இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? உத்திராடம்  முதல் சதயம் வரை (டிசம்பர் 16 முதல் 22-ம் தேதி வரை)

By செய்திப்பிரிவு

- ஜோதிடர் ஜெயம் சரவணன்


உத்திராடம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் முழு வெற்றியைப் பெறுவீர்கள். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கு தகுந்த வருமானம் இருக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. திருமணமாகாதவர்களாக இருந்தால் உங்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆனவர்களாக இருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் உறுதிசெய்யப்படும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். புதிதாகத் தொழில் தொடங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு தொழில் தொடங்க உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். மருத்துவச் செலவுகள் குறையும்.

உத்தியோகம் -
எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு இந்த வாரம் நிச்சயமாக இடமாற்றம் ஏற்படும்.அலுவலகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும்.ஒருசிலருக்கு குழுவிற்கு தலைமை ஏற்கவும் வாய்ப்பு கிடைக்கும். மிக முக்கியமான பணிகளை உங்களை நம்பிக் கொடுப்பார்கள். அதை சிறப்பாகச் செய்வீர்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் சாதகமான பதிலை எதிர்பார்க்கலாம்.

தொழில் -
சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். வேலை ஒப்பந்தங்கள் அதிக அளவில் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாக இருக்கும். சொத்து வாங்கும் யோகமும் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு உன்னதமான பலன்கள் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிதாக தொழில் செய்யும் எண்ணம் உடையவர்களுக்கு தேவையான உதவிகள் இந்த வாரம் கிடைத்து, தொழிலை ஆரம்பிக்கும் நிலை ஏற்படும்.
பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் இரு மடங்காக இருக்கும். நிறைய முதலீடுகளை செய்து அதிக லாபம் கிடைக்கப் பெறுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் வளர்ச்சி அடைவது மட்டுமல்லாமல், தங்கள் வியாபாரத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வார்கள்.ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். லாபம் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள். ஒரு சில சலுகைகளை அறிவித்து வியாபாரத்தை பெருக்குவீர்கள்.

பெண்களுக்கு -
நீங்கள் நினைத்ததெல்லாம் நடைபெற ஆரம்பிக்கும். உங்கள் எண்ணங்கள் செயல்வடிவம் ஆகும். உங்கள் பெயரில் சொத்து சேரும் நேரம் இது. சுயதொழில் செய்யும் ஆர்வமுள்ள பெண்களுக்கு இந்த வாரம் தொழிலுக்கு தேவையான அனைத்து உதவிகளும் குடும்பத்தினரிடம் இருந்து கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். மேற்கொண்டு கல்வி பயிலத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
உங்களுடைய திறமை மீது இப்போது தான் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். எனவே புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். அது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக உங்களுக்கு அமையும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

பொதுப்பலன் -
தீவிரமாக உழைத்தால் மேலும் உயர்ந்த நிலைக்குப் போகலாம். சாதகமான அம்சங்கள் இருப்பதால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி ஆகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்தவர்களும் இனி மருத்துவ உதவி இல்லாமலேயே குழந்தை பாக்கியம் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எனவே மருத்துவச் செலவுகள் குறையும்.ஒரு சிலருக்கு உடல் நலத்தில் சிறிய அளவிலான பாதிப்பு உண்டாகும். அது தொடர்பான மருத்துவச் செலவுகளும் இருக்கும். ஆனால் பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் இருக்காது.

இந்த வாரம் -

திங்கள் -இன்று சந்திராஷ்டமம். எனவே பொறுமையாக இருப்பது நல்லது. எதிலும் அவசர முடிவுகள் வேண்டாம்.

செவ்வாய் - எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும்.வியாபாரம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் ஒரு சில சலுகைகள் கிடைக்கும்.

புதன் - சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்படும். பயணத்தால் ஆதாயம் உண்டு. கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும்.வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். வங்கி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

வியாழன் - உத்தியோக மாற்றம் அல்லது தொழில் மாற்றம் பற்றிய சிந்தனை வரும். அது தொடர்பான முயற்சிகளில் இறங்குவீர்கள். வியாபார ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். உங்கள் துறை சார்ந்த முக்கிய நபர் ஒருவரை சந்திப்பீர்கள்.

வெள்ளி - நினைத்தது நினைத்தபடி செய்து காட்டுவீர்கள். பணம் பல வழிகளிலும் வரும். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தமாக மாறும். அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

சனி- செலவுகள் அதிகமாக இருக்கும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை உண்டாகும். வீட்டை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ஞாயிறு - சொந்த வீடு சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் விஷயமாக உதவிகள் கிடைக்கும். நீண்டநாள் எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வணங்கி வாருங்கள். முடிந்தால் ஒருமுறை திருப்பதி சென்று வாருங்கள். நன்மைகள் அதிகமாகும், நினைத்தவை நிறைவேறும்.

**********************************************************************************
திருவோணம் -
பெரிய முயற்சிகள் ஏதும் இல்லாமலேயே உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மனம் மகிழும் சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ சுப விசேஷங்கள் நடக்கும். அசையாச் சொத்துக்கள் வாங்குவீர்கள். ஒருசிலர் பூர்வீகச் சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஒரு முக்கிய பிரச்சினை ஒன்று இந்த வாரம் சுமூகமாகத் தீரும். அதனால் மன நிம்மதி அடைவீர்கள்.

உத்தியோகம் -
எதிர்பாராத அளவுக்கு இப்பொழுது பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வு உண்டாகும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். உங்கள் அலுவலகத்தின் சார்பில் வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு. புகழ்பெற்ற நிறுவனத்திலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். அப்படி வரும் நல்ல வாய்ப்பை தவறவிடாதீர்கள். அரசு ஊழியர்களுக்கு இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகைகள் கிடைக்கும். அலுவலக ரீதியாக வாங்கிய கடனை முழுமையாக அடைப்பீர்கள். சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நல்ல நிறுவனத்திற்கு மாறுவார்கள் அல்லது இப்போது இருக்கும் நிறுவனத்திலேயே பதவி உயர்வு கிடைக்கும்.

தொழில் -
நீங்கள் எதிர்பாராத அளவுக்கு உதவிகள் கிடைக்கும். முதலீடுகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். பலரும் உங்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்ய முன்வருவார்கள். தொழிலை விரிவுபடுத்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். அரசின் சலுகைகள் மானியங்கள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும், மேலும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள், புதிய கிளைகளை துவங்குவார்கள். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் அதிக வாடிக்கையாளர்களை பெறுவது மட்டுமல்லாமல் அதிக வேலை ஒப்பந்தம் பெறுவார்கள். லாபம் பல மடங்காக இருக்கும்.

பெண்களுக்கு -
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் நடந்து புத்திர பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு இப்பொழுது புத்திர பாக்கியமும் உண்டாகும். இதுவரை வேலை இல்லாமல் இருந்த பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு உத்தியோகம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. அசையாச் சொத்து வாங்குவீர்கள். சுயதொழில் செய்யும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த வாரம் தொழில் தொடங்குவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உண்டு,

மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நீங்களே எதிர்பாராத அளவுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். உயர்கல்வி மாணவர்களுக்கு அதிக உதவிகள் கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த வாய்ப்பு இப்போது கிடைக்கும். இசைத்துறை மற்றும் நாட்டியத் துறை சார்ந்தவர்களுக்கு அயல்நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் உதவிகள் அல்லது மானியங்கள் கிடைக்கும்.

பொதுப்பலன் -
சாதகமான அம்சங்கள் இருப்பதால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஒரு சில தடைகள் இருந்தாலும் அதையெல்லாம் எளிதாக கடந்து செல்வீர்கள். வருமானம் அதிகமாக இருப்பதால் செலவுகள் பற்றிய பெரிய பிரச்சனை ஏதும் இருக்காது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர்கள் பெயரில் ஒரு சில முதலீடுகளைச் செய்வீர்கள்.

இந்த வாரம் -

திங்கள் - எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும் .சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

செவ்வாய் - இன்று சந்திராஷ்டமம். எதிலும் கவனமாக இருக்கவேண்டும். கையாளும் பொருட்களில் அதிக கவனம் வேண்டும் .வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும்.

புதன் -நேற்று நின்றுபோன வேலைகள் அனைத்தையும் இன்று பரபரப்பாக செய்து முடிப்பீர்கள். ஒப்பந்தங்கள் போடுவீர்கள். எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

வியாழன் - வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தமாக மாறும். நீண்டநாளாக வராமலிருந்த பணம் வந்து சேரும்.

வெள்ளி - அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆனாலும் ஆதாயம் ஏற்படும். சில நல்ல முடிவுகளை எடுத்து செயல்படுத்துவீர்கள். அரசு ரீதியான ஒரு நபரை சந்தித்து அதனால் ஆதாயம் பெறுவீர்கள்.

சனி- திட்டமிட்ட வேலைகள் அனைத்தையும் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். பணம் பல வழிகளிலும் வரும். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ஞாயிறு – செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வாருங்கள். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமணம் உள்ளிட்ட முயற்சிகள் வெற்றியாகும்.

************************************************


அவிட்டம் -
சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம் .உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அசையாச் சொத்து வாங்கும் யோகமும் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் அமையும். முழுமூச்சாக பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டு கடன்கள் அனைத்தையும் அடைக்க முற்படுவீர்கள்.
இதுவரை திருமணம் தாமதப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த வாரம் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடைந்து, நிச்சயதார்த்தம் நடக்கும். திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஏற்கனவே குழந்தை இருந்தாலும் இப்போது இரண்டாவது குழந்தை உருவாகும்.

உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. சகஜமான நிலையே இருக்கும். பதவி உயர்வு மற்றும் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். ஊக்கத் தொகை அதிகமாக பெறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தத் தேவையான உதவிகள் கிடைக்கும். நீங்கள் தயாரிக்கும் பொருளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் தொழிலை ஆரம்பிக்கும் நேரம் தொடங்கிவிட்டது. ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும், தொழில் சார்ந்த மற்றொரு தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள். லாபம் இருமடங்காக இருக்கும்.
பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு, நீங்கள் முதலீடு செய்யும் பங்குகளால் எதிர்பாராத வகையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தற்போது உங்களுடைய தொழிலில் விற்பனை அதிகமாவதைக் கண்டு உற்சாகமாக இருப்பீர்கள்.

பெண்களுக்கு -
குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கப்படும். சகோதர வழியில் ஆடை ஆபரணங்கள் பரிசாகக் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சொந்தமாகத் தொழில் தொடங்கும் ஆர்வம் இருந்தவர்களுக்கு இந்த வாரம் தேவையான உதவிகள் கிடைத்து தொழிலைத் தொடங்க வழி கிடைக்கும்.

மாணவர்களுக்கு -

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள். கல்வியில் அடுத்தகட்ட நகர்வுக்கு செல்வார்கள். அதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். உங்கள் ஊதியம் இருமடங்காக உயரும் . அசையாச் சொத்துக்கள் வாங்குவீர்கள். உங்கள் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் ஆரம்பிப்பீர்கள்.

பொதுப்பலன் -
வாரத்தின் பெரும்பாலான நாட்களில் நல்ல பலன்களே நடக்கும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும் . சொத்துக்கள் வாங்குவீர்கள். தந்தையின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஆனாலும் ஒருசிலருக்கு தொடை மற்றும் பின் பகுதியில் சிறிய கொப்பளங்கள், தசை பிசகுதல் போன்ற பிரச்சினைகள் வரலாம்.

இந்த வாரம் -

திங்கள் - நண்பர்கள் அல்லது உறவினர்கள் இவர்களுக்காக ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். அல்லது அவர்கள் உதவி கேட்டு வருவார்கள். அவர்களுக்காக ஒரு சில வேலைகளை செய்து கொடுப்பீர்கள்.

செவ்வாய் - வியாபாரம் முன்னேற்றம் தருவதாக இருக்கும். ஒப்பந்தம் போடும் அளவுக்கு இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கடன் சம்பந்தமான ஒரு பிரச்சினை முடிவுக்கு வரும்.

புதன் - மகர ராசி அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் எனவே, நிதானமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வியாழன் - கும்பராசி அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு இன்று மதியம் வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. மதியத்திற்குப் பிறகு உங்கள் செயல்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

வெள்ளி - வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொழில் ரீதியாக வெளிநாட்டில் இருந்து ஒரு உதவி கிடைக்கும்.

சனி - வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலகத்தில் கலந்துரையாடல் ஏதும் இருந்தால் உங்கள் கருத்துக்கு இன்று நல்ல மதிப்பு கிடைக்கும்.

ஞாயிறு - வீடு சம்பந்தமான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் பேசி முடிப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தங்கள் போடுவீர்கள்.

வணங்கவேண்டிய தெய்வம் -

விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சூட்டி, ஏழு நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். சந்திராஷ்டம பிரச்சினைகள் குறையும்.
****************************************************************
சதயம் -

பெரும்பாலான நாட்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்திலும் முழு வெற்றியைப் பெறுவீர்கள். உத்தியோக ரீதியாக ஒரு பதவி உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் சேமிப்பிலிருந்து ஏதும் அசையா சொத்துக்கள் வாங்க முற்படுவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் பாகப்பிரிவினை ஏதும் இருந்தால் இப்போது சுமுகமாக முடிவடையும். தந்தையின் உடல்நலத்தில் இப்பொழுது முன்னேற்றம் ஏற்படும். அவருக்கான மருத்துவ செலவுகள் குறையும். ஒருசிலர் பூர்வீகச் சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்கள் வாங்க முற்படுவார்கள்.

உத்தியோகம் -
எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கண்டிப்பாக கிடைக்கும். அயல்நாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்தவாரம் சாதகமான பதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு அலுவலக ரீதியாக அயல்நாட்டில் வேலை செய்யும் யோகம் ஏற்படும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது அரசு வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நல்ல நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றியாகும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மேலும் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடுவார்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம், லாபம் கிடைக்கும். கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகத்தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக இருக்கும்.
லாபம் பல மடங்காக இருக்கும். சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குறிப்பாக வங்கிக்கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு சிலர் பழைய இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்களை வாங்குவார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களே எதிர்பாராத அளவுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பெண்களுக்கு -
அனைத்துவித நன்மைகளும் நடக்கும். அசையாச் சொத்துக்கள் வாங்குவீர்கள். சொந்த வீடு கனவு நனவாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். ஆண் குழந்தை எதிர்பார்த்தவர்களுக்கு இப்பொழுது ஆண் குழந்தையே உருவாகும். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தால் உங்களுக்குப் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாகத் தான் இருக்கும்‌.

மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான உதவிகள் கிடைக்கும். உயர்கல்வி மாணவர்கள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறுவார்கள்.

கலைஞர்களுக்கு -
சற்றும் எதிர்பாராத இடத்தில் இருந்து அழைப்பு வரும். ஒப்பந்தங்கள் போடுவீர்கள். எதிர்பாராத அளவுக்கு சன்மானம் இருக்கும்.

பொதுப்பலன் -
உங்களுக்கான வாய்ப்புகள் அனைத்தும் சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. சரியாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உடல்நலம் சீராக இருக்கும். பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்காது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர்களுக்கான சேமிப்புகளை தொடங்குவீர்கள். குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சிகரமான வாரமாக இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள் - சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிப்பீர்கள். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். ஒப்பந்தங்கள் போடுவீர்கள். உத்தியோக ரீதியான பதவி உயர்வு பற்றிய தகவல் இன்று கிடைக்கும்.

செவ்வாய் - சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். வியாபார ரீதியான பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டே போகும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் ஏற்படுவதில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும்.

புதன்- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கடன் சம்பந்தமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். வங்கிக்கடன் எதிர்பார்த்திருந்தால் அதற்கான சாதகமான தகவல் கிடைக்கும்.

வியாழன் - இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம். எனவே புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். பேச்சுவார்த்தையை தள்ளி வைக்கவேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வெள்ளி - வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து உங்களுக்கான பங்கு கிடைக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் இன்று கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

சனி - ஆதாயம் தரும் பயணம் ஒன்று ஏற்படும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்துவிடுவீர்கள். சுப விசேஷ செலவுகள் ஏற்படும்.

ஞாயிறு - முக்கியமான பேச்சுவார்த்தைகள் இன்று முடிவடையும். தொழில்ரீதியாக எதிர்பார்த்த ஒரு உதவி கிடைக்கும். அது தொடர்பான ஒரு முக்கிய நபரை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
தட்சிணாமூர்த்தி குருபகவானுக்கு கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து தானம் தாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தடைகள் அகலும். முன்னேற்றம் ஏற்படும்.

*************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்