ஜோதிடர் ஜெயம் சரவணன்
விசாகம் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். அதிக முயற்சி இல்லாமலேயே வேலைகள் விறுவிறுப்பாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வேலை மாற்றம் ஏற்படும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். முக்கியமான கடன் ஒன்று இந்த வாரம் தீரும்.
உத்தியோகம் -
வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஊதிய உயர்வும் ஏற்படும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றி ஆகும். இந்த வாரம் நேர்முகத் தேர்வுக்காக செல்வீர்கள். அதில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த வேலைகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அரசின் சலுகைகள் கிடைக்கும். தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
தொழில் -
தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் இந்த வாரம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கி வெற்றி காண்பீர்கள். புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான ஆதரவு, உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் செய்ய முன்வருவார்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். புதிய கிளைகளைத் தொடங்கும் எண்ணமும் ஈடேறும்.கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம் தொழிலில் ஏற்படும்.
பெண்களுக்கு -
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பருவ வயதில் இருக்கும் பெண்கள் பருவம் எய்துவார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் ஆசிரியரின் உதவி கிடைக்கும். பயிற்சி வகுப்புகளில் சேர்வீர்கள். வெளிநாடு சென்று கல்வி பயிலும் முயற்சி வெற்றியாகும்.
கலைஞர்களுக்கு -
சிறப்பான வாரம் . நன்மைகள் அதிகமாக நடக்கும். எதிர்பாராத ஒரு பெரிய இடத்தில் இருந்து ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பணவரவு தாராளமாக உண்டு. சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு.
பொதுபலன் -
தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த சில உபாதைகள் இப்போது முடிவுக்கு வரும். மருத்துவச் செலவுகள் குறையும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமூகமாகத் தீரும். பாகப்பிரிவினைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
வேலை சம்பந்தமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கிறது. குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள்.
செவ்வாய் -
வருமானம் இருமடங்காகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியைத் தரும். முயற்சி எடுக்காத விஷயங்கள் கூட இப்பொழுது தானாக முடியும். நீண்ட நாளாக பேசி வந்த ஒரு பிரச்சினை இன்று பேசி முடிவு எடுக்கப்படும்.
புதன் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். வாகன செலவு ஏற்படும். தேவையில்லாத விஷயத்திற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டியது வரும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
வியாழன் -
சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறும். நல்ல வீடு ஒன்று அமையும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் சுப விசேஷங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.
வெள்ளி -
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஒரு சில வேலைகளை செய்து கொடுப்பீர்கள். தர்ம காரியம் செய்வீர்கள். ஆலய வழிபாடு ஏற்படும்.
சனி-
ஒரு சில ஒப்பந்தங்கள் கிடைக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். ஒரு பெரிய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள்.
ஞாயிறு -
அலைச்சல்கள் அதிகமாகும். ஒருசில ஏமாற்றங்களையும் சந்திக்க வேண்டியது வரும். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். ஒப்பந்தங்கள் எதுவும் போட வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
நவக்கிரகத்தில் இருக்கும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தி ஆகும். முயற்சிகள் வெற்றியைத் தரும்.
*****************************************************
அனுஷம்-
சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம் . எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். பணவரவில் எந்தத் தடையும் இருக்காது. எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் குடியுரிமை சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து, குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமண முயற்சிகள் கைகூடும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக தீரும். நண்பர்களால் ஒருசில ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் வரும். ஆனாலும் வந்த வேகத்தில் மறையும்.
உத்தியோகம் -
வேலையில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். ஊதிய உயர்வு உண்டு. வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாடு சென்று வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு இப்பொழுது வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். அயல் நாட்டில் வேலை செய்பவர்களுக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும். அரசு ஊழியராக இருந்தால் பதவி உயர்வு, மற்றும் கூடுதல் பொறுப்புகள் போன்றவை கிடைக்கும்.
சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள், உங்கள் கருத்துக்களும், உங்களுடைய செயல்பாடுகளும் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும். வருமானம் இரு மடங்காக இருக்கும். விற்பனைப் பிரதிநிதிகளாக இருப்பவர்களுக்கு இருமடங்கு இலக்குகளை எட்டுவார்கள்.
தொழில் -
தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு. எதிர்பாராத அளவுக்கு பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தங்கள் தொழிலை விரிவு படுத்தும் விதமாக கிளை நிறுவனங்களைஆரம்பிப்பார்கள். தொழிலுக்காக நவீன இயந்திரங்களை வாங்குவார்கள். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள், தங்கள் கடையை விரிவுபடுத்துவார்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி உண்டு, முதலீடுகள் எதிர்பாராத அளவுக்கு லாபம் தரும். ஒரு சிலர் வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து தொழில் தொடங்கும் வாய்ப்பு இருக்கிறது.ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு சில சலுகைகளை அறிவித்து வியாபாரத்தை பெருக்குவீர்கள். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும்.
பெண்களுக்கு-
சொந்த வீடு கனவு இப்பொழுது நனவாகும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கக்கூடிய அத்தனை பிரச்சினைகளும் தீரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும். ஒரு சிலர் புதிய வியாபாரம், அல்லது தொழில் தொடங்க முயற்சி எடுப்பீர்கள், அந்த முயற்சி வெற்றி தரும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். புதிய பாடங்களைக் கற்கும் ஆர்வம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத அளவுக்கு உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு, வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள், நல்ல ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.எழுத்தாளர்கள், கதாசிரியர்கள், ஊடகத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பொதுப்பலன் -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சொத்துக்கள் வாங்குவது, சொத்துக்களில் முதலீடு செய்வது போன்றவை இப்போது செய்யலாம். சொந்த வீடு கனவு நனவாகும். குழந்தைகளுக்கு எதிர்காலத் தேவைகளைக் கருதி சேமிப்புகள், முதலீடுகள் செய்வீர்கள். ஒரு சிலர் நண்பர்களோடு சேர்ந்து கூட்டுத்தொழில் செய்ய முயற்சி எடுப்பீர்கள். அந்த முயற்சி நன்றாகவே இருக்கும். சுய ஜாதகத்தில் கூட்டுத் தொழில் யோகம் இருந்தால் தாராளமாக செய்யலாம் .
இந்த வாரம் -
திங்கள் -
பயணங்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சில நல்ல முடிவுகளை எடுத்து அதை செயல்படுத்துவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
செவ்வாய் -
திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். திட்டமிடாத காரியங்களும் இன்று வெற்றிகரமாக முடியும். ஆதாயம் பெருகும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரப் பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.
புதன் -
எடுத்துக் கொண்ட அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும்.வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.
வியாழன் -
செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டு பராமரிப்புச் செலவுகள், வாகனப் பராமரிப்புச் செலவுகள் என செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. சந்திக்க வேண்டி நபரை குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க முடியாமல் தள்ளிப் போகலாம்.
வெள்ளி-
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். லாபம் இரட்டிப்பாக இருக்கும்.
சனி -
குடும்பத்தினருக்காகவும் நண்பர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு உண்டாகும்.
ஞாயிறு -
வியாபாரப் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஆதாயம் தரும் ஒப்பந்தம் ஒன்று நிறைவேறும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ லக்ஷ்மி குபேர வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாக நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். முயற்சிகள் வெற்றியாகும்.
**********************************************
கேட்டை -
குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் தோன்றும். கவனமாகக் கையாண்டு பிரச்சினைகள் பெரிதாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருக்கும் ஜாமீன் போடுவதோ உத்தரவாதம் தருவதோ கூடாது. அது பின்னாளில் உங்களுக்கு பிரச்சினையாக மாறும். யாரிடமும் எதற்காகவும் கோபப்பட்டு பேச வேண்டாம். அதேசமயம் உத்தியோகத்திற்கும் தொழிலுக்கும் பெரிய பிரச்சினைகள் ஏதும் வராது. உணவுக் கட்டுப்பாடு அவசியம்.
உத்தியோகம் -
பணியிடத்தில் சகஜமான நிலையே இருக்கிறது. பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. அதேசமயம் வேலையில் கண்ணும் கருத்துமாக இருங்கள். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகம் ஆனாலும்,பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது . இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
தொழில் -
தொழில் நல்ல வளர்ச்சியை நோக்கிச் செல்லும். உற்பத்தியாகும் பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். வருமானம் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் தொழிலோடு இணைந்து ஒரு புதிய தொழில் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் மட்டுமல்லாமல் சலுகைகளும் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். வியாபார நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு தங்கள் வியாபார இடங்களை விரிவுபடுத்துவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதும் ஒப்பந்தங்கள் ஏற்படுவதும் உண்டாகும். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு வியாபார வளர்ச்சி சீராகவே இருக்கும்.
பெண்களுக்கு -
உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உருவாகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சொத்துக்கள் சேரும். குடும்ப உறவுகள் பலப்படும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. தேர்வுகளில் முதலிடத்தைப் பிடிப்பீர்கள். வெளிநாட்டுக் கல்வி முயற்சி வெற்றி ஆகும். கல்விக்கடன் முதல் அனைத்து உதவிகளும் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.நண்பர்களால் ஆதாயமுண்டு. அதே செய்யும் சிக்கனம் தேவை.
பொதுப்பலன் -
தேவையான உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். காசோலைகள் கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வராது. ஆனால் உணவுக் கட்டுப்பாடு அவசியம். ஒருசிலருக்கு வாய்ப்புண், தொண்டை வலி, அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். ஒரு சிலர் உத்தியோகத்தை விட்டுவிட்டு சொந்தத் தொழில் செய்ய முற்படுவார்கள். அதுவும் வெற்றியாகும் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
இந்த வாரம் -
திங்கள் -
வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் லாபம் உண்டு. எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
செவ்வாய் -
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து தீர்வு ஏற்படும். பண வரவு உண்டு. குடும்பத்திற்காக செலவு செய்வதும், குடும்பத்தோடு பயணம் ஒன்றையும் மேற்கொள்வீர்கள்.
புதன் -
வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். சொந்த வீடு வாங்கும் எண்ணம் தோன்றும்.
வியாழன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்பொழுது வசூலாகும். திருமண முயற்சிகள் முடிவாகும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான வாய்ப்பு ஏற்படும்.
வெள்ளி -
அலைச்சல் அதிகரிக்கும்.தேவையில்லாமல் கோபப்படுவீர்கள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். ஆலய வழிபாடு ஏற்படும்.
சனி-
அரசு சார்ந்த சில விஷயங்களில் கவனத்தை செலுத்துவீர்கள். அதுதொடர்பான ஒரு சில பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். ஆதாயம் ஏற்படும் ஒரு வியாபார ஒப்பந்தம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் கிடைக்கும்.
ஞாயிறு -
நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு உதவி செய்து கொடுப்பீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.வாகனம் மாற்றும் சிந்தனை உண்டாகும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வடை மாலை சாற்றி வழிபடுங்கள். தடைகள் அகலும் .தேவைகள் பூர்த்தியாகும். நன்மைகள் அதிகமாக நடக்கும்.
*********************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago