ஜோதிடர் ஜெயம் சரவணன்
மகம் -
நன்மைகள் அதிகமாக நடந்தாலும் மனதில் இனம் புரியாத ஒரு குழப்பம் ஏற்படும். ஒரு சில பிரச்சினைகளில் தீர்வு காண முடியாமல் தவிப்பீர்கள். ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இல்லாவிட்டாலும், அது தொடர்பான சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. ஆனாலும் பணி அழுத்தம் இருப்பதாக எண்ணிக் கொள்வீர்கள். இடமாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு இப்பொழுது இடமாற்றம் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு வேலையில் அழுத்தம் அதிகரிக்கும். ஆனாலும் சகஜமாக அதை சமாளிப்பீர்கள். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு உங்கள் நிறுவனத்திலேயே இடமாற்றம் ஏற்படும்.வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தவருக்கு இந்த வாரம் நல்ல தகவல் கிடைக்கும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த நல்ல தகவல் இந்த வாரம் கிடைக்கும். அரசு வழியில் இருந்த ஒரு சில பிரச்சினைகளும் இந்த வாரம் முடிவுக்கு வரும். வங்கியில் ஏற்பட்டிருந்த ஒரு சில குழப்பங்கள் முடிவுக்கு வரும். வழக்குகள் சாதகமாக இருக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி இருப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமான பலனை எதிர்பார்க்கலாம். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அளவான முதலீடுகள் செய்து லாபம் அதிகமாக கிடைக்கப்பெறுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள், கடன் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும்.
பெண்களுக்கு -
திருமணமாகாத பெண்களுக்குத் திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். வேலையில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தேர்வில் எதிர்பாராத அளவுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். அதன் மூலம் வருமானம் இரட்டிப்பாக இருக்கும். வெளிநாடு சென்று கலை நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைஞர்களுக்கு அந்த வாய்ப்பு வாரம் கிடைக்கும். ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வும், உரிய மரியாதையும் கிடைக்கும்.
பொதுப்பலன் -
மனதில் தேவையில்லாத அச்ச உணர்வு உண்டாகும். அந்த பயத்தை உதறி விட்டால் வேறு எந்த பிரச்சினைகளும் இருக்காது. தியானம் யோகா உள்ளிட்டவற்றை செய்யுங்கள்.குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவலை ஏற்படும், ஆனால் பாதிப்புகள் ஏதும் இருக்காது. உங்களுடைய ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனையை தவிர வேறு எந்த பிரச்சினையும் இருக்காது.
இந்த வாரம் -
திங்கள் -
அலைச்சல்கள் ஏற்படும். அலைச்சலுக்குண்டான ஆதாயம் தாமதமாக கிடைக்கும். இன்று எடுக்கின்ற முயற்சிக்கு, பின்னாளில் பலன் கிடைக்கும்.
செவ்வாய் -
வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
புதன் -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வியாபார ஒப்பந்தம் இன்று ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். வங்கியில் ஏற்பட்டிருந்த சில குளறுபடிகள் முடிவுக்கு வரும்.
வியாழன் -
உங்கள் எதிர்காலம் கருதி ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அது தொடர்பான முயற்சிகளில் இறங்கி வெற்றி காண்பீர்கள். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய ஒரு நபரை இன்று சந்திப்பீர்கள்.
வெள்ளி -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்தேறும். பணவரவு பல வழிகளிலும் வரும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி ஆகும்.
சனி-
வியாபார விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். அல்லது அலுவலகம் தொடர்பான பயணம் ஒன்று ஏற்படும்.அலைச்சல் உண்டு. ஆதாயம் குறைவு.
ஞாயிறு -
சொந்த வீடு வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்று சுமுகமாக நிறைவேறும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து, அந்தப் பிரசாதத்தை தானமாக தாருங்கள். நன்மைகள் அதிகமாகும். மனக் குழப்பங்கள் தீரும். மனதில் நிம்மதி பிறக்கும்.
************************************************************
பூரம் -
நேற்றைய பிரச்சினை ஒன்று இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். நல்ல வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வாரம் நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அரசு உத்தியோகத்திற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு அந்த முயற்சி வெற்றி ஆகும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் இருந்த ஒரு சில அழுத்தங்களும் இந்த வாரம் முடிவுக்கு வரும். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் விறுவிறுப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அதேபோல விரும்பிய இடமாற்றம் உண்டாகும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.
கடைகள், சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றி ஆகும்.
தொழில் -
தொழிலில் கடந்த சில வாரங்களாக இருந்த தடைகள் அனைத்தும் இப்போது முடிவுக்கு வரும். வங்கியில் ஏற்பட்டிருந்த ஒரு சில பிரச்சினைகள் தீரும். புதிய வங்கிக் கடன் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் கிளைகளைத் துவக்குவதற்கு வாய்ப்பு உண்டு. ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான வாரமாக இருக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அளவான லாபம் கிடைக்கும். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் சலுகைகளை அறிவித்து வியாபாரத்தை அதிகமாக்குவார்கள்.
பெண்களுக்கு -
குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் இருந்த ஒரு சில பிரச்சினைகளும் தீரும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். மனக் குழப்பத்தில் இருந்த பெண்களுக்கு இந்த வாரம் தெளிவு கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் அதிக முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் எதிர்பாராத அளவுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். வேறு கல்வி நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றி ஆகும்.
கலைஞர்களுக்கு -
எதிர்பாராத அளவுக்கு ஒப்பந்தங்கள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். துறை சார்ந்த நண்பர்கள் உதவுவார்கள்.எழுத்தாளர்களுக்கு கௌரவம் கிடைக்கும்.
பொதுப் பலன் -
மனக்குழப்பத்தைத் தவிர வேறு எந்த பிரச்சினைகளும் இல்லை. மனக்குழப்பத்திற்கு மட்டும் ஆளாக வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் சந்தேகப் பார்வை தேவையில்லை. திறந்த மனதோடு இருங்கள். அனைத்தும் நன்மையாகவே நடக்கும். ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஒருசிலருக்கு சிறுநீரகக் கல் போன்ற பிரச்சினைகள் வரலாம். தகுந்த மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
தேவையான உதவிகள் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனநிறைவு ஏற்படும் வகையில் அனைத்து விஷயங்களும் சாதகமாக இருக்கும்.
செவ்வாய் -
வியாபார விஷயங்களில் கிடைக்கும் ஆதாயத்தை பங்கு போட வேண்டியது வரும். நண்பர்கள் உதவி கேட்பார்கள். உறவினர்களும் ஒரு சில உதவிகளை கேட்டு வருவார்கள்.
புதன் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரங்கள் வெற்றியாகும். தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வீட்டுக் கடன், தொழில் கடன் போன்றவை இன்று கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
வியாழன் -
வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும்.வியாபார பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவுக்கு வரும் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் இன்று முடிவுக்கு வந்து, ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடப்பதற்கான பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும்.
சனி -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். ஆதாயம் தரும் வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும்.
ஞாயிறு -
செலவுகள் ஏற்படும். குறிப்பாக வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகமாக இருக்கும்.வாகன செலவும் உண்டு. வாகன மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
லட்சுமி நரசிம்மரை வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தி ஆகும்.
************************************************************
உத்திரம் -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நல்ல தகவல் இந்த வாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சொத்துக்கள் விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும், பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஆனாலும் மருத்துவ ஆலோசனையைத் தொடர வேண்டும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய மாறுதல் ஏதும் இருக்காது. அதேபோல் அழுத்தங்களும் பெரிய அளவில் இருக்காது. இடமாற்றம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு பொறுப்புகள் கூடும், பணிச்சுமை அதிகரிக்கும். கடைகள் வணிக நிறுவனங்கள் பணிபுரிபவர்களுக்கு பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். நீண்டநாளாக பேசி வந்த ஒப்பந்தம் நிறைவேறும். முதலீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு .கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு கூட்டாளியில் ஒருவரால் லாபம் ஏற்படும். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கணிசமாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு இயல்பான வளர்ச்சி ஏற்படும்.
பெண்களுக்கு -
சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கையும் உண்டு. ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. சகோதர வகையில் இருந்த ஒரு சில மன வருத்தங்கள் தீரும்.
மாணவர்களுக்கு -
கல்வி தொடர்பான ஒரு முக்கிய மாற்றம் ஒன்று ஏற்படும். அது வேறு கல்வி நிறுவனத்திற்கு மாறுவதாக இருக்கலாம். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு அது தொடர்பான நல்ல தகவல் இந்த வாரம் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
இதுவரை இருந்த தடைகள் எல்லாம் அகலும். ஒப்பந்தங்கள் ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.நாட்டியக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
பொதுப்பலன் -
வேண்டிய உதவிகள் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். ஆனால் அதுவும் பெரிய பாதிப்புகள் இருக்காது. பண உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.ஒரு சிலருக்கு முதுகுவலி, மூச்சு பிடிப்பு போன்ற பிரச்சினைகள் வரலாம்.
இந்த வாரம் -
திங்கள் -
அலைச்சல்கள் அதிகமாக ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு தள்ளிப் போகலாம்.
செவ்வாய் -
நேற்று பாதியில் நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று செய்து முடிப்பீர்கள். ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.
புதன் -
உடல் நலம் பற்றிய தேவையில்லாத அச்சம் ஏற்படும். எனவே மருத்துவச் செலவுகள் உண்டு. ஆனால் பாதிப்புகள் ஏதும் இருக்காது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும்.
வியாழன் -
ஒரு சில விஷயங்கள் சாதகமாக இருக்கும். பேச்சுவார்த்தைகள் இழுபறியாக இருக்கும். முடிவுகள் எட்டப்படுவதில் தாமதம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
வெள்ளி -
வெளிநாடு செல்வது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.
சனி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். ஆதாயம் தரக்கூடிய விஷயங்கள் அனைத்தும் இன்று எளிதாக முடியும்.
ஞாயிறு -
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபவிசேஷ பேச்சுவார்த்தைகள் இனிதாக முடியும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
அபிராமி அந்தாதி படித்து வாருங்கள். கவலைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
******************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago