரச்சினைகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். அரசு ஊழியர்கள் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அதிக சிரத்தையுடன் தங்கள் பணியைச் செய்ய வேண்டும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் தானாக தேடி வரும். உங்களுடன் கூட்டு சேர பலரும் முன்வருவார்கள். முதலீடுகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். உற்பத்தியான பொருட்கள் விரைவாக விற்பனையாகும். பங்கு வர்த்தகத் துறையினர் அளவான லாபம் பார்ப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள், தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு சற்றும் எதிர்பாராத அளவுக்கு தொழில் வளர்ச்சி ஏற்படும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். புதிய கிளைகளைத் துவங்கும் எண்ணம் ஏற்படும்.
பெண்களுக்கு -
உன்னதமான பலன்கள் நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் மட்டும் தாமதமாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும் . நல்ல வேலை கிடைக்காத பெண்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும் வாய்ப்பு உண்டு.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேண்டிய உதவிகள் கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவீர்கள். உயர்கல்வி மாணவர்கள் எதிர்பாராத அளவுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள்.
கலைஞர்களுக்கு -
எதிர்பாராத அளவுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அயல்நாட்டில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். எழுத்தாளர்கள் புகழப்படுவார்கள்.
பொதுப்பலன் -
பணத்தேவைகள் பூர்த்தியாகும். ஆனாலும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். சிக்கனமாக இருப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். ஒருசிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். குறிப்பாக கால் பாதத்தில் சுளுக்கு, போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள் -
பயணங்களும் அலைச்சல்களும் அதிகமாக இருக்கும். கிடைக்கின்ற ஆதாயத்தையும் பலருடன் பங்கு போட வேண்டியது வரும்.
செவ்வாய் -
கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஓரளவு தீரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் நிறைவேறும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.வங்கி தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
புதன் -
செலவுகள் அதிகமாக ஏற்படும். மருத்துவச் செலவும் இருக்கும். ஆடம்பரச் செலவும் இருக்கும். சிக்கனமாக இருக்கவேண்டும். அலைச்சல்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
வியாழன் -
எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும் ஆதாயம் தரும் விஷயங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
வெள்ளி -
வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு இன்று ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் லாபகரமான வியாபாரத்தை பேசி முடிப்பார்கள்.
சனி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பம் சார்ந்து ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.
ஞாயிறு -
சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் நல்ல பலன் தரும். நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மகா விஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago