- ஜோதிடர் ஜெயம் சரவணன்
அனுஷம் -
சரியாக திட்டமிட்டு எந்த வேலையைச் செய்தாலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்ப்புகள் அதிகமாக இருந்தாலும், தொந்தரவாக இருக்காது. வழக்கு ஏதேனும் இருந்தால் முடிந்தவரை தள்ளிப் போடுங்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமாக மட்டுமே பிரச்சினை தீரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் கல்வியில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் தேவையில்லாத அழுத்தங்கள் இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியது வரும். பொறுமையாக அனைத்தையும் கடந்து செல்லுங்கள். வேறு வேலைக்கு மாற முயற்சி ஏதேனும் இருந்தால் இந்த வாரம் அதை செயல்படுத்துங்கள். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசு ஊழியர்கள் உங்கள் வேலையை சரிவர செய்து வாருங்கள். தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் வளர்ச்சிப் பாதையில் செல்லும். தொழிலை விரிவுபடுத்த எதிர்பார்த்த கடன் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அரசு ரீதியாகவே வாய்ப்புகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் அளவான முதலீடுகளை செய்யுங்கள்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொருட்களின் தரத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
பெண்களுக்கு -
தேவையில்லாத வீண் சர்ச்சைகளில் சிக்க வேண்டாம். யாரிடம் பேசினாலும் கவனமாகப் பேசுங்கள். உங்கள் வார்த்தைகளில் இருந்தே உங்களைப் பற்றி குறை சொல்வார்கள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பணத்தேவைக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் அசாத்திய முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய கல்விக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர் ஒருவரால் ஒரு நபர் அறிமுகமாவார். அவரால் ஆதாயம் ஏற்படும்.
பொதுப்பலன் -
சிக்கனமாக இருந்தாலே செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். யாருக்கும் வாக்குறுதி கொடுப்பதோ அல்லது ஜாமீன் கொடுப்பதோ கூடவே கூடாது. காசோலைகளை கொடுக்கும் பொழுது அதிக கவனத்தோடு கொடுக்கவேண்டும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் நேரடியாகவே சென்று பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரும். பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு கழுத்து வலி, தொண்டை வலி, நெஞ்சில் சளி கட்டுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
இந்த வாரம் -
திங்கள் -பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாகும். தொழில் தொடர்பான உதவி கிடைக்கும். அதிக நன்மை ஏற்படக்கூடிய நாள்.
செவ்வாய் - அலைச்சல் அதிகமாக ஏற்படும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போகும். தேவையில்லாத வீண் செலவுகள் ஏற்படும்.
புதன் - சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக ஏற்படும். வியாபார சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். அதில் ஆதாயம் ஏற்படும் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
வியாழன் - எதிர்பார்த்த நண்பரின் உதவி இன்று கிடைக்காமல் போகலாம். அலுவலகத்தில் மற்றொருவர் வேலையை நீங்கள் செய்ய வேண்டியது வரும்.
வெள்ளி - நெருக்கடி தந்த கடன் சம்பந்தமான பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சனி - தொலைதூரப் பயணங்கள் எதுவும் வேண்டாம். பேச்சு வார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். முக்கிய சந்திப்புகள் ஏதேனும் இருந்தாலும் அதை நாளைக்கு தள்ளி வையுங்கள்.
ஞாயிறு - நேற்று ஒத்திவைத்த வேலைகள் அனைத்தையும் இன்று மேற்கொள்ளலாம். அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
துர்கை அம்மனுக்கு செவ்வரளி மலர் சூட்டி, விளக்கேற்றி வழிபடுங்கள். மாலை நேரத்தில் வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். நெருக்கடிகள் அகலும். தேவைகள் பூர்த்தியாகும்.
********************************************************************
கேட்டை -
செயல்களில் அதிக தீவிரத்தை காட்டி வெற்றிபெற விரும்புவீர்கள். ஒரு சில தடைகள் ஏற்பட்டாலும், அந்தத் தடைகளை மீறி ஜெயித்துக் காட்டுவீர்கள். எதிர்ப்புகளும் எதிரிகளும் அதிகமாகிக் கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அவர்களால் எந்த பாதிப்பும் உங்களுக்கு வராது, இன்னும் சொல்லப்போனால் உங்களை எதிர்ப்பதன் மூலம் அவர்கள் தோற்றுப் போவார்கள். முடிந்த வரை யாருக்கும் ஜாமீன் தரக்கூடாது. அதேபோல உங்கள் சேமிப்பில் இருந்து கடன் கொடுக்கவும் கூடாது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
உத்தியோகம் -
பணியில் தேவையில்லாத அழுத்தங்கள் ஏற்படும். உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்யச் சொல்லி நிர்ப்பந்திப்பார்கள். உயரதிகாரிகள் தேவையில்லாமல் உங்கள் மீது கோபம் கொள்வார்கள். இவை அனைத்தையும் பொறுமையாகக் கையாண்டால் எந்த பிரச்சினைகளும் வராது. அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை மட்டும் செய்து வாருங்கள். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு கையாளும் பொருட்களிலும் வாடிக்கையாளர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் -
தொழில் ரீதியாக போட்டியாளர்களை சமாளிக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியது வரும்.வழக்குகள் ஏதேனும் இருந்தால் தள்ளிவைக்க வேண்டும். தொழிலுக்கான முதலீடுகள் எதிர்பார்த்து இருந்தால், அது தொடர்பான நல்ல தகவல் இந்த வாரம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது.பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் சமமான வளர்ச்சியைக் காண்பார்கள்.
பெண்களுக்கு -
உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.குடும்பத்தினரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் பேசும்போது கவனமாக பேச வேண்டும். வீண் சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம். தம்பதிகளுக்குள் தேவையில்லாத சந்தேகங்களை வளர்த்துக் கொள்வதோ சண்டை சச்சரவுகள் ஏற்படாமலோ பார்த்துக் கொள்ளுங்கள்.
மாணவர்களுக்கு -
கல்விக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அயல்நாடு சென்று கல்வி கற்கும் முயற்சி வெற்றி தரும். தீவிர முயற்சி எடுத்தால் வெளிநாடு செல்லலாம்.
கலைஞர்களுக்கு -
ஒரு சில வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இன்னும் இரண்டு வாரங்கள் பொறுத்திருங்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி தள்ளிப்போகும்.
பொதுப்பலன் -
வீட்டிலும் அலுவலகத்திலும் பொது இடங்களிலும் பேசும்போது கவனமாக வார்த்தைகளைக் கையாள வேண்டும். சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ளவேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதும், உத்தரவாதம் கொடுப்பதும் கூடாது. ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனாலும் கண் மற்றும் காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. கவனமாக இருக்க வேண்டும்.
இந்த வாரம் -
திங்கள் - எடுத்துக் கொண்ட ஒரு சில முயற்சிகளில் தீவிரமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஒரு சில உதவிகள் கிடைக்கும்.
செவ்வாய் – எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபாரப் பேச்சுக்கள் முடிவுக்கு வரும்.
புதன் - சமுக வலைதள பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் அலுவலக கோப்புகளில் கையெழுத்திடும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
வியாழன் - சொத்து விற்பது, வாங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் ரீதியான உதவிகள் கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதிர்பார்த்தது போலவே கிடைக்கும்.
வெள்ளி - ஆலயவழிபாடு உண்டாகும். குழந்தைகள் எதிர்காலம் கருதி ஒரு சில விஷயங்களை மேற்கொள்வீர்கள். தேவையில்லாத அலைச்சல் ஒன்று ஏற்படும்.
சனி - நெருக்கடி தந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். கால அவகாசம் கேட்டு பெறுவீர்கள். வங்கியிலிருந்து கடன் சம்பந்தமாக நல்ல தகவல் கிடைக்கும்.
ஞாயிறு - பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வியாபார விஷயங்கள் ஏதும் இருந்தால் ஒத்தி வையுங்கள். செலவுகள் மிக அதிக அளவில் இருக்கும். சிக்கனமாக இருக்கவேண்டும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
அனுமன் வழிபாடு மன ஆறுதலைத் தரும். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள். அனுமன் சாலீஸா பாராயணம் செய்யுங்கள். எதிர்ப்புகள் குறையும், நன்மைகள் அதிகமாகும்.
*************************************************************
மூலம்-
ஒரு சில நன்மைகளும் தேவையில்லாத சில பிரச்சினைகளும் ஏற்படும். பொறுமை காப்பதும், நிதானமாக இருப்பதும் நன்மை தரும். செலவுகள் அதிகமாக இருக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். ஒரு சில ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியது வரும். இவற்றிலிருந்தெல்லாம் ஏதாவது ஒரு வகையில் காப்பாற்றப்படுவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழி சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும்.
உத்தியோகம் -
வேலையில் அதிக அழுத்தங்கள் இருக்கும். ஆனாலும் அதையெல்லாம் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் தள்ளிப்போகலாம். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றியாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். உங்களுடைய தனித்திறமையால் இவை அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.அரசு ஊழியர்களுக்கு வேலைச் சுமை அதிகமாக இருக்கும். பணி நேரம் முடிந்தும் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த ஒரு சில நன்மைகள் நடக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சினைகள் ஏதும் இருக்காது. இன்னும் சொல்லப் போனால் லாபம் அதிகமாக இருக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு முதலீடுகள் அளவாக செய்ய வேண்டும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அதிக அக்கறை, கவனம் செலுத்த வேண்டும். கடன் கொடுப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வேலையில் அழுத்தம் அதிகரிக்கும். கட்டாயத்தின் பேரில் ஒரு சில வேலைகளைச் செய்ய வேண்டியது வரும்.
பெண்களுக்கு -
குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் இருக்கும். உங்கள் சமயோசித புத்தியால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். பணத்தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சென்றால் பெரிய பாதிப்புகள் எதுவும் வராது. விவாகரத்து கேட்டு வழக்கு போட்டவர்கள் கூட இப்பொழுது அந்த வழக்கை வாபஸ் பெற்று ஒன்று சேர்ந்து வாழ வழிவகை கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். அல்லது புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும். அதற்கான பயிற்சி வகுப்புகளில் சேர்வீர்கள். நீண்டநாளாக தேடிவந்த ஒரு புத்தகம் உங்களுக்குக் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
பொறுமையும் நிதானமும் அதிகம் வேண்டும். பதட்டப்படத் தேவையில்லை. இயல்பாக இருங்கள். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும்.
பொதுப்பலன் -
எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாகக் கையாண்டால் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையிலும் அதிக கவனம் இருக்க வேண்டும். பயணங்களில் எச்சரிக்கை உணர்வோடு இருங்கள். வாகனங்களை இயக்கும் பொழுது சாலை விதிகளை சரியாக பின்பற்றுங்கள். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. ஆனாலும் அஜீரணக் கோளாறு, வாய்வுத் தொல்லை முதலானவை ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள் - வேண்டிய உதவிகள் கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.தொழிலுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குழந்தையின் மருத்துவச் செலவு குறையும்.
செவ்வாய் - வேலை சம்பந்தமாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். அது அயல்நாடு செல்வதாகவும் இருக்கலாம் அல்லது வேறு நிறுவனத்துக்கு மாறுவதாகவும் இருக்கலாம்.
புதன் - எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடையும்.
வியாழன் - தேவையற்ற பயணம் ஒன்று ஏற்படும். ஆதாயம் ஏதும் இருக்காது. செலவுகள் அதிகமாக ஏற்படும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.
வெள்ளி -நிலம் சம்பந்தமான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
சனி- குலதெய்வ வழிபாடு செய்ய முற்படுவீர்கள், குறைந்தபட்சம் அருகிலிருக்கும் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். ஒருவித பதட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
ஞாயிறு - வியாபார விஷயமான ஆதாயங்கள் ஏற்படும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும். நண்பர்களிடம் ஏற்பட்ட மன வருத்தங்களை பேசித் தீர்ப்பீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ள ஆலயங்களுக்குச் சென்று வாருங்கள். அங்கே அமைதியாக தியானம் செயுங்கள், மன அமைதி கிடைக்கும், உங்கள் எண்ணம் நிறைவேறும்.
*****************************************************
பூராடம் -
எதிலும் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். நிதானமாக சிந்தித்து அல்லது உங்களுக்கு வேண்டப்பட்ட நபரிடம் ஆலோசித்து முடிவெடுங்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். அதிலும் வீண் விரயங்கள் அதிகமாக இருக்கும். பாகப்பிரிவினைகள் சாதகமாக இருக்கும். தந்தையின் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். பிள்ளைகளின் கல்விக்காகவும் அல்லது மருத்துவத்திற்காகவும் செலவு செய்ய வேண்டியது வரும்.
உத்தியோகம் -
எதிர்பார்த்த பதவி உயர்வு தள்ளிப் போகும். இந்த வாரம் கிடைப்பதாக இருந்த சலுகைகள் கூட தள்ளிப் போகலாம். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி முழு வெற்றியைத் தரும். சக ஊழியர்களின் ஆதரவு குறையும். அரசு ஊழியர்களுக்குத் தேவையில்லாத வேலை அழுத்தம் ஏற்படும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். உற்பத்தியான பொருட்கள் தேக்கமடையும். முதலீடு தொடர்பான உதவிகள் தள்ளிப்போகும். தொழில் சார்ந்த செலவுகள் அதிகமாக இருக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் பொருட்களைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் முதலீடுகள் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் ஓரளவுக்கு தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள்.சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வேலை அதிகரிக்கும், வேலைக்கு உண்டான வருமானம் குறையும்.
பெண்களுக்கு -
குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர், உறவினர்களிடம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் பேச வேண்டும். தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்க வேண்டாம். சமூகவலைதள பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் சென்றால், பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.
மாணவர்களுக்கு -
கல்வியில் சில தடைகள் ஏற்படும். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. தீவிரமாக முயன்றால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
ஒரு சில உதவிகள் கிடைக்கும். ஆனாலும் தட்டுப்பாடு தொடரும். பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டே போகும்.
பொதுப்பலன் -
பொறுமையாக இருப்பதும், எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாகக் கையாளுவதும் நன்மையைத் தரும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கடுமையாக உழைத்தால் எடுத்துக்கொண்ட வேலை வெற்றிகரமாக முடியும். உடல் நலனில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதிலும் குறிப்பாக உணவு விஷயத்தில் அதிக கவனம் வேண்டும். பின் தலையில் வலி, முதுகு தண்டுவடத்தில் வலி போன்றவை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சரியான மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
இந்த வாரம் -
திங்கள் - தேவையான சில உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.வியாபாரம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும்.
செவ்வாய் - வெளியூர் பயணம் ஒன்று ஏற்படும். அல்லது வெளிநாட்டில் இருந்து ஒரு நல்ல தகவல் கிடைக்கும். வியாபார விஷயங்கள் முடிவுக்கு வரும். லாபம் தரும் ஒப்பந்தம் ஒன்று ஏற்படும்.
புதன் - வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகமாகும். அதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். ஒரு முக்கிய நபரை சந்தித்து உதவி கேட்பீர்கள்.
வியாழன் - எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து உங்களுக்கான பங்கு கிடைக்கும். தொழில் தொடர்பான ஒரு உதவி கிடைக்கும்.
வெள்ளி - அலைச்சல் அதிகமாக இருக்கும். பயணங்களில் கவனம் தேவை. சாலை விதிகளை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் விரயம் ஏற்படும் நாள்.
சனி - நெருக்கடி தந்த ஒரு கடன் முடிவுக்கு வரும். அந்தக் கடனை அடைப்பதற்கான உதவிகள் கிடைக்கும். சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
ஞாயிறு - குடும்பத்தோடு ஆலய தரிசனம் செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.
வணங்கவேண்டிய தெய்வம் -
கனகதாரா ஸ்தோத்திரம் படியுங்கள். அல்லது ஒலி வடிவில் கேளுங்கள். பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். மன நிம்மதி கிடைக்கும்.
**************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago