இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: அதிரடியாக திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: முகப்பொலிவு கூடும். சமயோசிதமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சில விஷயங்களில் தைரியமாக முடிவு எடுத்து வெற்றி பெறுவீர்கள். நீண்டநாட்களாக விலகியிருந்த உறவினர், நண்பர்களின் சந்திப்பு நிகழும்.

சிம்மம்: மனக்குழப்பங்கள் விலகி அமைதி நிலவும். விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரித்தாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி: சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். எனவே பேச்சில் கவனம் தேவை. கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து செல்லுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வாகனம் அடிக்கடி பழுதாகும்.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள் நண்பர்கள் திரும்ப வருவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்திப்பீர்கள்.

தனுசு: உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதரர் வகையில் சில காரியங்கள் நிறைவேறும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள்.

மகரம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிப்பீர்கள்.

கும்பம்: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். சாலையை கடக்கும்போது கவனம் தேவை.

மீனம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்