இந்த வார நட்சத்திர பலன்கள் - அஸ்தம், சித்திரை, சுவாதி ; (டிசம்பர் 23 முதல் 29 வரை) எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்?

By செய்திப்பிரிவு

ஜோதிடர் ஜெயம் சரவணன்


அஸ்தம் -

எடுக்கின்ற முயற்சிகளில் பெருமளவு வெற்றி ஏற்படும். ஒருசில விஷயங்களில் பின்னடைவு ஏற்படலாம். ஆனாலும் ஆதாயத்திற்கு குறைவிருக்காது. பணச்சிக்கல் வராது. குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் வரலாம். வந்தாலும் வந்த வேகத்திலேயே அந்த பிரச்சினைகள் களையப்படும். எனவே பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்காது. வழக்கு ஏதேனும் இருந்தால் தள்ளிப்போகும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். ஆனாலும் பாதிப்புகள் ஏதும் இருக்காது

உத்தியோகம் -
வேலையில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், அதையெல்லாம் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்குள் இருக்கும். உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து வேலைகளை தருவார்கள். நீங்களும் சிறப்பாக செய்து முடித்து தருவீர்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலைகள் அதிகமாக இருக்கும்.கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது, திருப்திகரமான நிலையே நீடிக்கும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சார்ந்த வழக்குகள் ஏதேனும் இருந்தால் தள்ளிப்போகும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் முற்றிலுமாக நீங்கும். அரசின் உதவிகள், மானியங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல பல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் ஓரளவு கணிசமான லாபம் பார்ப்பார்கள். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள்.

பெண்களுக்கு -
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் மாறும். திருமண முயற்சிகள் கைகூடும். வேலை இல்லாத பெண்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை சுமூகமாக பேசித் தீர்ப்பீர்கள்.

மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தேர்வுகள் ஏதும் எழுதியிருந்தால் முதல் மதிப்பெண் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உயர்கல்விக்கான முயற்சிகள் வெற்றியாகும்.

கலைஞர்களுக்கு-
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு பெரிய நிறுவனத்திடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். நண்பர்கள் உதவி செய்வார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

பொதுப்பலன் -
பெருமளவு நன்மைகளும், ஒரு சில பாதிப்புகளும் மட்டுமே இருக்கிறது, அதை எல்லாம் சமாளிக்கும் ஆற்றல் இருப்பதால், எளிதில் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். அந்தப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.ஆரோக்கியத்தில் முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் சுளுக்கு அல்லது வாய்வுப்பிடிப்பு ஏற்படும்.

இந்த வாரம் -
திங்கள் -

எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளிலும் நல்ல பலன்கள் நடக்கும். எடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். இடம் பூமி சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தமாக மாறும்.

செவ்வாய் -
தேவையற்ற அலைச்சல் ஏற்படும். முயற்சிகளில் ஒரு சில தொய்வுகள் ஏற்படலாம். பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போகும்.

புதன் -
தொழில் அல்லது வியாபார விஷயமாக பயணங்கள் ஏற்படும். அதில் ஒரு சில ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்வதற்கான வழி கிடைக்கும். தொழிலுக்கு மிகப்பெரிய பண உதவி கிடைக்கும்.

வியாழன் -
மனதில் சஞ்சலம் ஏற்படும். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றும். செலவுகள் அதிகமாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளும் எடுக்கக்கூடாது.

வெள்ளி -
எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். கடன் ஒன்றை அடைப்பீர்கள். வீடு சம்பந்தமான வியாபாரம் லாபகரமாக முடியும்.

சனி-
வியாபார விஷயங்கள் ஆதாயம் தரும்.எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

ஞாயிறு -
எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பயணங்களால் லாபம் ஏற்படும். கமிஷன் வியாபாரம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் முயற்சி ஒன்றை தொடங்கும் எண்ணம் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ கால பைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தாமதங்கள் அகலும். எதிர்ப்புகள் குறையும்.

********************************************

சித்திரை -
எடுத்துக்கொண்ட காரியங்களை வெற்றிகரமாக சாதிப்பீர்கள். வாக்கு வன்மை உண்டாகும். வழக்கு ஏதேனும் இருந்தால் தள்ளிப்போகும். மறைமுக எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் இப்பொழுது முற்றிலுமாக இல்லாமல் போகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். முக்கியமான விஷயங்கள் அனைத்தும் நீங்கள் எதிர்பார்த்தபடியே நிறைவேறும்.


உத்தியோகம் -
பெரிய மாறுதல் ஏதும் இல்லை. சகஜ நிலையில் இருக்கிறது. ஒரு சில வேலையில் மீண்டும் திருத்தங்கள் செய்ய வேண்டிய நிலை வரும். வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், துறை சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன் நன்கு பரிசீலனை செய்ய வேண்டும். சிறு நிறுவனங்கள், கடைகளில் வேலை செய்பவர்கள், வேலையை விட்டு விலகி வேறு நிறுவனத்திற்கு சேரும் எண்ணத்தை சற்று தள்ளி வையுங்கள். இந்த வாரம் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். பொதுவாக எந்தத் துறையில் நீங்கள் பணிபுரிந்தாலும், வேலையை விட்டு விலகும் எண்ணத்தை இந்த வாரம் செய்ய வேண்டாம்.

தொழில் -
தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. எதிர்பார்த்த பணம் இந்த வாரக் கடைசியில் உங்கள் கைக்கு வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் இந்தவாரம் விற்பனைகள் அதிகமாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். பத்திரப் பதிவு செய்வீர்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு கணிசமான முன்னேற்றம் உண்டு. ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு புதிய நிறுவனத்தோடு ஒப்பந்தங்கள் உண்டாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.

பெண்களுக்கு -
திருமண முயற்சிகள் கைகூடும். சொத்து சேர்க்கை இயல்பாக ஏற்படும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை அமையும். சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
ஒப்பந்தங்கள் உண்டாகும். பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். ஊடகத் துறையில் இருப்பவர்கள் மிக பெரிய சாதனை ஒன்றை செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த வாரம் -
திங்கள் -

அலைச்சல்கள் அதிகரிக்கும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பேச்சுவார்த்தைகளை தள்ளி வையுங்கள்.

செவ்வாய் -
நன்மைகள் ஏற்படும் வியாபார பேச்சுக்கள் சாதகமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். மனதை வருத்திய ஒரு கடனை அடைப்பதற்கு முயற்சி எடுப்பீர்கள்.

புதன் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும், வியாபார பேச்சுக்கள் வெற்றியாகும், வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும், வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வியாழன் -
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். லாபகரமான விஷயங்கள் நடைபெறும், பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி -
குடும்பத்தினருக்காக ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும். நீண்ட நாளாக வராமலிருந்த ஒருதொகை இன்று கிடைக்கும்.

சனி -
எடுத்த முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நல்ல தகவல் இன்று கிடைக்கும். இளைய சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ஞாயிறு -
அமைதியாக இருப்பது நல்லது. வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் கருத்து கூற வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம் -
காவல் தெய்வங்களான அய்யனார், முனீஸ்வரன், கருப்பசாமி போன்ற தெய்வங்களை வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தடைகள் அகலும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

************************************************************


சுவாதி -


எடுக்கின்ற முயற்சிகளில் ஓரளவு வெற்றி கிடைக்கும். ஒரு சில விஷயங்கள் தள்ளிப்போகும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வீண் பிரச்சினைகள் வரும். ஆனாலும் அதில் இருந்து எளிதாக தப்பித்து விடுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகமாகும். கணவன்-மனைவிக்குள் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சகோதரர்களிடம் சமாதானமாகச் செல்ல வேண்டும், உயரதிகாரிகளிடம் தேவையில்லாத விஷயங்களில் பிரச்சினைகள் செய்ய வேண்டாம்.

உத்தியோகம் -
பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். வேறு வேலைக்கு மாறலாமா? என்கிற சிந்தனை உருவாகும். பொறுமையாக இருப்பது நல்லது. சக ஊழியர்களிடமும் உயர் அதிகாரிகளிடமும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பணத்தைக் கையாளும் போதும் அல்லது பொருட்களை கையாளும்போதும் கவனமாக இருக்க வேண்டும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

தொழில் -
தொழில் ஓரளவுக்கு நல்ல நிலைமையில் இருக்கும். புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். அதிக முதலீடுகளை செய்ய வேண்டாம், புதிதாக கடன் எதுவும்பெற வேண்டாம்.
பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டாம். ஓரளவுக்கு லாபம் வரும் முதலீடுகள் மட்டும் செய்யுங்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போகும். வியாபாரிகள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள்.

பெண்களுக்கு -
தேவையில்லாத பிரச்சினைகளை பெரிதுபடுத்திக் கொண்டு இருக்க வேண்டாம். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கவனமாகவும் பேச வேண்டும்.
கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். சகோதரர்களிடம் சமாதானமாக செல்லுங்கள்.

மாணவர்களுக்கு -
ஞாபக மறதி அதிகமாகும். கல்வியில் ஈடுபாடு குறையும். சக மாணவர்களோடு வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.கல்வியில் அதிக கவனமும் அக்கறையும் தேவை.

கலைஞர்களுக்கு -
இன்னும் ஒரு சில வாரங்களில் நிலைமை மாறும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போகும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

பொதுப்பலன் -
பொறுமையாக இருந்து காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும்.எதிலும் அதிக அவசரம் காட்டக்கூடாது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு தொண்டைவலி மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

இந்த வாரம் -
திங்கள் -

லாபகரமான பேச்சுவார்த்தைகள் நடக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு.

செவ்வாய் -
தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அலுவலகத்திலோ - பொது இடத்திலோ உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம். சமூக வலைதளங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

புதன்-
எதிர்பார்த்த பெரிய உதவி ஒன்று கிடைக்கும். வியாபாரப் பேச்சுக்கள் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.

வியாழன் -
பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனப் பழுது ஏற்படும். வீட்டுச் செலவுகள் அதிகமாகும்.

வெள்ளி -
உங்கள் உடல் நலம் சார்ந்து ஒரு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சி எடுப்பீர்கள். மனதில் இனம் புரியாத பயம் வரும்.

சனி-
தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். ஒரு சிலரின் வருத்தத்திற்கு ஆளாக நேரிடும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

ஞாயிறு -
எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார முயற்சிகள் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வாருங்கள். அங்கு அமைதியாக தியானம் செய்யுங்கள். பிரச்சினைகள் குறையும். நன்மைகள் அதிகமாகும். மனதில் தெளிவு பிறக்கும்.

*******************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்