ஜோதிடர் ஜெயம் சரவணன்
புனர்பூசம் -
ஒரு சில எதிர்ப்புகள் தோன்றினாலும் அதை எல்லாம் எளிதாகத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். தேவையான உதவிகள் கடைசி நேரத்தில் கிடைக்கும் பணத்தேவைகள் பூர்த்தியாகும் எதிரிகள் காணாமல் போவார்கள் நினைத்தது நிறைவேறும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் உங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சக ஊழியர் அலுவலகத்தை விட்டு வெளியேறுவார். உங்களுக்கான மதிப்பு மரியாதை கூடும். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும். மனதில் ஒரு நிறைவு இருக்கும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு கடந்த சில வாரங்களாக இருந்த அழுத்தம் குறையும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
தொழில் -
அரசு வழியில் இருந்த பிரச்சினைகள் இப்பொழுது எளிதாகத் தீரும். வங்கிக் கடன் சார்ந்த விஷயங்கள் சாதகமாக இருக்கும். நீண்ட நாளாக தள்ளிப்போன ஒப்பந்தங்கள் இப்பொழுது ஏற்படும். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். ஏற்றுமதி -இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான வாரமாக இருக்கும். பங்கு வர்த்தகத் துறையினர் மட்டும் அளவாக முதலீடு செய்யுங்கள். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு நிதானமான வளர்ச்சி ஏற்படும்.
பெண்களுக்கு -
கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை எளிதாக முடிவடையும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். மருத்துவச் செலவுகள் முற்றிலுமாக தீரும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவும் உண்டாகும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
கலைஞர்களுக்கு-
வெளிநாடு செல்லும் முயற்சி முழு வெற்றியைத் தரும். அயல்நாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். எழுத்தாளர்கள் புதிய புதினம் ஒன்றை எழுதத் தொடங்குவார்கள்.
பொதுப்பலன் -
கடந்த சில வாரங்களாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தேவைகள் பூர்த்தி ஆகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை பார்க்கும் முயற்சி வெற்றி ஆகும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் பெருமளவு குறையும். ஆனாலும் ஒரு சிலருக்கு அலர்ஜி மற்றும் தோலில் நமைச்சல் எரிச்சல் போன்றவை ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள் -
வேலை தொடர்பான ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அது வெளிநாடு செல்லும் முயற்சியாகவும் இருக்கலாம். இன்று அந்த முயற்சியில் இறங்குவீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
செவ்வாய் -
எடுத்த முயற்சிகள் மட்டுமல்லாமல் எடுக்காத முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். எப்போதோ பேசி வைத்து கிடப்பில் போடப்பட்டிருந்த ஒரு வியாபாரம் இன்று திடீரென முடிவாகும். அலுவலகத்தில் தேங்கி நின்ற அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தேவைகள் முழுமையாக பூர்த்தி ஆகும்.
புதன் -
பயணங்கள் ஏற்படும், பயணங்களால் ஏற்படக்கூடிய ஆதாயம் தள்ளிப்போகும். செலவுகள் அதிகமாக ஏற்படும். குறிப்பாக வீட்டுப் பராமரிப்பு செலவு அதிகமாக இருக்கும்.
வியாழன் -
வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முழுமையடையும். ஒரு சில உதவிகள் தானாகத் தேடி வரும்.நீண்ட நாளாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சினை இன்று தீர்வு காணப்படும்.
வெள்ளி -
நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். இல்லத்திற்கு உறவினர்கள் வருகை ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும்.
சனி-
ஒரு முக்கிய கடனை அடைப்பதற்கு முயற்சி எடுப்பீர்கள். அந்த முயற்சி வெற்றி ஆகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் முழுமையடையும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
ஞாயிறு -
வீட்டை புதுப்பிக்கும் எண்ணம் உருவாகும். அல்லது வாகனத்தை மாற்றும் எண்ணம் ஏற்படும். அது தொடர்பான செலவுகள் அதிகமாக இருக்கும். தொலைதூரப் பயணங்கள் செல்ல வேண்டாம்.
வணங்கவேண்டிய தெய்வம் -
தக்ஷிணாமூர்த்தி குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். பிரச்சினைகள் தீரும். செழிப்பான வாரமாக இருக்கும்.
*************************************************************
பூசம் -
நீண்ட நாளாக தீர்க்கமுடியாத பிரச்சினைகள் இந்த வாரம் தீர்வுக்கு வரும். வழக்குகள் ஏதேனும் இருந்தால் இந்த வாரம் முடிவுக்கு வரும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொன்னான வாய்ப்புகள் தேடி வரும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு தானாக கிடைக்கும். தொல்லை தந்து கொண்டிருந்த சக ஊழியர்கள் வேலையை விட்டுச் செல்வார்கள்.இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சலுகை அனைத்தும் கிடைக்கும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நல்ல நிறுவனங்களுக்கு மாறுவார்கள்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பு உடைய ஒப்பந்தங்கள் உண்டாகும்.பெரிய கடன் ஒன்றை அடைத்து மனநிம்மதி அடைவீர்கள். தொழிலை விரிவுபடுத்தத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அளவுக்கு லாபங்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். லாபம் இரு மடங்காக இருக்கும்.
பெண்களுக்கு-
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது புத்திரபாக்கியம் உண்டாகும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். சகோதர வழியில் இருந்த மனவருத்தங்கள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக குணமாகும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். வெளிநாடு சென்று கல்வி கற்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இப்போது அந்த வாய்ப்பு தானாகக் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு-
தடைபட்டிருந்த பேச்சுவார்த்தைகள் இப்பொழுது முன்னேற்றப் பாதைக்கு செல்லும். ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இசைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு உண்டு. கதை மற்றும் கவிதை எழுதுபவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும்.
பொதுப்பலன் -
நன்மைகள் அதிகமாக ஏற்படும். பிரச்சனைகள் தீரும். கடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் முடிவுக்கு வரும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஒரு சில பிரச்சினைகள் வரும். தகுந்த மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அடிவயிறு, இடுப்பு சம்பந்தப்பட்ட இடங்களில் பிரச்சினைகள் வரும். ஜீரணக் கோளாறுகள் ஏற்படும். எனவே உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பாராத அளவுக்கு நன்மைகள் நடைபெறும். தேவையான உதவிகள் உடனடியாகக் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி தரும்.
செவ்வாய் -
வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். கமிஷன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இன்று முன்னேற்றம் ஏற்படும். வங்கிக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
புதன் -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் நாள். பணம் பல வழிகளிலும் வரும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான வெளிநாட்டு உதவி கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி முழுமையடையும்.
வியாழன் -
அமைதியாக இருப்பது நன்மை தரும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஒப்பந்தங்கள் ஏதும் இருந்தால் ஒத்தி வையுங்கள். முக்கிய சந்திப்புகள் வேண்டாம்.
வெள்ளி -
ஆதாயம் தரும் விஷயங்கள் இன்று சாதகமாக இருக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு ஒப்பந்தம் ஏற்படும்.
சனி-
செலவுகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும். வாகனம் மாற்றும் சிந்தனை உண்டாகும். நண்பர்களால் செலவுகள் இருக்கும்.
ஞாயிறு -
சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் இன்று முடிவுக்கு வரும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் :
சக்கரத்தாழ்வார் மற்றும் கருடாழ்வாரை துளசி மாலை சார்த்தி வணங்கி வாருங்கள். எதிர்ப்புகள் விலகும். வெண்பொங்கல் நைவேத்தியம் செய்வது இன்னும் விசேஷம்.
*********************************************************************
ஆயில்யம் -
நீண்ட நாளாக தொல்லை தந்து கொண்டிருந்த எதிரிகள் காணாமல் போவார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது சுப விசேஷ நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடன் இல்லாத நிலை ஏற்பட வாய்ப்பு அமையும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் சிறப்பான நன்மைகள் நடக்கும். பதவி உயர்வு கிடைக்கும். மிகப்பெரிய நிறுவனத்திலிருந்து வேலைக்கான அழைப்பு வரும். உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளுங்கள். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்தவாரம் சாதகமான பதில் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றி ஆகும். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு வேலையிலிருந்த அழுத்தங்கள் குறையும். வேலை தொடர்பான சிக்கல்கள் தீரும்.
தொழில் -
நீங்களே எதிர்பாராத ஒரு முதலீடு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி ஆகும். செய்கின்ற தொழிலோடு இணைந்த புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு லாபம் இருமடங்காக இருக்கும். பல நிறுவனங்களில் இருந்து ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் ஏற்படும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். புதிய கிளைகளைத் துவங்குவார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிக அளவில் வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.
பெண்களுக்கு-
இதுவரை திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். குழந்தை பாக்கியத்துக்காக மருத்துவச் செலவு செய்தவர்களுக்கு இனி, மருத்துவ செலவு இல்லாமலேயே குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். சொந்த வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
மாணவர்களுக்கு -
தடைபட்டிருந்த கல்வி மீண்டும் தொடரும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு, இந்த வாரம் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வங்கியில் எதிர்பார்த்த கல்விக்கடன் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
மனம் மகிழும் அளவுக்கு ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். துறை சார்ந்த பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்க உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும்.
பொதுப் பலன் -
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி ஆகும். சுப விசேஷ பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு மூச்சிறைப்பு மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
இந்த வாரம் -
திங்கள் -
வெளிநாடு செல்வதற்கான அனைத்து முயற்சிகளும் வெற்றி ஆகும். அது தொடர்பான தகவல்கள் சாதகமாக இருக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவி எதிர்பார்த்த மாதிரியே கிடைக்கும்.
செவ்வாய் -
வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
புதன் -
சுபவிசேஷ பேச்சுவார்த்தைகள் இன்று முடிவாகும். திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இன்று ஒப்பந்தம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
வியாழன் -
பயணங்கள் ஏற்படும். அது தொடர்பான விஷயங்களில் ஆதாயம் குறையும். அலைச்சல் அதிகமாக இருப்பதால் உடல் சோர்வு, அசதி ஏற்படும்.
வெள்ளி -
நிலம் பூமி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தமாகும். தொழில் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கியில் கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாக தீரும்.
சனி-
ஆடம்பரமான நாளாக இருக்கும். ஆதாயங்கள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். தேவைகளை பூர்த்தியாகும்.
ஞாயிறு -
செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போகும். கிடைக்கின்ற ஒரு சில வருமானத்தையும் பங்கிட்டுத் தருவதாக இருக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
அருகில் இருக்கும் மாரியம்மன் ஆலயத்திற்குச் செல்லுங்கள். அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள். நன்மைகள் கூடுதலாகும்.
***************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago